dinamalar telegram
Advertisement

ஊழல் அதிகாரிகள் எட்டு பேர் டிஸ்மிஸ்: ஜம்மு-காஷ்மீர் அரசு நிர்வாகம் அதிரடி

Share
ஸ்ரீநகர்: காஷ்மீரில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான 8 அரசு அதிகாரிகளை 'டிஸ்மிஸ்' செய்து யூனியன் பிரதேச அரசு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் 8 உயரதிகாரிகள் மீது ஊழல்புகார்கள் கூறப்பட்டன.இது தொடர்பாக விரிவான விசரணைக்கு உத்தரவிடப்பட்டது. விசாரணையில் அவர்கள் தங்கள் பதவியை தவறாக பயன்படுத்தி லஞ்சம்,ஊழலில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டது.

இதையடுத்து காஷ்மீர் யூனியன் பிரதேச அரசின் அத்தியாவசிய பணிகள் ஒழுங்குமுறை சட்டம், பிரிவு 226 (2) ன் கீழ், எட்டு ஊழல் அதிகாரிகள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து உடனடியாக 'டிஸ்மிஸ்' செய்து ஜம்மு-காஷ்மீர் அரசு நிர்வாகம் உத்தரவிட்டது.

11 ஊழியர்கள் 'டிஸ்மிஸ்'முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன் ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக அரசு ஊழியர்கள் சிலர் செயல்படுவதாக, யூனியன் பிரதேச நிர்வாகத்துக்கு புகார்கள் வந்தன. இது பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.விசாரணையில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் 11 ஊழியர்கள், பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்படுவது உறுதியானது. இதையடுத்து அவர்களை யூனியன் பிரதேச நிர்வாகம் டிஸ்மிஸ் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (5)

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  போட்டோவில் இருக்கும் அந்த பதினான்கு அதிகாரிகளில் யார் யார் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதை வட்டமிட்டு காண்பிக்கலாமே?

 • R VENKATARAMANAN - Chennai,இந்தியா

  ஜம்மு காஷ்மிரில் லஞ்சம் ஊழலில் ஈடு பட்ட அதிகாரிகளை நீக்கியது நல்ல விஷயம்தான். இது இந்தியா பூராவிலும் உள்ளது. தமிழ்நாட்டில் லஞ்சம் கொடுக்காமல் ஒரு வேலையும் பெறமுடியாது. இதில் ஆண்ட ஆளுகின்ற் கழகங்கள் எல்லாமே லஞ்சத்தில் திளைகின்றனர். தற்போள்ள அரசியல் தலைவர்கள் அனைவரது பூர்வீகங்கள் ஆராயப்பட்டால் அவர்களிடம் உள்ள சொத்துக்கள் அனைத்தும் அரசுடைமை ஆக்கலாம். அவ்வளவும் லச்சத்தின் மூலமே சேர்த்தவைகளாகும்.தற்போது கவரனருக்கு வழங்கவுள்ள தனி அதிகாரத்தின் படி சந்தேகம் உள்ள மந்திரிகள், கொன்சிலர்கள் மீது நடவடிக்கை எடுக்க லச்சஒழிபு துறைக்கு உத்திராவிட கவர்னருக்கு அதிகாரம் உள்ளது. லஞ்ச புகார்களை நேரிடையாக கவர்னருக்கு அனுப்ப மின் அஞ்சல் செய்ய பொது மக்களுக்கு தெரிவிக்கவேண்டும். அவ்வாறு பெரும் தகவல்களை லஞ்சவொழிப்பு தீவிரமாக கண்காணித்து கவர்னருக்கு பரிந்துரை செய்யவேண்டும்.. உண்மையிலையென்றால் புகார்தாரர் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழ்நாட்டில் லஞ்சம் பெறாத துறையே இல்லை. லஞ்சம் நிரூபிக்கப்பட்டால் உடனிடியாக டிஸ்மிஸ் செய்து ஓய் ஊதிய பலன்களையும் நிறுத்தவேண்டும். இப்படி நடவடிக்கை இருக்கும் என்று தெரிந்தால் லஞ்சலாவண்யமே நடக்காது

 • Guna Gkrv - singapore,சிங்கப்பூர்

  இந்த மாதிரி நடந்தால் அந்தந்த அரசை பாராட்டுவார்கள் ஆனால் அப்படி நடக்குமா?ஹ்ம்ம் எல்லாம் காலம் கடந்துவிட்டது இன்னைக்கு செத்த நாளைக்கு பால் என்பதை எல்லோரும் குறிப்பாக அரசியல் வாதிகள் மறந்து விடுகிறார்கள் மற்றும் அரசு அதிகாரிகளும் /////'''''''

 • Vaiyapuri Rajendran - Chennai,இந்தியா

  Very good. இது போல தமிழ் நாட்டில் செய்ய வேண்டும் .லஞ்சம் ஒழிய கடும் நடவடிக்கை தேவை..நிரந்தர பணி நீக்கம் ஓய்வூதியம் கிடையாது.என்று அறிவித்தால் மட்டுமே லஞ்சத்தை ஒழிக்க முடியும்..முன்னிலையில் உள்ள துறை பத்திர பதிவு துறை, டிரான்ஸ்போர்ட் துறை, வருவாய் துறை , கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 • N.Purushothaman - Cuddalore,மலேஷியா

  இந்தியா முழுவதிலும் இப்படி லஞ்ச ஊழலில் திளைக்கும் அரசு அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்தால் அரசுத்துறை பொலிவு பெரும் ....எந்த மாநில அரசு செய்தாலும் விடியல் அரசு மட்டும் அப்படி ஒரு நடவடிக்கையை எடுக்காது ....

Advertisement