அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்தசஷ்டி திருவிழா நவம்பர் 4ல் யாகசாலை பூஜையுடன் துவங்கியது. கொரோனா காரணமாக, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விழா நடந்தது.
10,000 பக்தர்கள்
நவம்பர் 4 முதல் 8 வரை தினமும் 5,000 பேர் 'ஆன்லைன்' முன்பதிவு மூலமாகவும், 5,000 பேர் நேரடியாகவும் என, தினமும் 10 ஆயிரம் பக்தர்கள், தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். நேற்றைய சூரசம்ஹாரம், இன்று நடக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை. சூரசம்ஹாரம் நிகழ்ச்சி, கடந்த ஆண்டை போல பக்தர்களின்றி, கோவில் முன்பாக கடற்கரை நுழைவாயிலில் நடந்தது.
இன்று திருக்கல்யாணம்
அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன்,உயர் நீதிமன்ற நீதிபதி புகழேந்தி, துாத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ், கோவில் தக்கார் கண்ணன் ஆதித்தன், ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவின் மனைவி மற்றும் குடும்பத்தினர் பங்கேற்றனர்.பக்தர்கள் இன்றி சூரசம்ஹாரம் நடந்ததால், கோவில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.இன்று இரவு மகாதேவர்சன்னிதியில் சுவாமிக்கும், தெய்வானை அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!