சென்னை :'மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள், வடிகால்களை சீரமைக்க, 300 கோடி ரூபாய்; விவசாயிகளுக்கு பயிர் சேத இழப்பீடாக, 2.45 ஏக்கர் அதாவது 1 ஹெக்டேருக்கு, 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்' என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவ மழையால், சென்னை, அதை சுற்றியுள்ள மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரியில், சாலைகள் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் அதிகம் பாதிக்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று முதல்வர் ஆய்வு செய்தார். நிவாரண பணிகளை முடுக்கி விட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்.
டெல்டா மாவட்டங்களில் கன மழையால் ஏற்பட்டுள்ள பயிர் சேதங்கள் குறித்து ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை சமர்பிக்க, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தலைமையில், அமைச்சர்கள் குழுவை முதல்வர் நியமித்தார். இக்குழுவில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ரகுபதி, பெரியகருப்பன், சக்கரபாணி, மகேஷ், மெய்யநாதன் ஆகியோர் இடம் பெற்றனர்.
இக்குழுவினர், 12ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஆய்வு செய்தனர். நீரில் மூழ்கிய பயிர்களை பார்வையிட்டதுடன், விவசாயிகளின் கருத்துக்களையும் கேட்டறிந்தனர்.இந்த குழுவினர், நேற்று தலைமைச் செயலகத்தில், பயிர் சேதங்கள் குறித்த அறிக்கையை முதல்வரிடம் வழங்கினர். இது தொடர்பாக முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், அமைச்சர்கள், தலைமைச் செயலர் மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள்:
*அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை - கார் - சொர்ணவாரி பயிர்கள் முழுமையாக சேதமடைந்த இனங்களில், விவசாயிகளுக்கு இழப்பீடாக, 1 ஹெக்டேர், அதாவது, 2.45 ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்
* நடப்பு சம்பா பருவத்தில் நடவு செய்து, நீரில் மூழ்கி சேதமடைந்த பயிர்களை, மறு சாகுபடி செய்ய வசதியாக, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, 2.45 ஏக்கருக்கு 6,038 ரூபாய் மதிப்பில் இடுபொருட்கள் வழங்கப்படும்.
அதாவது, 1,485 ரூபாய் மதிப்புள்ள குறுகிய கால விதை நெல் 45 கிலோ; 1,235 ரூபாய் மதிப்புள்ள 25 கிலோ நுண்ணுாட்ட உரம்; 354 ரூபாய் மதிப்புள்ள, 60 கிலோ யூரியா; 2,964 ரூபாய் மதிப்புள்ள 125 கிலோ டி.ஏ.பி., உரம் ஆகியவை வழங்கப்படும்.
மழை வெள்ளத்தால், மாநிலம் முழுதும் பாதிப்படைந்த சாலைகள், வடிகால்கள் மற்றும் இதர உள்கட்டமைப்பு வசதிகளை சரி செய்ய, 300 கோடி ரூபாய் வழங்கப்படும்.
இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.

யாருடைய கட்டமைப்பை சீரமைக்க??