ADVERTISEMENT
மதுரை: தொடர்மழை மற்றும் தீபாவளி பண்டிகை காரணமாக மல்லிகை பூ விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை ரூ.2000க்கு விற்பனையாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் தொடர் கனமழை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பூக்கள் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது. மதுரை பகுதியில் அதிக அளவில் பயிரிடப்படும் மல்லிகை பூக்களின் விலையும் அதிரடியாக அதிகரித்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் இருந்து மதுரை மட்டுமல்லாமல் திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் போன்ற மாவட்ட வியாபாரிகள் பூக்கள் வாங்கி செல்வது வழக்கம்.
அப்படி இருக்கையில், கடந்த வாரம் ஒரு கிலோ மல்லிகை பூவின் விலை ரூ.800 ஆக விற்கப்பட்டது. தொடர் மழையால் பூக்கள் வரத்து குறைந்தது. வழக்கமாக 5 டன் மல்லிகை பூ, மார்க்கெட்டிற்கு வரும் நிலையில் ஒரு டன் வரை மட்டுமே வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தீபாவளி பண்டிகை தினத்தை முன்னிட்டும் மல்லிகை விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. தற்போது மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோ ரூ.2000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகம் முழுவதும் தொடர் கனமழை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பூக்கள் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது. மதுரை பகுதியில் அதிக அளவில் பயிரிடப்படும் மல்லிகை பூக்களின் விலையும் அதிரடியாக அதிகரித்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் இருந்து மதுரை மட்டுமல்லாமல் திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் போன்ற மாவட்ட வியாபாரிகள் பூக்கள் வாங்கி செல்வது வழக்கம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
சேலையை மறந்து சுடிதார் அணியும் இன்றைய நாகரீக பெண்கள், தலையை வாரி முடிப்பதில்லை.. இவர்களுக்கு எதுக்கு மல்லி கை என விலை உயர்ந்து விட்டதோ