கோவை: தமிழக மின்வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவுப்படி, வார்டு வாரியாகச் சென்று, மக்களை சந்தித்து, அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க, 'மக்கள் சபை' என்கிற திட்டத்தை, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் முன்னெடுத்துள்ளன. உள்ளாட்சி தேர்தல் வேலை துவங்கியிருக்கும் சமயத்தில், மக்களை நேரடியாக சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டிருப்பதால், தி.மு.க.,வினர் உற்சாகம் அடைந்திருக்கின்றனர். அ.தி.மு.க.,வினர் 'அப்செட்'டாகி இருக்கின்றனர்.
கடந்த சட்டமன்ற தேர்தலில், கோவை மாவட்டத்தில், 10 தொகுதிகளையும் அ.தி.மு.க., கூட்டணி கைப்பற்றியது. இது, தமிழகத்தை ஆளும் தி.மு.க.,வுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோல், மாவட்ட ஊராட்சியும், கணிசமான ஊரக உள்ளாட்சிகளும் அ.தி.மு.க., பிடியில் இருக்கின்றன.இச்சூழலில் வரப்போகும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையும் கோட்டை விட்டு விடக்கூடாது என்பதற்காக, உளவுத்துறை மூலமாக, கோவையின் தற்போதைய நிலையை, தமிழக அரசு ஆய்வு செய்து, அறிக்கையாக பெற்றது. அப்போது, மாவட்ட அளவில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளும், கடந்த அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் துவக்கப்பட்டவை. சட்டசபையில் அறிவித்த திட்டங்கள் பலவும் மக்களை இன்னும் சென்றடையவில்லை. மேலும், மக்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்வதில் சுணக்கம் இருப்பதால், அதிருப்தி நிலை நிலவுவதாக, அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்த, மாவட்ட பொறுப்பாளராக, தமிழக மின்வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டார். அவர், அரசு உயரதிகாரிகளுடன் ஆலோசித்து விட்டு, தி.மு.க., அலுவலகம் சென்றார். முக்கிய நிர்வாகிகளை சந்தித்தபோது, 'வார்டு வாரியாக சென்று மக்களை சந்திப்போம்; அவர்களின் குறைகளை தீர்ப்போம். ஓட்டு தானாக நமக்கு விழும்' என்று கூறினார்.அதை செயல்படுத்தும் விதமாக, 'மக்கள் சபை' கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசு அதிகாரிகளுடன் வார்டு வாரியாகச் சென்று மக்களிடம் குறைகேட்பது, மனுக்கள் பெறுவது, அவற்றுக்கு உடனுக்குடன் தீர்வு காண்பதன் மூலம் நகர்ப்புற உள்ளாட்சிகளில் ஓட்டு சதவீதத்தை அதிகரிப்பது இதன் நோக்கம்.வார்டுக்கு ஓரிடம்கோவை மாநகராட்சி பகுதியில், ஒவ்வொரு வார்டிலும் ஒரு இடம் வீதம், 100 இடங்களில் மக்கள் சபை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. மாநகராட்சியுடன் தேர்தலை சந்திக்கப்போகும் 33 பேரூராட்சிகள், 7 நகராட்சிகளில், மொத்தம், 50 இடங்களில் இந்த மக்கள் சபை கூட்டம் நடத்தப்படுகிறது.
வரும், 30 முதல் நவ., 21 வரை நடக்கும் இக்கூட்டங்களில் சாலை, குடிநீர், பாதாள சாக்கடை, பொதுக்கழிப்பிடம், தெருவிளக்கு, சுகாதாரம், திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, அரசு சான்றுகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, மின்னணு குடும்ப அட்டை, மகளிர் குழு கடனுதவி, கல்விக்கடன், சுயதொழில் புரிய கடனுதவி, தனியார் துறை வேலைவாய்ப்பு, மருத்துவ காப்பீடு அட்டை வழங்குதல், இலவச தையல் இயந்திரம் என, எந்த கோரிக்கையாக இருந்தாலும் மனுக்களாக கொடுக்கலாம்.

அ.தி.மு.க., ஸ்டைலில்...
கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன், அ.தி.மு.க., தரப்பில் ஊருக்கு ஊர் முகாம் நடத்தி, மனுக்கள் பெற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினர். அதேபோல், நாமும் வழங்கினால் ஓட்டுக்களை அள்ளி விடலாம் என்பது ஆளும்கட்சி திட்டமாக உள்ளது. மக்களுடன் நெருக்கமாவதற்கு இக்கூட்டங்கள் நல்வாய்ப்பாக இருக்கும் என்பதால், தி.மு.க.,வினர் உற்சாகமாகி இருக்கின்றனர்.
சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிகமான இடங்களை கைப்பற்றியது போல், நகர்ப்புற உள்ளாட்சிகளை மொத்தமாக கைப்பற்றும் ஆளுங்கட்சியினரின் இத்திட்டம், அ.தி.மு.க.,வினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!