Load Image
dinamalar telegram
Advertisement

தலைமை செயலகத்தில் மரம் விழுந்து பெண் காவலர் பலி ; ரூ.25 லட்சம் நிவாரணம்

Tamil News
ADVERTISEMENT
சென்னை: தலைமை செயலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் கவிதா மீது அங்கிருந்த மரம் ஒன்று திடீரென சாய்ந்து விழுந்ததில் அவர் உயிரிழந்தார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று (நவ.,1) இரவு முதல் கனமழை பெய்து வந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து உள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவு அமைந்துள்ள பகுதி அருகே பெரிய மரம் ஒன்று திடீரென வேரோடு சாய்ந்து விழுந்தது.
Latest Tamil Newsஅப்போது அதன் அருகே உள்ள வாகன நிறுத்துமிடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த முத்தயால்பேட்டை போக்குவரத்து தலைமை காவலர் கவிதா மீது மரம் விழுந்ததில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். மேலும், இச்சம்பவத்தில் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் சேதமடைந்தன. கனமழை காரணமாக மரம் சாய்ந்திருக்க கூடும் என கூறப்படுகிறது.

ரூ.25 லட்சம் நிவாரணம்



மரம் விழுந்ததில் உயிரிழந்த பெண் காவலர் கவிதாவின் குடும்பத்தாருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். மேலும் கவிதாவின் குடும்பத்தாருக்கு உடனடியாக முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.25லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (7)

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    இந்த மரங்களை சரியாக பரமாரிக்காத பொதுத்துறை நிருவாகம் இருந்து என்ன கலைத்தாள் என்ன?

  • M S RAGHUNATHAN - chennai,இந்தியா

    பெற்றவர்களின் கவனக் குறைவால் ஒரு சிறுவன் இறந்ததற்கு கோடிக்கணக்கில் உதவி. ஆனால் இவருக்கு 25 லட்சம். இதுதான் திருவாரூர் சோழன் நீதி.

  • அப்புசாமி -

    கருணை அடிப்படையில் வேறு ஒரு மரம் நடுங்க.

  • அப்புசாமி -

    மரங்களை வளர்ப்பதில்லை. வளர்ந்த மரங்களைப் பராமரிப்பதில்லை. கிளைகளை கழித்து சரியான அளவில் வைக்கத் தெரியாது. ஆகட்டும், கெவுனர் ஐ.ஐ.டி ஆளுங்களை வெச்சு சென்னை முழுவதும் ஆய்வு செஞ்சு அறிக்கை வாங்கி மரங்களை வலுப்படுத்தலாம்.

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    நிவாரண பணம் வைத்துக்கொண்டு எவ்வளவு வருடங்கள் காலம் ஓட்ட முடியும். ஆகையால், அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி கொடுத்தால் அது எவ்வளவு சிறப்பு.

Advertisement