உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:
ரா.முத்துசாமி, கோவையிலிருந்து எழுதுகிறார்:
ஜெய்பீம் பட வாயிலாக இரு சமூகத்துக்கு இடையே பகையுணர்வு துாண்டப்பட்டு இருப்பதாக, தயாரிப்பாளரும், நடிகருமான சூர்யாவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து, அந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
அப்படிப்பட்ட திருடனை, மிகச் சிறந்த மனிதராக காட்டி படமெடுத்துள்ளனர் என்ற விமர்சனங்களும் முன் வைக்கப்படுகின்றன.இப்படத்துக்கு 10 கோடி ரூபாய் செலவிட்ட சூர்யா, 70 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளாராம்.இப்படம், 'ஓடிடி'யில் வெளியிடப்பட்டது. இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், தன் அடுத்த படத்தை, 'சன் பிக்சர்ஸ்' நிறுவனத்திற்கு கொடுத்துள்ளார், சூர்யா. இதிலிருந்தே அவரின் கெட்டிக்காரத்தனம் தெரிகிறது. படத்தை, 'சன் பிக்சர்ஸ்' வழங்கினால், எந்த தியேட்டர் உரிமையாளர்களும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என, விபரமாக யோசித்து முடிவெடுத்து உள்ளார்.சூர்யா...
நீங்கள் எவ்வளவு கோடி ரூபாய் சம்பாதிக்கின்றீர்கள் என்பது, ஒரு பிரச்னையே இல்லை; நீங்கள் சம்பாதிக்கக் கூடாதென நாங்கள் சொல்லவும் இல்லை. இன்னும் பல 100 கோடி ரூபாய் நீங்கள் சம்பாதிக்க வேண்டும். ஏழைகளுக்கு நிறைய உதவ வேண்டும். தமிழகத்தில் 100 கோடி ரூபாய் சம்பாதித்த எந்த நடிகரும் செய்யாத உதவிகளை செய்து, மக்களிடம் நல்ல பெயர் பெற வேண்டும்.உங்களுக்கு, அரசியலுக்கு வரும் ஆசையிருக்கலாம்.

ஆனால், ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் குருவாக நினைக்கும் நடிகர் கமல், அரசியலில் பிரகாசிக்க முடியவில்லை.மக்கள், அவரை நடிகராகத் தான் பார்க்கின்றனரே தவிர, அரசியல் தலைவராக ஏற்கவில்லை.அதனால், நீங்கள் நடிகராக இருந்தே உதவிகளை செய்யுங்கள். நம் பின்னால், ஜாதி இருக்கு; நமக்கு ஆதரவு தருவர் என நம்ப வேண்டாம்.தேர்தலில், அந்தந்த தொகுதியில் எந்த ஜாதியைச் சேர்ந்தோர் அதிகம் வசிக்கின்றனரோ, அதே ஜாதியை சேர்ந்தவரையே தங்கள் வேட்பாளராக, அரசியல் கட்சிகள் நிறுத்துகின்றன.
அதனால், ஜாதி பின்புலம் உங்களுக்கு உதவாது.உங்களின் அரசியல் ஆர்வத்துக்கு, நிச்சயம் மக்கள் ஆதரவு கிடைக்காது; அவர்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல. அரசியலுக்கு அப்பாற்பட்ட நடிகராகவே உங்களை பார்க்கின்றனர்; அவ்வாறே நீங்களும் இருங்கள்.உங்களின் தந்தை சிவக்குமார் எவ்வாறு நல்ல பெயர் சம்பாதித்தாரோ, அதே வழியில் நீங்களும் பயணியுங்கள்; அதுவே, உங்களுக்கு நல்லது!
வாசகர் கருத்து (144)
ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்
ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று ஒரு பழமொழி இருக்கு .சரியாதான் சொன்னார்கள்
உண்மை கதை என்று சொல்லி விட்டு அதில் வரும் சில பெயர்களை மட்டும் மாற்றுவது என்பது எப்படி நியாயம் ஆகும். இந்த உண்மை வழக்கு விளுப்புரம் விரைவு நீதி மன்றத்தில் (fast track court) விசாரணை நடைபெற்று சப் இன்ஸ்பெக்டர் அந்தோணிசாமி அவர்களுக்கு தண்டனை அளித்தது. மறு விசாரணை கோரி நடைபெற்ற வழக்கு மட்டும் தான் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கில் உண்மைக்காக வாதடிய வழக்கறிஞர் திரு சந்துரு , ஶ்ரீரங்கம் வைணவ பிராமண வகுப்பை சேர்ந்தவர். வழக்கில் நேர்மையான தீர்ப்பை வழங்கியது விரைவு நீதி மன்ற நீதிபதி திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பிராமண வகுப்பை சேர்ந்தவர். இதை எல்லாம் சூரியா மூடி மறைத்து விட்டு, அந்த வழக்கில் உண்மை வெளிவர உதவிய வன்னியர் சமூகத்தை மிகவும் இழிவு படுத்தி காட்டுவது வேண்டும் என்று செய்ததாக தான் தெரிகிறது. இது மிகவும் கண்டனததிகிற்கு உரியது.
தந்தை ஒரு கோபக்காரர் அவரை விட நல்லவராக தானே செயல்படுகிறார் எது எப்படியோ படத்தை பார்க்க விருப்பதவர்களை கூட ஊடகங்கள் பார்க்க வைத்து விடுவார்கள் போல தெரிகிறது...
தந்தைக்கே இப்ப பார்வைக்கோளாறு யாரேனும் திசை காட்டவேண்டிய நிலை இவர்கள் இந்திய சுதந்திர போராட்ட படம் எடுத்தால் அதில் மஹாத்மா காந்தி பெயரை அந்தோணி டாஸ் என்று சொல்லுவாரா ?