சென்னை உஷ்ஷ்ஷ்!: ஸ்டாலின் பிரதமர்?
ஸ்டாலின் பிரதமர்?
'முதல்வர் ஸ்டாலின் ஏன் பிரதமராக வேண்டும்' என்ற நுால் வெளியீடு, சென்னையில் சமீபத்தில் நடந்தது. ஸ்டாலின் அரசியல் வாழ்க்கை, போராட்டங்கள், தி.மு.க., அரசு சாதனைகள், திராவிட கொள்கைகள், சமூக நீதி கொள்கைகள் குறித்து, இளைய தலைமுறையினர் மற்றும் வெளி மாநிலத்தினர் தெரிந்து கொள்ளவும், பிரதமர் வேட்பாளராக ஸ்டாலினை முன்னிலைப்படுத்தவும், இந்நுால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.
மூன்றாம் அணியை உருவாக்கி, அதன் வாயிலாக ஸ்டாலினை பிரதமர் வேட்பாளராக்க, இந்த புத்தகம் வாயிலாக தி.மு.க., ஆதரவாளர்கள் முயற்சிக்கின்றனர். இதை அறிந்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பொங்கி எழாமல் இருந்தால் சரி!
அடக்கி வாசிப்பு ஏன்?
தமிழகத்தில், லஞ்ச ஒழிப்புத் துறையினர், கடந்த செப்., 30ல் பல்வேறு துறைகளைச் சேர்ந்த, 38 அரசு அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்தினர்.
இதில், சென்னையில் ஆறு இடங்கள் உட்பட, 15 சார் - பதிவாளர் அலுவலகங்களிலும் சோதனை நடந்தது. பொதுவாக இப்படி சோதனை நடந்தவுடன், அது தொடர்பாக எப்.ஐ.ஆர்., பதிவு செய்து, இணையதளத்தில் வெளியிட வேண்டும். ஆனால், சோதனை தொடர்பான எப்.ஐ.ஆர்.,கள் இதுவரை இணையதளத்தில் வெளியிடவில்லை. இது குறித்து விசாரித்தால், அது நமக்கே வம்பாய் முடிந்து விடும் என்பதால், சார்- பதிவாளர்கள் அடக்கி வாசிக்கின்றனர்.
ரெய்டு' பீதியில் பம்மும் 'மாஜி'க்கள்!
'ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர் நலிவடைந்த மின் நிலையத்தை வாங்கி, அதன் வாயிலாக மின் வாரியத்திடம், 5,000 கோடி ரூபாய்க்கு மின் கொள்முதல் ஒப்பந்தம் செய்ய உள்ளார்.
'தி.மு.க.,வை சேர்ந்த சில அமைச்சர்கள் இதன் வாயிலாக பயன் பெற உள்ளனர்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார். இதற்கு, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்து, சமாளித்தார்.
இதை பார்த்த அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள் சிலர், 'நாம சொல்ல வேண்டியதை அண்ணாமலை சொல்கிறார்... அவரை விட, 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த உங்களுக்கு, எல்லா விபரங்களும் நல்லா தெரியும். நீங்களும் புகார் கூறினால் தானே, தி.மு.க., அரசு மீது மக்களிடம் கோபம் ஏற்படும்' என, முன்னாள் அமைச்சர்களிடம் கூறி உள்ளனர்.
ஆனால், அவர்கள் எதுவும் சொல்லாமல் மவுனம் காக்கின்றனர். மற்ற 'மாஜி' அமைச்சர்களுக்கு வந்தது போல், நம்ம வீடு, அலுவலகங்களிலும் ரெய்டு வந்துவிடுமோ என்ற பீதி தான் காரணமாம்.
வாசகர் கருத்து (188)
ஸ்டாலின் இந்தியாவின் பிரதமர் ஆவது குருடன் கனவுகாண்பது போல
முடியல-
உங்களுக்கு ஹிந்தி தெரியுமா.... அங்கு இருக்கும் எம்பிக்கள் முக்கால் வாசி பேருக்கு ஆங்கிலம் தெரியாது, தமிழ் தெரியவே தெரியாது... இந்த வயசுல தலைவர் ஹிந்தி டியூஷன் போக சொல்லுறிங்களா... ஏக் காவும் மேம் ஏக் கிசான் ராகு தாத்தால ஆரம்பிச்சு முடிக்கறப்போ வயசு தொண்ணுற எட்டிரும்... நரசிம்ம ராவ் மற்றும் தேவா கௌடா ஹிந்தி தெரிஞ்சதால தில்லா நின்னாங்க... இவருக்கு தமிழையே எழுதி வச்சு வாசிக்க சொன்ன எக்குத்தப்பா படிச்சு உபிஸ் மானத்தை வாங்குவார்... எதோ தமிழ்நாட்டுஞ் ஏமாத்தி கேஸு பார்த்துட்டு நிம்மதியா இருக்கட்டும்.. ஹிந்தி தெரியாது போடா குரூப்ஸ்...
Sudalai, The ACCIDENTAL CM என்றும் மேலும் The misfortune of Tamil Nadu என்றும் நானும் இரு புத்தகங்கள் எழுதி வருகிறேன்....
இப்படித்தான் ஜெயலலிதா அவர்களும் பிரதமர் பதவிக்கு போட்டி இட ஆசை தூண்டிவிட்டனர்.ஆனால் என்ன ஆனது? அதுவும் லேடியா இல்லை மோடியா ?கடைசியில் அவர் காலமாகிவிட்டதுதான் மிச்சம்.தமிழ்நாட்டில் மட்டும் புகழ் செல்வாக்கு மட்டும் இருந்தால் போதுமா? அதிமுகவாகட்டும் திமுகவாகட்டும் கும்மிடிப்பூண்டி தாண்டினால் தெரியாது .அதே போல ஓசூர் தாண்டினா தெரியாது. கன்னியாகுமரியை தாண்டின தெரியாது.ஆனால், வாய் மட்டும் பாருங்கள் உலகலாவியத்தைப் பற்றி பேசுவார்கள்