dinamalar telegram
Advertisement

வங்கதேச கலவர குற்றவாளிகள் கோர்ட்டில் ஒப்புதல் வாக்குமூலம்?

Share

டாக்கா : வங்கதேசத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு மதக்கலவரத்தை துாண்டிவிட்ட முதன்மை குற்றவாளிகள் இருவர், தங்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில் 17 கோடி மக்கள் வசிக்கின்றனர். இதில் 10 சதவீதம் பேர் ஹிந்துக்கள். இங்கு சமிபத்தில் முஸ்லிம் மதத்தை இழிவுபடுத்தும் விதமான கருத்து ஒன்று, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து ரங்க்பூர் பகுதியில் நடந்த துர்கா பூஜையின் போது ஹிந்து கோயில்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

ஹிந்துக்களின் வீடுகள் தீயிட்டு எரிக்கப்பட்டன. 70க்கும் மேற்பட்ட வீடுகள் கலவரத்தில் சேதம் அடைந்தன. இந்த விவகாரம் தொடர்பாக 24 ஆயிரம் பேர் மீது சந்தேகத்தின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டது. இதில் 683 பேர் கைது செய்யப்பட்டனர். எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் முதன்மை குற்றவாளிகளான ஷாய்கத் மற்றும் அவரது கூட்டாளி ரபியுல் இஸ்லாம் ஆகியோர் சமீபத்தில் கைதாகினர். இவர்கள் இருவரும் ரங்க்பூர் மாஜிஸ்திரேட் முன் ஆஜர் படுத்தப்பட்டனர். அப்போது, மதக்கலவரத்தை துாண்டும் நோக்கத்துடன் தன் சமூகவலைதள கணக்கில் இருந்து முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை திட்டமிட்டு பரப்பியதாக ஷாய்கத் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே திட்டமிட்டபடி இதுகுறித்து ஒலி பெருக்கி வாயிலாக அறிவிப்புகளை வெளியிட்டு முஸ்லிம்களை துாண்டும் பணியை ரபியுல் இஸ்லாம் மேற்கொண்டதாக மாஜிஸ்திரேட்டிடம் அவர்கள் ஒப்புக் கொண்டதாக நீதிமன்ற ஊழியர்கள் தெரிவித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (13)

 • selva kumar - port blair,இந்தியா

  அகண்ட பாரதத்தின் ஒரு நிலத்தை மதம் பேசி பிரித்து ,இப்போது மிச்ச சொச்ச இந்துக்களையும் கொல்ல நினைக்கும் மூடர் கூட்டத்துக்கு மதம் ஒரு கேடா . மனிதர்களை அடித்து கொன்று, இவர்கள் மதத்தை யாருக்காக வளர்க்கப் போகிறார்கள் .இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று கூறித்தெறியும் நண்பர்களிடம் நான் கேட்கிறேன் இதுதான் உங்கள் அமைதி மார்க்கத்தின் நோக்கமா ? இதைத்தான் உங்கள் மதம் போதிக்கிறதா? .மனிதர்களாக இருக்க முதலில் கற்றுக்கொள்ளுங்கள் . இதுபோன்று மதம் பிடித்து மனிதர்களை அழிப்பதை அந்த அல்லாவே ஏற்றுக்கொள்ள மாட்டார் .

 • Rajendra kumar - Coimbatore,இந்தியா

  முஸ்லிம்களில் கால்வாசி தீவிரவாதிகளை எதிர்த்து பேச, திருந்த சொல்ல மீதமருக்கும் மற்ற முஸ்லிம்கள்(ஒரு சிலரே எதிர்க்கின்றனர்) தயங்குவதாலும், மறைமுக ஆதரவளிப்பதாலும் மொத்த முஸ்லிம்களுக்கும் உலகம் முழுவதும் கெட்ட பெயர். முஸ்லிம் என்றாலே தீவிரவாதியாக/ அதை ஆதரிப்பவராக உலகமே நினைக்கிறது.

 • திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா

  \\\\\\\\\\\\\\\\\ பெரும்பான்மை மக்களுக்கு ஏதாவது நடந்தால் ஏன் கண்டு கொள்வதில்லை ?\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\பெரும்பான்மை சாதி மதம் பார்த்து தன் அராஜகங்களை கண்டுகொள்ளாதவர்களாக பார்த்து ஓட்டுபோடுவதில்லை, எனவே கூட்டு ஓட்டு வேட்டையே சிறுபான்மை எனப்படும் ஓட்டு வங்கி,,,

 • தத்வமசி - சென்னை ,இந்தியா

  காஷ்மீரிலும் இப்படித்தான் இவர்கள் ஒலிபெருக்கி மூலம் மிரட்டி பண்டிட்டுக்களை விரட்டினார்கள். காஷ்மீர் அரசு கைகட்டிக் கொண்டு இருந்தது. மெஜாரிடியுடன் ஒன்றிய அரசினை ஆண்டு வந்த அப்போது பெரிய கட்சி காங்கிரஸ் என்ன செய்தது ? இன்று வரை அதற்காக குரல் கொடுக்கவில்லை. காங்கிரஸ் முழு ஆட்சியில் பல காலம் இருந்தார்கள். இப்போதும் பிஜேபி ஆளும் மாநிலத்தில் சிறுபான்மை மக்களுக்கு என்று மூக்கு வியர்த்து செல்லும் இவர்கள், பெரும்பான்மை மக்களுக்கு ஏதாவது நடந்தால் ஏன் கண்டு கொள்வதில்லை ?

 • Soumya - Trichy,இந்தியா

  திருந்தாத மூர்க்க கூட்டம்

Advertisement