dinamalar telegram
Advertisement

ஆசிய வரலாற்றில் முதன்முறையாக ஒரே இடத்தில் கைப்பற்றப்பட்ட ஐந்தரை கோடி போதை மாத்திரைகள்..!

Share
லாவோஸ்: ஆசிய வரலாற்றில் முதன்முறையாக தாய்லாந்து நாட்டின் லாவோஸ் நகரில் கண்டைனர் லாரியில் பல மில்லியன் டாலர் மதிப்புள்ள ஐந்தரை கோடி போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இச்சம்பவம் பல நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கைதுக்குப் பிறகு இந்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர்(என்சிபி) சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் பல கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் தற்போது புழங்கி வரும் நிலையில் தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் உள்ள லாவோஸ் நகரில் அந்நாட்டு போலீசார் ஆசிய அளவில் மிகப்பெரிய போதை மருந்துகளை கைப்பற்றியுள்ளனர்.


'மெத்' என்று சுருக்கமாக அழைக்கப்படும் மெத்தாம்பிடாமைன் என்கிற போதை மாத்திரை மிகவும் பிரபலமானது. மியான்மார், தாய்லாந்து ஆகிய எல்லைகளில் இந்த போதைப்பொருளை கடத்த மிகப்பெரிய கும்பல் செயல்பட்டு வருகிறது. இந்த கும்பலை கைது செய்ய தாய்லாந்து போலீசார் பல காலமாக நிழல் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் லாவோஸ் நகரில் போலீசார் சோதனையில் பீர் பாட்டில்களை எடுத்து சென்ற கண்டெய்னர் லாரியில் பல மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஐந்தரை கோடி மெத் போதை மாத்திரைகள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


தாய்லாந்திலிருந்து இவை இந்தியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல தெற்காசிய நாடுகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு இடைத்தரகர்களும் உள்ளனர். போதை மாத்திரைகளை பல்வேறு நாட்டு எல்லைகளை தாண்டி கொண்டு சேர்ப்பது, மூன்றாம் நபரிடம் விற்பது உள்ளிட்ட செயல்களுக்கு பாங்காக் நகரை தலைமையிடமாகக் கொண்டு சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் செயல்பட்டு வருகிறது.

மலேசியா, பிலிப்பைன்ஸ், கம்போடியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்த மாத்திரைகள் கடத்தப்படுகின்றன. ஆசிய வரலாற்றில் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் இத்தனை கோடி போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

உயர்ரக பார்கள், ரெஸ்டாரன்ட் கள், சுற்றுலாத்தலங்கள் ஆகிய இடங்களில் இந்த மாத்திரைகளை விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. குறிப்பாக செல்வந்தர்களின் வாரிசுகள் பலர் இவற்றை பயன்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த மாத்திரைகளுடன் 1500 கிலோ எடை கொண்ட கிரிஸ்டல் வடிவிலான மெத்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இத்தகவலை ஐநா., போதைப்பொருள் தடுப்பு பிரிவு தூதர் ஜெரமி டக்லஸ் உறுதி செய்துள்ளார்.

கடந்த ஆண்டு லாவோஸ் நகரில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களைக் காட்டிலும் தற்போது மூன்று மடங்கு அதிக போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த போதை மாத்திரைகளை சுமந்து சென்ற லாரி லாவோ பிருவரி என்கிற பீர் தயாரிப்பு நிறுவனத்துக்குச் சொந்தமானது. போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதற்கும் தங்களது பீர் தயாரிப்பு நிறுவனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக மியான்மர் நாட்டின் ஷான் பகுதி போதைப்பொருள் கடத்தலின் இதயப் பகுதியாக திகழ்ந்து வந்தது. இங்கிருந்து ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு போதைப் பொருட்கள் கடத்தப்படும். கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதிமுதல் மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து அங்கு வன்முறை வெறியாட்டங்கள் நடைபெற்று வருவதால் இந்த போதை பொருட்கள் தாய்லாந்துக்கு இடம் மாற்றப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (10)

 • DVRR - Kolkata,இந்தியா

  லாவோஸ் இது இந்தியில் லாவோ என்று அர்த்தம் கொண்டால் "கொண்டுவா" என்று அர்த்தம் வரும் அதர்க்கக்கத்தான் இவ்வளவு கொண்டு வந்திருக்கிறார்களா இவர்கள் போதை மாத்திரைகளை

 • VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா

  இதை பயன் படுத்தியவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இது இந்திய சட்டம்

  • திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் - Chennai,பிரான்ஸ்

   பலரும் பல விதத்தில் பணம் பார்த்து விட்டார்களே அடுத்த TARGET தனுஷ் மாட்றதெல்லாம் விலாங்கு மீன்கள்தான் சாரி BLUE VALES தான் GOLDEN HARVEST நடத்துங்க நடத்துங்க இதுதான் இந்திய அரசு

  • DVRR - Kolkata,இந்தியா

   பெட்டி கைமாறினால் உடனே அவர்களை விட்டு விடும் இல்லையென்றால் ஜல்லடை மேலே தங்க வைத்து விடும்

 • சீனி - Bangalore,இந்தியா

  ஜனநாயகம் இல்லாத ராணுவ ஆட்சி நடக்கும் நாட்டில் இது குடிசைத்தொழில் மாதிரி நடந்து வருகிறது, அதிகாரிகளுக்கு கமிசன் இருப்பதால் கண்டுகொள்வதில்லை. லாவோஸ் என்பது தனி நாடாகும், செய்தியில் உள்ள மாதிரி தாய்லாந்தில் இல்லை, லாவோஸ் எல்லை 800 கிமீ அப்பால் உள்ளது. தாய்லாந்து-மியன்மார்-லாவோஸ் மூன்று நாடுகளும் போதை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக மக்கள் அதிக ஆபத்தான போதை பயன்படுத்துவதால், தாய்லாந்து கஞ்சாவை சட்டபூர்வமாக அனுமதித்துள்ளது. அடுத்த தலைமுறைக்கான சவால் தான் போதை. சீமான் ஒன்றும் தெரியாமல் கானுக்கு ஆதரவு தெரிவிக்கிறார், அது தவறாகும்.

 • duruvasar - indraprastham,இந்தியா

  இந்தியாவில் இந்த புனித பணியின் பிண்ணனியில் ஈடுபட்டிருப்பவர்கள் பிரபல அரசியல்வாதிகள் மற்றும் நடிகர் நடிகைகள் என்பதால் இது ஒரு சக்திவாய்ந்த கும்பலாக இருக்கிறது. விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய ஊடகங்கள் கட்சி சார்புடன் செயல்படுவதால் உண்மையை கூறுவதில்லை. செய்திகளே சார்பு நிலைப்பாட்டின் அடிப்படையில்தான் வெளியிடப்படுகின்றன/ விவாதிக்கப்படுகின்றன. உதாரணம். நடிகர் சுஷாந் மரணம்.

 • Ramesh - chennai,இந்தியா

  எத்தனையோ ஊழல்கள் நடக்கின்றன. போதை பொருட்களும் இருக்கட்டும். பாலிவுட்,பணக்காரர்கள் அழியட்டும்.

Advertisement