dinamalar telegram
Advertisement

டில்லி உஷ்ஷ்ஷ்: பிரதமரின் ஆலோசனை

Share
புதுடில்லி; சமீபத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், சக அமைச்சர்களுக்கு ஒரு யோசனை சொல்லியிருக்கிறார் பிரதமர். 'மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு வரும் போது ஒவ்வொரு வரும் தனித் தனி காரில் வர வேண்டாம். ஒரே காரில் இரண்டு அமைச்சர்கள் வரலாம். இதனால் பெட்ரோல் செலவு மிச்சம்' எனக் கூறியுள்ளார்.

மேலும், 'இரண்டு துறையைச் சார்ந்த அமைச்சர்கள் ஒரே காரில் வரும் போது, தங்கள் அமைச்சகம் தொடர்பான விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாம். இதனால் தேவையில்லாமல் அமைச்சகங்களுக்கு இடையே கோப்புகளால் ஏற்படும் தாமதத்தை தடுக்கலாம்' என்றும் கூறியுள்ளார் பிரதமர்.

'அமைச்சர்கள் ஒன்றாக வரும் போது, இணை அமைச்சர் ஒருவரையும் உடன் வைத்துக் கொள்ளுங்கள். அவர்களும் விபரங்களை தெரிந்து கொள்ளட்டும். அரசின் நலத் திட்டங்கள் மக்களை சென்றடைவது மட்டுமல்லாமல் வெளிப்படையாக தெரிய வேண்டும்' என்றும் அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் மோடி.

தமிழ்நாடு இல்லத்தில் தங்குவாரா?
தமிழக கவர்னர் ரவி, இதுவரை இரண்டு முறை டில்லி வந்து பிரதமர் உட்பட பல தலைவர்களைச் சந்தித்து விட்டார். வழக்கமாக டில்லி வரும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் தமிழ்நாடு இல்லத்தில் தான் தங்குவர். ஆனால் கவர்னர் தமிழ்நாடு இல்லத்தில் தங்கவில்லை. தமிழக கவர்னராக நியமிக்கப்படுவதற்கு முன், இவர் நாகாலாந்து கவர்னராக இருந்தார். இதனால், இவருக்கு டில்லியில் அரசு தரப்பில் ஒரு வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. இப்போது டில்லி வந்தால் அங்கு தான் தங்குகிறார் கவர்னர். 'கூப்பிட்டால் மட்டும் வந்தால் போதும்' என, கவர்னர் தரப்பிலிருந்து டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அதிகாரிகளுக்கு சொல்லப்பட்டுள்ளது.இதனால் கவர்னர், யாரை, எப்போது சந்திக்கிறார் என்ற விபரம் தமிழ்நாடு இல்ல அதிகாரிகளுக்கு தெரியாதாம். அடுத்த முறை டில்லி வரும் போதாவது தமிழ்நாடு இல்லத்தில் கவர்னர் தங்குவாரா என்பது தான் இங்குள்ள அதிகாரிகளின் பேச்சாக உள்ளது.

வெங்கையாவுக்கு முக்கியத்துவம்நடிகர் ரஜினிகாந்திற்கு 'தாதா சாகேப் பால்கே விருது' சமீபத்தில் வழங்கப்பட்டது. இந்த விருதை வழக்கமாக ஜனாதிபதி தான் கொடுப்பார். இந்த முறை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. இப்போது தேறி வருகிறார். தவிர, அரசு பணிகளில் அதிக கவனம் செலுத்துகிறார். இந்நிலையில், அரசு விழாக்களில் அதிகம் பங்கேற்பதை தவிர்க்கும்படி ஜனாதிபதிக்கு டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் தான், விருது வழங்கும் விழாவில் ஜனாதிபதிக்கு பதிலாக துணை ஜனாதிபதி பங்கேற்றார்.

கூட்டணிக்கு மல்லுக்கட்டுஅடுத்த மாதம் கேரளாவில் மார்க்., - கம்யூ., கட்சி மாநாடு நடக்க உள்ளது. அதில், 2024 லோக்சபா தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி சேர்வது என, முடிவு எடுக்கப்பட உள்ளது. இந்த மாநாட்டில் என்ன முடிவெடுக்க வேண்டும் என்பது குறித்து, டில்லியில் மத்திய கமிட்டி கூட்டத்தை நடத்தியது மார்க்சிஸ்ட். இதில் இரண்டு கோஷ்டிகள். ஒரு தரப்பினர், 'காங்கிரசுடன் கூட்டணி அமைக்கக் கூடாது' என்கின்றனர். மற்றொரு கோஷ்டியோ 'காங்கிரஸ் மட்டுமல்ல; மம்தாவின் திரிணமுல் காங்கிரசுடனும் கூட்டணி சேர வேண்டாம்' என்கிறது.கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரியோ, 'காங்கிரசுடன் கூட்டணி அமைக்க வேண்டும்' என, உறுதியாக கூறியுள்ளார். 'யெச்சூரி, மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலரா அல்லது காங்கிரசின் பொதுச் செயலரா...' என, கிண்டலடிக்கின்றனர், இடதுசாரி கட்சியினர்.

குப்பையால் கிடைத்த வருவாய்ஜனாதிபதி, பிரதமர், மத்திய அமைச்சர்கள் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது, அவர்களுக்கு விலை உயர்ந்த பரிசுகள் கொடுக்கப்படுகின்றன. சிலர் இவற்றை அருங்காட்சியகத்திற்கு அனுப்பி விடுகின்றனர். ஒரு முன்னாள் ஜனாதிபதி, இப்படி கிடைத்த விலை உயர்ந்த அன்பளிப்புகளை தன் வீட்டிற்கே எடுத்துச் சென்றுவிட்டார்.இந்த விஷயத்தில் பிரதமர் மோடி புதிய பாணியை பின்பற்றி வருகிறார். தனக்கு கிடைக்கும் அனைத்து பரிசுகளையும் ஏலம் விடுகிறார். இதன் வாயிலாக கிடைக்கும் பணம், அரசு கஜானாவிற்கு செல்கிறது. எவ்வளவு பணம் ஏலத்தினால் கிடைத்தது என அனைத்து விபரங்களையும் தன் இணையதளத்தில் பதிவிட்டு விடுகிறார் மோடி.சமீபத்தில் மோடி செய்த ஒரு விஷயம் அதிகாரிகள் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. கடந்த 1967 - 2014 வரை மத்திய அரசுக்கு வந்த பழைய கடிதங்கள் -கட்டு கட்டாக சாஸ்திரி பவன், உத்யோக் பவன் என மத்திய அரசின் அலுவலகங்களில் இடத்தை அடைத்து அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.'இவற்றை ஆய்வு செய்து பழைய பேப்பர் கடைக்கு போட்டு விடுங்கள்' என, உத்தரவிட்டாராம் மோடி.ஒரு மூத்த அதிகாரி தலைமையில் ஒரு குழு இந்த பழைய குப்பையை ஆராய்ந்து கடைக்கு போட்டது. பல லாரிகளில் இந்த குப்பை ஏற்றிச் செல்லப்பட்டது. இதன் வாயிலாக அரசுக்கு 4.5 கோடி ரூபாய் கிடைத்தது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (8)

 • Sathyanarayanan Sathyasekaren -

  Please don't repeat the same comment

 • ganesha - tamilnadu,இந்தியா

  இது நாட்டுக்கு உண்மையானவர்கள் மட்டும் சொல்லக்கூடியது.

 • Sundar Anand - Chennai,இந்தியா

  அருமையான யோசனை

 • அப்புசாமி -

  ஆமா... நான் மட்டும் தனியா சொகுசு விமானத்தில் போவேன். பைலட் கூட வரலாம். அவரோட தகவல்கள் பகிர்ந்து கொள்வேன்.

 • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

  நமது தமிழக முதல்வரும் இதனை கவனத்தில் கொள்வாரா?

Advertisement