வேலை வாங்கி தருவதாக மோசடி
புதுக்கோட்டை : கந்தர்வக்கோட்டையை சேர்ந்த ஒருவருக்கு மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி 10 லட்சம்ரூபாய் மோசடி செய்த தம்பதி மீது போலீசில்புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூரை சேர்ந்த சுஜாதா 47, அவரது கணவர் மெல்வின் ஜெயக்குமார் 50 ஆகியோர் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சேர்ந்த செல்லப்பன் 60 என்பவரது மகனுக்கு மத்திய அரசு துறையில் இன்ஜினியர் வேலை வாங்கி தருவதாக கூறி 10 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளனர்.வேலை வாங்கித் தராமல் ஏமாற்றியதால் பணத்தை திருப்பிக் கேட்ட போது ஒரு லட்சத்து 25 ஆயிரத்தை மட்டும் திருப்பிக் கொடுத்துள்ளனர். மீதி பணத்தை திருப்பிக் கொடுக்காததால் புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் நேற்று செல்லப்பன் புகார் அளித்தார். மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!