dinamalar telegram
Advertisement

நாளை முதல் போக்குவரத்து மாற்றம்!

Share
Tamil News
திருப்பூர்: தீபாவளியையொட்டி, திருப்பூர், குமார் நகர், பழைய வடக்கு வட்டார அலுவலக காலியிடத்தில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது.நாளை முதல் நவ. 4 வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


கரூர், திருச்சி, பெரம்பலுார், அரியலுார், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் நாகப்பட்டினம் மாவட்டங்களில் இருந்து வரும் பஸ்கள் அனைத்தும், காங்கயம் ரோட்டில் இருந்து முதலிபாளையம் பிரிவு, பெருந்தொழுவு ரோடு வழியாக கோவில் வழிய பஸ் ஸ்டாண்டுக்கு சென்றடைய வேண்டும். பின், இதே வழியில் திரும்பி செல்ல வேண்டும் ஈரோடு, சேலம் மாவட்டங்களில் இருந்து ஊத்துக்குளி ரோடு வழியாக வரும் பஸ்கள், கூலிப்பாளையம் நால்ரோட்டை அடைந்து வாவிப்பாளையம், நெருப்பெரிச்சல் ஆகிய ரிங் ரோடு வழியாக பூலுவபட்டியை சென்றடைந்து பெருமாநல்லுார் ரோட்டிலிருந்து புதிய பஸ் ஸ்டாண்டை சென்றடைய வேண்டும்.
அவிநாசி வழியாக கோவை, மேட்டுப்பாளையம், நீலகிரி, மைசூர், சத்தியமங்கலம், புளியம்பட்டி, பண்ணாரி ஆகிய மாவட்டங்களில் இருந்து வரும் பஸ்கள், குமார் நகரில் உள்ள திருப்பூர் பழைய வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் மைதானத்துக்கு வந்தடைந்து பயணிகளை இறக்கி, ஏற்றி அதே வழியில் திரும்ப செல்ல வேண்டும்.
ஊத்துக்குளி ரோட்டில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் கோர்ட் ரோடு வழியாக குமரன் ரோட்டுக்கு செல்லக் கூடாது. குமரன் ரோட்டிலிருந்து ஊத்துக்குளி ரோட்டுக்கு அனைத்து வாகனங்களும் செல்லலாம். கோர்ட் ரோடு ஒருவழி பாதையாக செயல்படும்.
பல்லடம் ரோட்டில் இருந்து வரும் பஸ்கள் அனைத்தும் பழைய பஸ் ஸ்டாண்டுக்கு வந்து பயணிகளை ஏற்றி இறக்கி செல்லலாம்.
திருப்பூர் மாநகர பஸ்கள் கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் இருந்து, பழைய பஸ் ஸ்டாண்ட், யுனிவர்சல் தியேட்டர் அருகில் உள்ள பஸ் ஸ்டாண்ட், குமார் நகரில் உள்ள தற்காலிக பஸ் ஸ்டாண்ட் வழியாக, திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்ட் வரை சென்றடையும் பொருட்டு, சராசரியாக, 10 நிமிடம் இடைவெளியில் பஸ்கள் இயக்கப்படும். மீண்டும், கோவில்வழி பஸ் ஸ்டாண்ட் சென்றடைய உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, கலெக்டர் வினீத் கூறியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement