dinamalar telegram
Advertisement

ஜி 20 மாநாடு: ரோம் சென்றடைந்தார் பிரதமர் மோடி

Share
புதுடில்லி : 'ஜி 20' மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இத்தாலி தலைநகர் ரோம் சென்றடைந்தார்.

'ஜி ௨௦' அமைப்பில் உள்ள நாடுகளின் மாநாடு, ஐரோப்பிய நாடான இத்தாலி தலைநகர் ரோமில் துவங்குகிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, தனி விமானம் மூலம் இத்தாலி தலைநகர் ரோம் சென்றடைந்தார்.
புறப்படுவதற்கு முன் பிரதமர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 'ஜி 20' மாநாட்டில் பங்கேற்க இத்தாலி செல்கிறேன். பொருளாதார வளர்ச்சி, கொரோனா தொற்று, தட்பவெப்ப மாற்றம் உள்ளிட்ட பல பிரச்னைகள் குறித்து, உலக நாடுகளின் தலைவர்களுடன் விவாதிப்பேன். மேலும் வாடிகனுக்கு சென்று போப் பிரான்சிசை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளேன். மாநாடு முடிந்தபின், ஸ்காட்லாந்து தலைநகர் கிளாஸ்கோவில் நடக்கும் தட்பவெப்ப மாற்றம் தொடர்பான மாநாட்டில் பங்கேற்று, நாடு திரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (18)

  • yavarum kelir - yadhum vore ,இந்தியா

    all the roads lead to modi.

  • yavarum kelir - yadhum vore ,இந்தியா

    ஆல் the

  • Arasu - OOty,இந்தியா

    எப்பவுமே டூர் அஞ்சு ஆறு ஒரு வாரம் தான் ...ஒரு நாள் ,இரண்டு நாள் கிடையாது

  • sankaseshan - mumbai,இந்தியா

    முதல்ல சொல்லி மாநில வரியை குறைக்க சொல்லு சந்தானம்

  • ஜெயந்தன் - Chennai,இந்தியா

    ஜி .... 420 ...மாநாடு

Advertisement