dinamalar telegram
Advertisement

நீரஜ் சோப்ராவுக்கு கேல் ரத்னா விருது வழங்கினார் ஜனாதிபதி

Share

புதுடில்லி: டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா உள்ளிட்ட 12 பேருக்கு கேல் ரத்னா விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.


இந்திய விளையாட்டு துறையில் சாதிப்பவர்களுக்கு மத்திய அரசு சார்பில் தயான்சந்த் 'கேல் ரத்னா', 'அர்ஜுனா' உள்ளிட்ட விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படும். இவ்விருதுகளுக்கான தேர்வுக்குழு பரிந்துரை செய்த பட்டியல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது.


மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா



இதன்படி, ஒலிம்பிக் தடகள வரலாற்றில் சாதித்து முதன் முறையாக இந்தியாவுக்கு தங்கம் வென்று தந்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ரவிக்குமார் (மல்யுத்தம், வெள்ளி), லவ்லினா (குத்துச்சண்டை, வெண்கலம்), பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற அவனி லெஹரா, மணிஷ் நார்வல் (துப்பாக்கிசுடுதல்), சுமித் அன்டில் (ஈட்டி எறிதல்), பிரமோத், கிருஷ்ணா (பாட்மின்டன்), கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் (ஹாக்கி), இந்திய பெண்கள் ஒருநாள் அணி கேப்டன் மிதாலி ராஜ், சுனில் செத்ரி (கால்பந்து), மன்பிரீத் சிங் (ஹாக்கி) , பிரமோத் பகத்(பாரா பாட்மின்டன் வீரர்) உள்ளிட்ட 12 பேருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது வழங்கி கவுரவித்தார்.

Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News

அர்ஜூனா விருது



ஹாக்கி வீராங்கனைகள் மோனிகா, வந்தனா கட்டாரியா , கபடி வீரர் சந்தீப் நர்வால், துப்பாக்கி சுடும் வீரர் அபிசேக் வர்மா, கிரிக்கெட் வீரர் ஷிகார் தவான், பாட்மின்டன் வீரரும், கவுதம புத்தா நகர் கலெக்டர் சுகாஷ் உள்ளிட்ட 35 பேருக்கு

ஆகியோருக்கும் அர்ஜூனா விருதுகளை ஜனாதிபதி வழங்கினார்.

Share
Advertisement
 

Home வாசகர் கருத்து (2)

  • சம்பத் குமார் -

    1).விருது பெற்ற அனைத்து வீர வீராங்கனைகளுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.2). வரும் அடுத்த போட்டியில் நமது இளம் விளையாட்டு வீரர்கள் உங்களை முன்னுதாரணமாக கொண்டு நமது பாரத தேசத்திற்கு மேலும் பல விருதுகளை வென்று வருவார்கள் என மனது இப்பொழுதே பூரிப்பு அடைகிறது. நன்றி வணக்கம் ஐயா.

  • Lion Drsekar - Chennai ,இந்தியா

    ஆண்டவா கெட்டசெய்தியை மட்டுமே பார்த்து பார்த்து கேட்டு பழகிய நமக்கு "நீரஜ் சோப்ராவுக்கு 'கேல் ரத்னா' விருது வழங்கினார் ஜனாதிபதி" இவர் நமது பேங்க் ஐ ஏமாற்றியவரா அல்லது தங்கம் மற்றும் வெள்ளை வியாபாரியா என்று புரியவில்லை, இனி இது போன்ற செய்தி வெளியிடும்போது விளையாட்டு வீர்ரார் , என்று அவரது பெயருக்கு முன்னாள் ஒரு அடைமொழியை சேர்த்தால் நன்றாக இருக்கும், வந்தே மாதரம்

Advertisement