Load Image
dinamalar telegram
Advertisement

வலிமை சிமென்ட் விலை குறையுமா? கட்டுமான துறையினர் கோரிக்கை

Tamil News
ADVERTISEMENT
சென்னை : தமிழக அரசு புதிதாக அறிமுகப்படுத்தி உள்ள 'வலிமை' சிமென்ட் விலையை, பொது மக்கள் வாங்கும் நிலைக்கு குறைக்க வேண்டும் என, கட்டுமான துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு சிமென்ட்ஸ் சார்பில், 'வலிமை' என்ற புதிய ரக சிமென்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான விலை போக்குவரத்து செலவுகளுடன் சேர்த்து, மூட்டை 380 ரூபாய் அளவுக்கு வருகிறது. இது, கட்டுமான துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Latest Tamil Newsஇது குறித்து, இந்திய கட்டுனர் வல்லுனர் சங்க மாநில செயலர் எஸ். ராமபிரபு கூறியதாவது: தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள், தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப, சிமென்ட் விலையை வெகுவாக உயர்த்தி உள்ளன. இத்தகைய சூழலில், அரசு நிறுவனம் சார்பில் வலிமை என்ற புதிய ரக சிமென்ட் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இதன் விலை, தனியார் தயாரிப்புகளுக்கு இணையாக, 380 ரூபாய் வரை இருப்பதால், பொது மக்கள் எளிதில் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. ஏற்கனவே, ஒரு மூட்டை 230 ரூபாய்க்கு 'அம்மா' சிமென்ட் விற்பனை செய்யப்படும் நிலையில், வலிமை சிமென்ட் விலை, 350 ரூபாய்க்குள் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.


வாசகர் கருத்து (20)

  • vns - Delhi,யூ.எஸ்.ஏ

    Please don't repeat the same comment

  • Ramesh - chennai,இந்தியா

    நம் மக்களுக்கு மக்களாட்சி என்பதே புரியவில்லை.நம் பணத்தை எடுத்து நமக்கு இலவசம், விலை இல்லாத,பிச்சை,என்று தந்து முழு வேலையாய் இருக்கும் அரசியல் தலைவர்களும்,அவர்கள் கீழே வருன் கட்சிக் கொடி,தலைவர் படம்,பேன்சி எண் உள்ள வண்டிகள் வைத்து அரசு அதிகாரிகளையும்,நம்மிடம் பிச்சை(லஞ்சம்) வாங்க வைத்து நம்மை ஏமாற்றுகிறார்கள். மக்களே நல்ல வேட்பாளர்கள் தெரியவில்லையா.அல்லதுகோபம்,தெளிவு எதுவும் வரவில்லையா. நமக்காக நம்மில் சர்யானவர்களை அமர்த்துவோம்

  • Murugesan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    பாதி அறிவாலய ஆட்களுக்கு இத்தனை பணத்தை கொள்ளையடித்து போகும் போது கையில என்ன

  • raja - Cotonou,பெனின்

    திருட்டு திராவிட தெலுங்கன் குடும்பம் கொள்ளை அடித்து சுக போகமா வாழனுமே ...

  • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

    சிமெண்ட் மூட்டை விலை தற்போதைய சூழ்நிலையில் 350 - 400 ஓகேதான்... இதற்கும் கீழே சென்றால் சமாளிப்பது கடினம்... ஒரு மூட்டை உற்பத்தி விலை கிட்டத்தட்ட இருநூறு ரூபாய்.. போக்குவரத்து மற்றும் இதர கைமாற்று செலவுகளுடன் 350 ரூபாய் ஞாயமான விலை.. வலிமை சிமென்டின் விலையை வைத்து மற்ற கூட்டு களவாணிகள் காதை இல்லையில்லை கழுத்தை பிடித்து விலையை குறைக்க சொல்லணும்... ஆனால் இங்கே அனைத்து அரசியல்வியாதிகளும் கமிஷன் அடிப்பதால் (பெட்ரோல் விலையை மாதிரி) இதுக்கும் பொங்க மாட்டானுவ...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement