dinamalar telegram
Advertisement

பெயரை மாற்றியது பேஸ்புக்: புதிய பெயர் மெட்டா

Share
சான் பிரான்சிஸ்கோ: சமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமாக விளங்கும் 'பேஸ்புக்'கின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. மெட்டா (Meta) என புதிதாக பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.

'மெட்டா'



சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக், அடுத்தகட்டமாக மெய்நிகர் ஆன்லைன் உலகமான 'மெட்டாவெர்ஸ்' நோக்கி தன்னுடைய கவனத்தை திருப்பி வருவதாகவும், அதனை பிரதிபலிக்கும் வகையில், நிறுவனத்தின் பெயரை மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இதனை தொடர்ந்து சமீபத்தில் 10 ஆயிரம் பேர்களை, மெட்டாவெர்ஸ் பணிக்கு அமர்த்த இருப்பதாக பேஸ்புக் தெரிவித்திருந்திருந்தது.
இந்நிலையில், 'பேஸ்புக்' ஆண்டு கூட்டத்தின்போது, பேஸ்புக் தாய் நிறுவனத்தின் பெயரை 'மெட்டா' என மாற்றி மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார். 'சமூக பிரச்னைகளுடன் போராடி நிறைய கற்றுக் கொண்டோம்; கற்றுக் கொண்ட அனைத்தையும் கொண்டு புதிய அத்தியாயத்தை உருவாக்க வேண்டிய நேரம் இது' என அவர் கூட்டத்தில் பேசி உள்ளார். அதே சமயம் தங்கள் 'ஆப்'களும், அவற்றின் பிராண்டுகளும் மாறவில்லை எனவும், அவர் தெரிவித்தார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (9)

  • Paraman - Madras,யூ.எஸ்.ஏ

    "மொட்டை" என்ற பெயர் தான் இந்த தீய சக்தி நிறுவனத்திற்கு ஏற்ற பெயராக இருக்கும் உலக மக்களுக்கு மொட்டை, தேசங்களின் நலன்களுக்கு மொட்டை, சமூக இனக்கத்திற்கு மொட்டை, இணைய நீதிகளுக்கு மொட்டை, என்று சுத்தி இருக்கும் அனைவருக்கும் மொட்டை அடிப்பதையே கம்பனி கொள்கையாக கொண்டு இருக்கும் மட்டமான திரூட்டு யுதனின் இழுத்து மூடப்படவேண்டிய ஒரு நிறுவனம் இது. ஊரை ஏமாற்ற இந்த பெயர் மாற்றம்

  • Paraman - Madras,யூ.எஸ்.ஏ

    ''மொட்டை'' என்பது தான் இந்த தீய சக்தி niruva

  • தமிழ் நாட்டு அறிவாளி - Chennai,இந்தியா

    கொரோனா எவ்வாறு முகக்கவசம் அணிய வைத்ததோ அதுபோல் மார்க் ஜுக்கர்பெர்க் இனி கண்களில் ஒரு கண்ணாடியும் காதில் ஒரு ஹெட்போன் இல்லாமல் மக்கள் வெளிய செல்லக் கூடாது என முடிவு எடுத்துள்ளார்.

  • ganapati sb - coimbatore,இந்தியா

    muganool yena thamil paduthapatta nangu prabalamaana peyarai maatruvathan kaaranam therivikkapadavillaiye metta yenbathai thamilil ini yennavendru solvathu

  • Malarvizhi - Hyderabad,இந்தியா

    தமிழினம் இதனை ஏற்குமா?

Advertisement