Load Image
dinamalar telegram
Advertisement

எப்போதும்வென்றான் அணைகட்டு நிரம்பியதால் வெள்ளப்பெருக்கு

Tamil News
ADVERTISEMENT
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே எப்போதும்வென்றான் அணைகட்டு நிரம்பி மறுகால் பாய்வதால் அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரண்டு கிராமங்களிலேயே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தார், கடம்பூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த கடுமையான மழையின் காரணமாக தூத்துக்குடி அருகே உள்ள எப்போதும்வென்றான் அணைக்கட்டு நிரம்பி மறுகால் பாய்கிறது. இரண்டாயிரத்தி 670 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அணைக்கட்டு 44 அடி ஆழ முழு கொள்ளவை எட்டியதையடுத்து அப்பகுதியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வேம்பார் கடலில் கலக்கும் இந்த வெள்ளநீரால் ஆதனூர்- முள்ளூர் இடையே உள்ள தரைப்பாலம் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.


இதன் காரணமாக இரண்டு கிராமங்களுக்கு இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், கிராம மக்களும் கிராமத்தை விட்டு வெளியே வர முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். எப்போதும் வென்றான் நீர்தேக்கம் கடந்த 1972ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, 1976ஆம் ஆண்டு இந்த அணைக்கட்டு கட்டிமுடிக்கப்பட்டது. 2 ஆயிரத்து 670 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த அணைக்கட்டில் 126 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்கும் கொள்ளளவு கொண்டது.


இந்த நீரின் மூலம் இப்பகுதியில் ஆயிரத்து 815 ஏக்கர் பாசன வசதி பெற்று வந்தது. 40 ஆண்டுகளாக இந்த அணை தூா்வாராததால் கொள்ளளவு படிப்படியாக குறைந்து 44 அடி ஆழமாக குறைந்து விட்டது. இதன் மூலம் தற்போது வெறும் 280 ஏக்கர் பரப்பளவில் மட்டும் விவசாயம் நடக்கிறது. எனவே இந்த அணையை தூர்வார வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement