அவரது அறிக்கை: அ.தி.மு.க., ஆட்சியில், இலங்கை தமிழர்களுக்காக எந்த நலத்திட்டங்களையும் செய்யவில்லை என வேலுாரில் முதல்வர் பேசியதாக, அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலின் போது, பொய்யையே மூலதனமாக வைத்து, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து, ஆட்சிக்கு வந்த முதல்வர், கையில் ஆட்சி அதிகாரம் கிடைத்தால் எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்பது, தற்போது தெளிவாகி உள்ளது.
இலங்கையில் நிகழ்ந்த உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டு, தமிழகத்திற்கு அகதிகளாக வந்த தமிழர்களை பாதுகாத்தது, அ.தி.மு.க., அரசு தான் என்பதை, முதல்வர் தன் பசப்பு வார்த்தைகளால் மறைத்து விட முடியாது.தி.மு.க., ஆட்சியில் இருந்த போதெல்லாம், இலங்கை தமிழர்களுக்கு எதுவும் செய்யவில்லை என்பதை, முகாம் வாழ் இலங்கை தமிழர்கள் நன்கு அறிவர்.

தி.மு.க., முதல்வர் கருணாநிதி பேச்சை நம்பி, பதுங்கு குழிகளில் இருந்து வெளியே வந்த அப்பாவி இலங்கை தமிழர்களை, சிங்கள ராணுவத்தினர் குண்டு மழை பொழிந்து, கொன்று குவித்ததை யாரும் மறக்க முடியாது.
சிகிச்சைக்காக சென்னை வந்த, இலங்கை தமிழ் போராளியின் தாயாரை, விமானத்தில் இருந்து தரை இறங்க விடாமல், திருப்பி அனுப்பிய தி.மு.க., அரசையும், அதன் தலைவரையும் மக்கள் மறந்து விடவில்லை; இப்போது தி.மு.க., கூட்டணியில் உள்ள, கூட்டணி கட்சி தலைவர்களும் மறந்திருக்க மாட்டார்கள்.
இலங்கை தமிழர்கள் பிரச்னையில், அ.தி.மு.க., அரசு ஆக்கப்பூர்வமான பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அ.தி.மு.க., தற்போதுள்ள ஆளும் தி.மு.க.,வை போல என்றுமே இரட்டை வேடம் போட்டதில்லை.இவ்வாறு பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எடப்பாடி ஐயா ... நீங்க போட்ட வேஷத்தை விடவா ?..