3 வேளாண் சட்டங்கள் வாபஸ்: அறிவித்தார் மோடி; விவசாயிகள் போராட்டத்தை கைவிடவும் வேண்டுகோள்

உ .பி.,யின் மகோபா பகுதியில் நீர்ப்பாசனம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார். முன்னதாக அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பேசியதாவது:
அனைவருக்கும் குருநானக் ஜெயந்தி வாழ்த்துக்கள் ! நாட்டு நலனுக்காக வேளாண் துறையில் பல்வேறு சீர்திருத்தம் கொண்டு வந்தோம். விவசாயிகளின் நலனுக்காக புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளோம். சிறு விவசாயிகளை முன்னேற்றவே அவர்களுக்கு அதிகாரம் அளிக்கவே இந்த சட்டங்கள் கொண்டு வந்துள்ளோம். அனைத்து விவசாயிகள் சங்கத்தினருடன் ஆலோசித்த பிறகே இந்த சட்டம் கொண்டு வந்தோம்.
ஆனால் சட்டம் தொடர்பாக தவறான தகவல் பரப்பி விடப்பட்டது. இது குறித்து புரிய வைக்க பல முயற்சிகள் எடுத்தோம். இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. ஆனாலும் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர். மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை திரும் பெறுகிறோம். வரவிருக்கும் பார்லி., கூட்டத்தொடரில் இந்த சட்ட திரும்ப பெறும் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் போராட்டத்தை கைவிடுங்கள்.

போராடும் விவசாயிகள் தங்களின் போராட்டத்தை கைவிட வேண்டும். இவர்கள் தங்களின் இல்லத்திற்கு திரும்ப வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
வரவேற்பு
இந்த அறிவிப்பை பஞ்சாப் விவசாய அமைப்பினர் வரவேற்றுள்ளனர். முன்னாள் பஞ்சாப் முதல்வர் கேப்டனர் அமரீந்தர்சிங் , மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து (320)
பாவம் சங்க்ஸ் ஆற்றாமையில் அவமானத்தில் செய்வதறியாது காங்கிரஸ் காலை பிரண்ட ஆரம்பித்து விட்டார்கள்
இந்த சட்டத்தை ஆதரித்து தீர்மானம் போட்ட அதிமுக அடிமைகள் இப்போது என்ன சொல்வார்கள்,
துரோகிகள், 750 விவசாயிகளின் உயிரை குடித்த பின்னர் தங்கள் தேர்தல் பசியை தீர்த்து கொள்ள இப்ப நாடகம் ஆடுகிறார்கள் கோயபல்ஸ் கொடுங்கோலர்கள் இனி நல்லவர்கள் வேசம் கட்ட தயாராகிறார்கள், விவசாயிகளை பயங்கரவாதிகளாக சொன்ன அதே வாய் இன்று பல்டி அடித்து தேனை தடவ பார்க்கிறது, ஒரு மாநில தேர்தலுக்கு போப் காலை பிடித்தார்கள், இன்னொரு எல்லை மாநில தேர்தலுக்காக ராணுவத்தோடு நெறுக்கம், இப்போது மற்ற 3 மாநிலத்தில் வெற்றிக்காக விவசாயிகள் காலில் விழுந்து நடிக்கிறார்கள், சந்தர்ப்பவாதி பிரதமருக்கு அசிங்கம் என்பது சகஜம் ஆகி விட்டது தேர்தலுக்காக நிறம் மாறும் இவர்களின் சூழ்ச்சி இனி தோல்வியில் தான் முடியும்.
சரி சரி இன்னும் என்ன வேணும்...எல்லாரும் கிளம்பி போங்க...பஞ்சாயத்து முடிஞ்சது...இனிமே ஓசி சோறு கிடைக்காது.........கனடா , பாகிஸ்தான், இங்கிலாந்து காரனுக துட்டு அனுப்ப மாட்டான் க. விவசயினு சொல்லி கிட்டு வெட்டியா ஒரு வருடமா ஓசிச்சோறு சாப்பிட்டது போதும்..... கெளம்புங்க கெளம்புங்க...
வேளாண் சட்டங்கள் வாபஸ் | அடுத்தது நீட் வாழ்க விவசாயம்..வாழ்க வேளாண்மை தொடர்ந்து போராடும் விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி வாழ்த்துக்கள், உயிர்த் தியாகம் செய்த விவசாயிகளை தியாகிகளாக அறிவிக்க வேண்டும்.