dinamalar telegram
Advertisement

கல்லுாரிகளில் நேரடி தேர்வு கட்டாயம் உயர் கல்வித்துறை செயலர் உத்தரவு

Share
Tamil News

சென்னை : தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பள்ளி, கல்லுாரிகளில் நேரடி வகுப்புகள்துவக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, கல்லுாரி மாணவர்களுக்கான டிசம்பர் மாத தேர்வுகளை, மீண்டும் நேரடி முறையில் நடத்த அரசு திட்டமிட்டது.
முதற்கட்டமாக, சென்னை பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில், டிசம்பரில்நேரடி தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டது. இன்ஜினியரிங் கல்லுாரிகளிலும் நேரடி தேர்வு முறை அமலாகும் என்று, அண்ணா பல்கலை அறிவித்தது. மற்ற பல்கலைகளும் ஆன்லைன் தேர்வை ரத்து செய்து, நேரடி தேர்வு முறையை அறிவித்துள்ளன.இதற்கு மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஆன்லைன் வழியில், வீட்டில் இருந்தே தேர்வு எழுதும் முறையை தொடர வேண்டும் என பல்வேறு மாணவர் குழுக்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.
மதுரை உள்ளிட்ட சில இடங்களில், இந்த போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.

இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தமிழக உயர் கல்வித்துறை முதன்மை செயலர் கார்த்திகேயன், அனைத்து கல்லுாரிகள், பல்கலைகள், பாலிடெக்னிக்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்:தமிழக உயர்கல்வி துறையின் கீழ் இயங்கும் அனைத்து கல்லுாரிகளும், பல்கலைகளும், அனைத்து தேர்வுகளையும் நேரடியான, 'ஆப்லைன்' முறையிலேயே நடத்த வேண்டும். தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும், அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, நேரடியான தேர்வு முறையை அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.மாணவர்களின் கல்வி திறனை வளர்க்கவும், தொழில் நிறுவன பணிகளில் சேரும் வகையில், அவர்களை தயார்படுத்தவும், நேரடி தேர்வு முறையே சிறந்தது. எனவே, மீண்டும் நேரடி தேர்வு முறை அமல்படுத்தப்பட்டு உள்ளதாக, உயர் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Share
Advertisement
 
Home வாசகர் கருத்து (2 + )

  • M S RAGHUNATHAN - chennai,இந்தியா

    கல்விக் கடன் தான் ரத்து செய்யவில்லை. தேர்வுகளை ரத்து செய்து " சொல்லாததை செய்தோம்" என்று உதய நிதி அவர்கள் தலைவருக்கு வாழ்த்து கூற வைக்கலாம். அது சரி சேப்பாக்கம் செகுவாராவை களத்தில் காண முடியவில்லை. இன்ப நிதியின் கால் பந்து விளையாட்டை காண ஸ்பெயின் சென்று விட்டாரா ? யாராவது உடன் பிறப்புகள் சொல்லவும்.

  • Lion Drsekar - Chennai ,இந்தியா

    இதற்க்கு இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து பேருந்து கண்ணாடிகளை உடைத்த சம்பவம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது, பாராட்டு யாருக்கு என்று சொல்ல, வந்தே மாதரம்

Home (2)