Load Image
dinamalar telegram
Advertisement

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் பதவிக்காலம் நீட்டிப்பு

Tamil News
ADVERTISEMENT
புதுடில்லி: இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக உள்ள சக்தி காந்த தாஸின் பதவிக்காலம் மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சக்தி காந்த தாஸ், கடந்த 2018-ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கியின் 25வது கவர்னராக பொறுப்பேற்றார். வரும் டிசம்பர் மாதம் இவரின் பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில், அவரின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு தரப்பில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ‛10 டிசம்பர், 2021ம் தேதி முதல் 3 ஆண்டுகளுக்கு அல்லது அடுத்த உத்தரவு வரும் வரையில் சக்திகாந்த தாஸை இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக மீண்டும் நியமிக்க அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest Tamil Newsசக்தி காந்த தாஸ், இதற்கு முன்னர் இந்தியாவின் 15ம் நிதி ஆணையத்தின் உறுப்பினராகவும், ஜி-20 கூட்டமைப்பில், இந்தியப் பிரதிநிதியாகவும் இருந்துள்ளார். மேலும், பொருளாதார விவகாரச் செயலாளர், வருவாய்த்துறைச் செயலாளர் உட்பட இந்திய ஆட்சிப் பணியில் மத்திய மற்றும் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


வாசகர் கருத்து (16)

  • sami srinivasaraghavan - Chennai,இந்தியா

    Miga sariana mudivu. Anubavam vaindhavar. Nerukkadi nilagalai nangu samalikkirar. Best wishes.

  • Dr SS - Chennai,இந்தியா

    வேறு யாரும் விருப்பம் இல்லை என்பதுவே நிதர்சனம்

  • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    MMS ji சாரு, Mr PC சாரு, இப்டீன்னு இவுங்கெல்லாம் வந்த ப்றந்தான் இந்தியாவுல எக்கனாமி பளயபடி மேல எட்டிப்பாக்கும் 📈⏫☝️

  • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    பொருளாதாரந் தெரியாதுதுனால இவுனுக்கு எக்ஸ்டென்சன் குடுத்ருக்கான்

  • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    படிச்சிருந்தாலும் இவுனுக்கு பொருளாதாரந் தெரியாது

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement