dinamalar telegram
Advertisement

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி; பழனிசாமி உதவியாளர் மீது வழக்குப்பதிவு

Share
சேலம்: அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 17 லட்ச ரூபாய் மோசடி செய்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் மீது இரண்டு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரிடம் போலீசார் ரகசியமாக விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.

சேலம் மாவட்டம் ஓமலூர் தின்னப்பட்டி அருகே உள்ள பூசாரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணி. இவர் முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளராக கடந்த 10 ஆண்டு காலமாக இருந்து வருகிறார். பழனிச்சாமிக்கு உதவியாளராக இருந்தபோது ஓமலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல நபர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்றதாக பல்வேறு புகார்கள் இருந்து வந்தன.

இந்த நிலையில் கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவருக்கு அரசு போக்குவரத்து கழகத்தின் உதவி பொறியாளராக வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.17 லட்சத்தை தமிழ்ச்செல்வன், புரோக்கர் செல்வகுமார் மூலமாக பணத்தைப் பெற்று ஏமாற்றியுள்ளார். இது தொடர்பாக தமிழ்ச்செல்வன் கடந்த மாதம் 26ம் தேதி சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து மணி மீது 120-பி, 420 ஆகிய இரண்டு பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (19)

 • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

  லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் என்பது வெறும் ஏட்டளவில் தான். பல கோடிகளை தேர்தலில் செலவிட்டு ஜெயித்து வருவதே இதுபோல் பலவழிகளில் ஐந்தாண்டுகளில் சம்பாதிக்க தான். கோர்ட்களில் முழுசுதந்திரத்துடன் செயல்பட்டால் ஒரளவு கட்டுப்படும். அங்கேயும் கறுப்பாடுகள் உள்ளன. மத்தியரசும் நீதிமன்றங்களை மறைமுகமாக கட்டுப்படுத்துகின்றன.

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  அடடே... நம்ம அணிலுக்கு நிகரான திறமைசாலியா தெரியுதே... விடியலுக்குள் வளைச்சு போடுங்கப்பா....

 • DVRR - Kolkata,இந்தியா

  ஸ்டாலின் வந்ததிலிருந்து போலீசுக்கு நெறைய வேலை அதிமுக ஆட்களை எப்படியாவது சிக்க வைக்க

 • DVRR - Kolkata,இந்தியா

  அப்படியா??இப்படி எல்லாம் வழி இருக்கின்றது எடப்பாடியை கொஞ்சம் ஆட்டுவிக்க ???விரைவில் எதிர்பாருங்கள் அடுத்தது பன்னீர் செல்வத்தின் உதவி அலுவலரா ???

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  எடப்பாடியாரின் அதிகாரத்தை அவரின் உதவியாளராக இருந்து கொண்டு சரியான நேரத்தில் உபயோகித்து கடைசியில் மாட்டிக் கொண்டு விழிக்கும் ஒரு மனிதர்.இதெல்லாம் இவர் அப்போதே யோசித்திருக்கவேண்டும்.காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்ள நினைத்தார் போலும்.

Advertisement