dinamalar telegram
Advertisement

2015 ம் ஆண்டுக்கு பின் சென்னையில் மிக கனமழை கொட்டுகிறது!:

Share
சென்னை:தமிழகத்தின் தலைநகர் சென்னையில், 2015ம் ஆண்டுக்கு பின் மிக கன மழை கொட்டுகிறது. குடிநீர் தரும் ஏரிகள் வேகமாக நிரம்பி வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. அடுத்த நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன மழை காரணமாக, சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள நான்கு மாவட்டங்களில், பள்ளி, கல்லுாரிகளுக்கு, இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த 2015 நவம்பரில், ஒரே நாளில் சென்னையில் அதிகபட்சமாக 25 செ.மீ., மழை பதிவானது. ஏரிகள் நிரம்பி திடீரென திறக்கப்பட்டதால், சென்னை வெள்ளத்தில் தத்தளித்தது; ஏராளமான வீடுகள் தண்ணீரில் மூழ்கின. மக்கள் எப்போதும் இல்லாத வகையில் திண்டாடினர்.அடுத்தடுத்த ஆண்டுகளில் வட கிழக்கு பருவமழை பெருமளவு பெய்தாலும், அது போன்ற பெரிய பாதிப்பு இல்லை. ஐந்து ஆண்டுகளுக்கு பின், சென்னையில் இரண்டு நாட்களாக இடைவிடாது மழை கொட்டி வருகிறது.


நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி 24 மணி நேரத்தில், சென்னை மயிலாப்பூரில் அதிகபட்சமாக 23 செ.மீ., மழை பதிவானது; மற்ற பகுதிகளிலும் 20 செ.மீ.,க்கு மேல் மழை பதிவானது. வானிலையில் குறுகிய காலத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றமே, இடைவிடாத மழைக்கு காரணம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.


Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
நகரின் பெரும்பாலான தெருக்களில் மழை நீர் தேங்கியது. பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சாலைகளில் தண்ணீர் தேங்கியதால், வாகனங்கள் செல்ல முடிய வில்லை; மக்கள் வீடுகளில் முடங்கினர். ரயில் பாதைகளில் தண்ணீர் தேங்கி, ரயில் போக்கு வரத்திலும் பாதிப்பு ஏற்பட்டது.

ஏரிகள் நிரம்பின



சென்னைக்கு குடிநீர் தரும் செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகள் வேகமாக நிரம்பின. கடந்த 2015ல் ஏற்பட்டது போல பாதிப்பு ஏற்படாதிருக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஏரிகளில் இருந்து நேற்று காலை முதல் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.


இந்நிலையில், இன்னும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன், மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார்.தேங்கியுள்ள மழை நீரை விரைந்து வெளியேற்றவும், பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதிக கன மழை



அதன் பின், முதல்வர் ஸ்டாலின் அளித்த பேட்டி:சென்னையில் பல்வேறு பகுதிகளில், கன மழை காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கும் நிலை உருவாகி உள்ளது. மக்களுக்கு தேவையான நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள, குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள நீரை வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.தேசிய பேரிடர் மீட்பு படை, காவல் துறை, தீயணைப்பு துறையினர் ஒருங்கிணைந்து, முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி பணியாளர்களும், இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர்.

கன மழை காரணமாக, மதுரை, செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு, நான்கு தேசிய பேரிடர் மீட்பு படை குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. சென்னையில் 24 மணி நேரத்திற்குள், 20 செ.மீ.,க்கு மேல் மழை பெய்துள்ளது; இது, அதி கன மழை. குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள நீர், ராட்சத ஜெனரேட்டர்கள் வாயிலாக வெளியேற்றப்படுகிறது. இப்பணி, 500 இடங்களில் நடந்து வருகிறது. சென்னையில், 160 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன. இதுவரை, 44 மையங்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்; அவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க, அரசு அதிகாரிகள் மட்டுமின்றி, எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஒருங்கிணைந்து பணியாற்ற அறிவுறுத்தி உள்ளேன்.

விடுமுறை



மாணவர்கள், பொதுமக்கள் நலன் கருதி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில், பள்ளி, கல்லுாரிகளுக்கு, அடுத்த இரு தினங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, கரூர், திருவள்ளூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, நாமக்கல், ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், ஈரோடு மாவட்டங்களில், 24 மணி நேரத்தில் 20 செ.மீ.,க்கு மேல் மழை பெய்துள்ளது. மற்ற மாவட்டங்களில் அதிக மழை இல்லை; எனினும் அரசு அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர்.


பொதுமக்களுக்கு உதவ, மாநில கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படுகிறது. இதை, 1070 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மழையால் பாதிக்கப்பட்டுள்ள மின் கம்பங்கள், குழிகள் போன்றவற்றை விரைவாக சரி செய்ய, மின் துறை, உள்ளாட்சி துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு அறிவுறுத்தி உள்ளேன்.பொதுமக்கள் தண்ணீர் சூழ்ந்துள்ள இடங்களில், மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். அ.தி.மு.க., ஆட்சியில் செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீர் திறக்கப்பட்டதை எல்லாம் கூறி, அரசியல் செய்ய விரும்பவில்லை. மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகளிடம் பேசி உள்ளேன். நேற்று முன்தினம் கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினேன்.

தயாராக இருந்தோம்



ஆட்சிக்கு வந்ததில் இருந்து, மழை நீர் வடிகால்களை சுத்தப்படுத்தி உள்ளோம்; துார் வாரி உள்ளோம். மழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருந்தோம். நீர் நிலைகள் 24 மணி நேரமும், உரிய அதிகாரிகளால் கண்காணிக்கப்படுகின்றன. குறுகிய காலத்தில், ஒரே நாளில் அதிக மழை பெய்ததால், அதிக தண்ணீர் தேங்கி உள்ளது. அதை வெளியேற்ற, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.


கடந்த ஆட்சியில் 10 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை; நாங்கள் செய்கிறோம். நாங்கள் செய்த பணியில், 50 சதவீதம் திருப்தியாக உள்ளது. மீதி பணிகளை மழை முடிந்ததும் நிறைவேற்றுவோம்.இவ்வாறு முதல்வர் கூறினார்.

'சென்னை பயணத்தை3 நாள் தள்ளி வையுங்க!'



சென்னையில் மழைநீர் தேங்கியதால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, ''வெளியூர்களில் இருந்து சென்னை திரும்பக் கூடியவர்கள், தங்கள் பயணத்தை இரண்டு, மூன்று நாட்களுக்கு தள்ளி வைக்க வேண்டும்,'' என்று வேண்டுகோள் விடுத்தார்.


இதற்கிடையில், தமிழகம் முழுதும் மழையால் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்க வசதியாக, அரசு பள்ளிகளை திறந்து உரிய ஏற்பாடுகள் செய்யுமாறு, தலைமை ஆசிரியர்களை முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

59 விமானங்கள் தாமதம்



கன மழை காரணமாக, சென்னையில் இருந்து அபுதாபி, சார்ஜா, துபாய், கத்தார், லண்டன் மற்றும் இலங்கைக்கு செல்லும், 13 சர்வதேச விமானங்கள், 30 நிமிடங்களில் இருந்து ஒரு மணி நேரம் தாமதமாக, நேற்று புறப்பட்டு சென்றன. இதேபோல, கோல்கட்டா, டில்லி, மும்பை, ஐதராபாத், துாத்துக்குடி, அந்தமான் உட்பட பல்வேறு நகரங்களுக்கு செல்லும் 46 உள்நாட்டு விமானங்களும், 30 நிமிடங்கள் வரை தாமதமாக சென்றன.

சென்னையில் இருந்து புறப்படும், 59 விமானங்களின் சேவையில் தாமதம் ஏற்பட்டது. அதேநேரத்தில், தொடர்ந்து மழை பெய்த போதும், வெளிநாடுகள், வெளியூர்களில் இருந்து, சென்னை விமான நிலையம் வரும் விமானங்கள் அனைத்தும் தாமதமின்றி குறித்த நேரத்தில் வந்தன. பயணியர் வருகை, உடமைகள், உணவு பொருட்கள் ஏற்றுதலில் தாமதம் ஏற்பட்டதால், விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


மேலும், சென்னை மீனம்பாக்கம் பகுதியில், குறைவாக மழை பெய்ததால், சென்னை விமான நிலைய ஓடுபாதைகளில் மழை நீர் தேங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

8ம் வகுப்புக்கான தேர்வு தள்ளிவைப்பு



அரசு தேர்வுத் துறை இயக்குனர் சேதுராம வர்மாவின் அறிவிப்பு:தனி தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு, இன்று முதல் 12ம் தேதி வரை நடக்கவிருந்தது. இந்நிலையில், மழை காரணமாக இன்றும், நாளையும் சில மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இன்றும், நாளையும் எட்டாம் வகுப்பு தனி தேர்வர்களுக்கு நடக்கவிருந்த, தமிழ், ஆங்கில மொழி பாடத் தேர்வுகள் மட்டும் தள்ளி வைக்கப்படுகின்றன. மற்ற தேர்வுகள் திட்டமிட்ட தேதியில் நடக்கும். தள்ளி வைக்கப்படும் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதுச்சேரியிலும் 2 நாள் 'லீவ்'



வங்கக் கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக, புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கல்வி அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஏற்கனவே ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, வகுப்புகள் துவங்கி நடந்து வருகின்றன.


இந்த வகுப்புகள் மற்றும் கல்லுாரிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை விடப்படுகிறது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, இன்று முதல் பள்ளிகளை திறக்க முடிவு செய்திருந்தோம். மழை காரணமாக, இப்போதைக்கு பள்ளிகள் திறக்கப்படாது. பள்ளிகள் திறப்பு தேதி குறித்து, முதல்வருடன் ஆலோசித்து பின் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Share
Advertisement
 

Home வாசகர் கருத்து (10)

  • RajanRajan - kerala,இந்தியா

    திராவிட விடியல் ஆட்சியில் சென்னை தண்ணீர் பஞ்சம் தீர்த்த முதல்வருக்கு விழா எடுக்க உ.பி ஸ் கள் விருப்பம். வருண பகவானுக்கான நகைகள் இனி உருக்கப்படாது, உபாயம் ஸ்நேக் பாபு. வாழ்த்துக்கள்.

  • sridhar - Dar Es Salaam ,தான்சானியா

    ஒருவரை குற்றம் சொல்வதை நிறுத்திகிட்டு இதற்கான தீர்வு காண்பதே சால சிறந்தது அது எப்படீங்க ஒரு அரசு பத்து வருடத்தில் பண்ணலயாம் இவங்க உடனே பண்ணிட்டாங்களாம் வேலைய பாருங்க பாஸ்

  • Nagercoil Suresh - India,இந்தியா

    நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னை குளித்துள்ளது புயலால் இல்லாமல் மழையால் தெருக்களை சுத்தம் செய்ததை நினைத்து மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 2015 ல் இரவு என்பதால் முதல்வரை தொடர்வுகொள்ள முடியாமலும் செம்பரம்பாக்கம் ஏரியை திறக்க முடியாமலும் அதிகாரிகள் வெள்ளத்தில் தத்தளித்தனர். அடுத்த நான்கு நாட்களுக்கு மழை நீடித்தாலும் மழையின் அளவு குறைந்துகொண்டே தான் செல்லும்... சுகாதாரத்துறை மழைக்கு பிறகு பரவும் தொற்றுநோய்களை கட்டுப்படுத்த இப்போதே பணிகளை முடுக்கி விடவேண்டும். முதல்வர், சைலேந்திரபாபு, இறையன்பு ஆகியோர் களத்தில் குதித்து செயல்படுவது பாராட்டுக்குரியது அதே நேரம் வெள்ளம் சூழ்ந்துள்ள தாழ்வான பகுதியில் வசிக்கும் ஏழை மக்களுக்கு நிரந்தர மறுவாழ்வளித்திட வழிகளை உண்டுபண்ணவேண்டும்...

  • ராமகிருஷ்ணன் -

    மழையால் ஏற்பட்டுள்ள மக்களின் துயரங்களை தீர்க்கின்றோம் என்று கணக்கு காட்டி திமுக அரசு சுருட்டுவதற்கு முழு வீச்சில் இறங்கும், ஐபிஎஸ்க்கள் தீவிரமாக கண்காணித்து மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

  • G.Prabakaran - Chennai,இந்தியா

    ஓர் நாள் மழையின் அளவு அதே 2015 ஆம் ஆண்டின் அளவு தான் ஆனால் இந்த அரசு திட்டமிட்டு படிப்படியாக 500, 1000, 2000, என செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீரை திறந்து விட்டுஉள்ளது முதல்வர் அவர்கள் வண்டியை விட்டு இறங்கி களப்பணி யாற்றியுள்ளார். முன்னர் 2015 இல் வெள்ளம் வந்தபோது அப்போதைய முதல்வர் வண்டியில் இருந்தவாறு வாக்காள பெருமக்களே என வாக்கு கேட்பது போல் பேசிய மற்றும் வண்டியை விட்டு இறங்காமல் சுற்றுலா செல்வது போல் வேடிக்கை பார்த்த நிகழ்வுகளும் நினைவுக்கு வருகின்றன. முதல்வர் கூறி உள்ளது போல் சென்ற 10 ஆண்டுகளில் ஒன்றும் செய்யாமல் விட்ட விளைவு தான் இது தான். ஆனாலும் அவர்கள் சுணக்கமாக இருந்தது போல் இல்லாமல் இனி வரும் ஆண்டில் இதே நிலை தொடராமல் இருக்க மழை நீர் வடிகால்களுக்கு செல்லும் பாதைகளை அதிகப்படுத்தி நிரந்தர தீர்வு காண வழி வகை செய்தல் வேண்டும்.

Advertisement