ADVERTISEMENT
சென்னை: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளையும், நாளை மறுநாளும் விடுமுறை வழங்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
எழும்பூர் மற்றும் வட சென்னையில் உள்ள பெரம்பூர், ஓட்டேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு முதல்வர் சென்றார். அவருடன் அமைச்சர்கள் சேகர்பாபு, கே.என் நேரு, தலைமை செயலர் இறயைன்பு, டி.ஜி.பி., சைலேந்திரபாபு, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் உடன் சென்றனர். மழை பாதிப்பு மற்றும் மீட்பு பணிகளை முதல்வர் ஆய்வு செய்ததுடன், மக்களின் குறைகளை கேட்டார்.
இதன் பின்னர் எழிலகத்தில் மாநில கட்டுப்பாட்டு அறைக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் அளித்த பேட்டி:சென்னையில் கடும் மழை கொட்டி தீர்த்ததால் சில இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரண பணிகள் முடுக்கி விடப்பட்டள்ளன. சென்னையில் தேசிய பேரிடர் மீட்பு படை வரவழைக்கப்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட மின்கம்பங்கள், குழிகள் சரி செய்ய மின்துறை, உள்ளாட்சி நெடுஞ்சாலை துறைக்கு அறிவுறுத்தி உள்ளேன். தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மக்களை கேட்டு கொள்கிறேன். சென்னை மாநகராட்சி பணியாளர்கள் இரவு பகல் பாராமல் உழைத்து வருகின்றனர். மழையை, எதிர்கொள்ள அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.
பொது மக்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு பள்ளி கல்லூரிகளுக்கு அடுத்த 2 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் முடிவு செய்து கொள்ளலாம். வெளியூர் சென்று சென்னை திரும்புபவர்கள், தங்களது பயணத்தை இன்னும் 2, 3 நாட்கள் ஒத்தி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க.,வினருக்கு உத்தரவு
இதனிடையே, மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, அதிகாரிகளுடன் இணைந்து உதவி மற்றும் நிவாரண உதவிகளை செய்ய வேண்டும் என தி.மு.க., எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
துக்ளக் தர்பார் 😂🤣