Load Image
dinamalar telegram
Advertisement

சென்னை ‛உஷ்ஷ்ஷ்! : நடிகர் சூர்யாவுக்கு எதிராக அணி திரளும் அமைப்புகள்!

நடிகர் சூர்யாவுக்கு எதிராக அணி திரளும் அமைப்புகள்!Latest Tamil Newsஜெய் பீம் திரைப்படம், சர்ச்சைகளில் சிக்கி இருப்பது தெரிந்த விஷயம். வன்னியர் சமுதாயத்தை அப்படத்தில் தவறாக சித்தரித்துள்ளதாக, அச்சமுதாய அமைப்புகள் போர்க்கொடி துாக்கி உள்ளன.


அப்படம் தொடர்பாக, நடிகர் சூர்யாவுக்கு, ஒன்பது கேள்விகளை முன்வைத்து, பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி, நீண்ட கடிதம் எழுதினார். 'கொலை செய்த போலீஸ் அதிகாரி அந்தோணிசாமி பெயரை ஏன் சினிமாவில் வைக்கவில்லை என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்' என, சூர்யாவுக்கு கெடு விதித்தார்.


சூர்யாவும், அன்புமணிக்கு எழுதிய பதில் கடிதத்தில், 'பெயர் அரசியலுக்குள் சுருக்க வேண்டாம்' என, அன்புமணியிடம் கேட்டுக்கொண்டார். இருவரின் அறிக்கை மோதல் தீவிரமாகி உள்ளது. 'இருவரிடம் சமரச பேச்சு நடத்த முன் வரவேண்டும்' என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


ஆனால், சீமான் ஆலோசனையை சூர்யா பொருட்படுத்தவில்லை. இதையடுத்து, வன்னியர் சமுதாயத்தில் பிரிந்து கிடந்த அனைத்து அமைப்புகளும், அன்புமணிக்கு ஆதரவு அளித்துள்ளன; சூர்யாவுக்கு எதிராக பெரிய போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளன!

தலைமை தேர்தல் அதிகாரி இப்படி இருந்தால் எப்படி?Latest Tamil News
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, இம்மாதம் 1ல் துவங்கி, 30 வரை நடக்கிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்றம் மேற்கொள்ள, நான்கு நாட்கள் சிறப்பு முகாம் நடத்த, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.


அதன்படி முதல் இரண்டு நாட்கள் முகாம், 13, 14ல் நடந்தது. சென்னை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் கன மழை காரணமாக, குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. அதை அகற்றும் பணியில், அனைத்து துறை பணியாளர்களும் ஈடுபட்டனர்.


எனவே, வாக்காளர் சிறப்பு முகாமை ஒத்தி வைக்கும்படி, சென்னை மாநகராட்சி சார்பில், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதி உள்ளனர்; அதற்கு பதில் இல்லை. கடந்த 12ல் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலனில்லை. அதைத் தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகமே, முகாம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்தது.


தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி எப்போதும் தொடர்புக்கு அப்பால் இருந்தால், எப்படி வாக்காளர் பட்டியல் தயாரிப்பு முறையாக நடக்கும் என, மாநகராட்சி அதிகாரிகள் கேள்வி எழுப்புகின்றனர்!

பா.ஜ.,வுக்கு அ.தி.மு.க., தொகுதிக்கு ஒரு வார்டு!Latest Tamil News
தமிழகத்தில், விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளை, அரசியல் கட்சிகளும் துவக்கி உள்ளன.


அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள பா.ஜ., தரப்பில், 'சென்னை மாநகராட்சியில் எத்தனை வார்டுகள் ஒதுக்குவீர்கள்' என, அ.தி.மு.க., தரப்பிடம் கேட்டுள்ளனர். அவர்கள், சட்டசபை தொகுதிக்கு ஒரு வார்டு மட்டும் ஒதுக்குவதாக தெரிவித்துள்ளனர்.


இதை கேட்டு, பா.ஜ., தரப்பில் பேசியவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பா.ஜ., நிர்வாகிகளில் சிலர், குறைந்த தொகுதிகளில் போட்டியிடுவதற்கு, தனித்து போட்டியிடுவோம் எனக் கூறி உள்ளனர்.


ஆனால், பெரும்பாலானோர் அதை மறுத்து, கூடுதலாக ஒரு சில வார்டுகளை பெற்று, கூட்டணியிலேயே போட்டியிடுவோம் எனக் கூறி உள்ளனர்.

Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (152)

 • N.Inbaharan - Tiruchirappalli,இந்தியா

  இவன் அன்புமணி அளவூக்கு உயர்ந்தவனா? மாற்றார் மனதை புண்படுத்துறது காசுக்காக ன்ன அது எப்பிடி நியாயம்? அவனை எல்லாம் சட்ட படி தண்டிக்கணும்...இப்ப எல்லாம் கொஞ்சம் வாய் நீளுது அத கவனிச்சாங்கன்னா சரி

 • Ravi - Danbury, CT,யூ.எஸ்.ஏ

  “ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்”. So Surya is very successful in his mission as koothadi, but we Tamils lost unity சமூக நீதி காவலன் சூர்யா, பார்வதியின் (செங்கனி) உரிமை வாங்காமல் கதையை திருடி பலகோடி சம்பத்திருக்கிறான். படத்தின் லாபத்தையும் அவன் செய்த திருட்டுதனத்துகாகவும், தமிழகத்தில் சாதி உணர்வை தூண்டி கொந்தளிப்பை ஏற்படுத்திய சூர்யா குழுவிடமும், சட்டம் தெரிந்த நீதிபதி சந்துரு துணை போனதற்கும் அபராதமாக 1000 கோடி பெற்று ஆதிவாசிகள், குறவர்கள், இருளர்கள் மற்றும் நாடோடிகளுக்கும் அவர்கள் குழந்தைகளுக்கு இலவச விடுதி வசதியுடன் கூடிய கல்விக்கும் உதவலாம். அப்பன் படிப்பது ராமாயணம் மகன் இடிப்பது பெருமாள் கோயில் Biopic படம் எடுப்பதற்கு முன்பே சச்சின் டெண்டுல்கர், தோனி, பூலான் தேவிக்கு பல கோடி பணம் கொடுக்கப்பட்டுள்ளது. Real Heroine பார்வதி Human right கோர்ட்கு சென்று சூர்யா & சந்துரு குழுவிடமிருந்து தனக்கு சட்டப்படி கிடைக்கவேண்டிய எல்லா உரிமைகளுக்கான சன்மானத்தையும் அபராத தொகையையும் பெருமையுடன் பெற ஏற்பாடு செய்யவேண்டும். உண்மை கதையை உண்மையாக உண்மை பெயர்களுடன் உரிமம் பெற்று எடுத்திருந்தால் இவ்வளவு பிரச்னைகள் வந்திருக்காது. There may be some nexes between Chandru and Surya team time will bring the truth otherwise Chandru should have adviced Surya to get permission from Parvathy Ps.: வெளிப்படையாக பேசும் சிவகுமார் இதுவரை வாய் திறக்கவில்லை - இதில் ஏதோ மர்மம் உள்ளது

 • Ganesh -

  சும்மா இவர் பெயர் எடுப்பதற்கு மக்களை ஏமாற்றும் செயல். நீதி நேர்மை இதெல்லாம் சொந்த வாழ்க்கையில் இருந்தால் போதும் சினிமாவில் ஏன் ஜாதி? உங்க கொள்கையை மக்களிடம் சினிமா மூலம் காசு வாங்கி தினிக்க நினைப்பது கேவலமதான்

 • Thirumurugan - Kuala Lumpur,மலேஷியா

  அந்த ஒரு படத்தின் வாயிலாக எத்தனை குடும்பங்கள் பயன் அடைந்துள்ளன. அதற்கு யாரும் நன்றி கூட சொல்லவில்லை. அந்த மக்களை அப்படியே வைத்திருப்பதில் தான் இங்கு கருத்து சொல்லும் பல பேருக்கு விருப்பம்.

 • Priyan Vadanad - Madurai,இந்தியா

  மக்களை உசுப்பேற்றும் பணி தொடர வாழ்த்துக்கள்.

Advertisement