Load Image
dinamalar telegram
Advertisement

நடிகர் புனித் ராஜ்குமார் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

பெங்களூரு: -மறைந்த கன்னட திரைப்பட நடிகர் புனித் ராஜ்குமார் உடல் முழு மரியாதையுடன் பெங்களூருவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.


Latest Tamil News

கன்னட திரைப்பட நடிகர் புனித் ராஜ்குமார், 46, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று முன்தினம் பெங்களூரில் காலமானார். அவரது உடல் கன்டீரவா விளையாட்டு மைதானத்தில் பொது மக்கள் இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். மைதானத்தின் வெளிபுறத்தில் 5 கி.மீ., துாரம் வரை ரசிகர்கள் வரிசையில் காத்திருந்தனர். தமிழ் நடிகர்கள் சரத்குமார், பிரபுதேவா, அர்ஜுன், தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, வெங்கடேஷ், பாலகிருஷ்ணா, ஜீனியர் என்.டி.ஆர்., உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.


Latest Tamil News
உயர்கல்வி படிக்க சென்ற புனித் மூத்த மகள் திரிதி நேற்று மாலை அமெரிக்காவிலிருந்து பெங்களூரு திரும்பினார். தந்தையின் உடலைப் பார்த்து கதறி அழுதார்.புனித் தந்தை ராஜ்குமார், தாய் பர்வதம்மா ஆகியோரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்துக்கு அருகிலேயே, புனித் உடல் இன்று காலை முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில், முதல்வர் பசவராஜ் பொம்மை, அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


புனித் ராஜ்குமாருக்கு இறுதி அஞ்சலி செலுத்த ஏராளமான ரசிகர்கள், அவர் உடல் வைகக்கப்பட்ட மைதானம் வெளியே கூடினர்.




மைதானத்தை சுற்றியுள்ள கட்டடங்களில் மேற்கூறையில் இருந்தவாறு ரசிகர்கள், புனித் ராஜ்குமாருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.



வாசகர் கருத்து (8)

  • சீனி - Bangalore,இந்தியா

    புனித் ராஜ்குமார் என்ற சிறந்த நடிகரை, எல்லாவற்றையும் விட ஒரு சிறந்த மனிதநேயரை கர்நாடகா இழந்துவிட்டது என்பது உண்மை. ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • Vena Suna - Coimbatore,இந்தியா

    கூட்டம் கொரோனாவிற்கு கொண்டாட்டம். எனினும், புனித் சாந்தி அடைய அஞ்சலி.

  • பச்சையப்பன் கோபால் புரம். -

    கூத்தாடிகளுக்கெல்லாம் அரசு மரியாதை எதற்காக??. எல்லாம் வோட்டு பிச்சைக்காகத்தான்!!.

  • Veeramani Shankar - Hyderabad,இந்தியா

    Great soul

  • N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா

    ஆழ்ந்த அனுதாபங்கள் .நல்லவர்கள் ஏன் நீண்ட நாள் வாழ்வதில்லை என்று புரியவில்லை .இன்னும் கொஞ்சம் வாழ்ந்து இருக்கலாம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 
Advertisement