dinamalar telegram
Advertisement

மகள் பேச்சால் ரஜினிக்கு பிரச்னை

Share
சென்னை--'ரஜினிக்கு தமிழ் எழுத தெரியாது' என அவரது மகள் சவுந்தர்யா கூறியதால், ரஜினிக்கு எதிராக சிலர் பொங்கியுள்ளனர். அண்ணாத்தா படத்தை பார்க்க வேண்டாம்' என்ற கோஷத்தை, சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.ரஜினியின் இளைய மகள் சவுந்தரா நேற்று, 'ஹூட் ஆப்' என்ற குரல் மூலம் கருத்துகளை பதிவு செய்யும் புதிய செயலியை துவக்கியுள்ளார். ரஜினி தன் குரலில் பதிவு செய்து துவக்கி வைத்தார். துவக்க இந்நிகழ்ச்சியில் சவுந்தர்யா பேசியதாவது:என் அப்பா ஆசியுடன் இதை துவக்குகிறேன். அவர் எனக்கு தகவல் அனுப்பினால் பேசி அனுப்புவார். அந்த குரலை கேட்டபோது எனக்கு இந்த 'ஹூட் ஆப்' யோசனை தோன்றியது. எழுத படிக்க தெரியாதவர்கள் தங்கள் குரலில் கருத்துகளை பதிவு செய்யலாம். என் அப்பா பல மொழிகள் சரளமாக பேசுவார்; படிப்பார். ஆனால், தமிழ் சரளமாக எழுத வராது. இதை சொல்கிறேன் என்றால், அவருடன் பேசிய பின் தான் சொல்கிறேன். தமிழ் எழுத முடியாது என்பதால், அப்பா மீதான பாசம் போய் விடுமா?இவ்வாறு அவர் பேசினார்.ரஜினிக்கு தமிழ் சரளமாக எழுத தெரியாது என்ற விஷயத்தை, சவுந்தர்யா கூறியது, சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை கிளப்பியுள்ளது. 'அண்ணாத்த படத்தை பணம் கொடுத்து, தியேட்டரில் பார்க்க மாட்டோம்' என்றும் எதிர்ப்பு குரல்கள் ஒலிக்க துவங்கி உள்ளன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (107)

  • Nesan - JB,மலேஷியா

    மொட்டையை தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போட்ட கதை தான்

  • rauf thaseem - mawanella,இலங்கை

    ரஜினி அருமையான மனிதர்... வாழ்க பல்லாண்டு.

  • raju - Bangalore,இந்தியா

    தமிழ் தெரியாவிட்டால் என்ன? அன்புடன் எங்கள் ரஜினிகாந்த் சார் ... எவ்வளவோ தமிழ் மக்களுக்கு செய்திருக்கிறார். அவரால் ஒரு இண்டஸ்ட்ரி வாழ்கிறது. அருமையான மனிதர்... வாழ்க பல்லாண்டு.

    • vinu - frankfurt,ஜெர்மனி

      எந்த இண்டஸ்ட்ரி எப்ப வாழ்கிறது ? கொஞ்சம் புரியும் படி சொல்லு

  • navasathishkumar - MADURAI,இந்தியா

    இதில் என்ன அதிசயம் ...நம்ம தமிழ் நாட்டுக்காரருக்கு அவார்ட் கொடுக்க வில்லை என்ற வருத்தம் கூட இருக்கலாமே .. உண்மையில் ஆரம்ப காலத்து ரஜினி படங்களில் டப்பிங் கொடுக்காமல் தப்பு தப்பாகவே பேசுவார் என்ன செய்வது கமல் பிக் பாஸ் நடத்தியதால் இங்கிலீபீஷ் காரர் என்று தேர்வு குழு முடிவெடுத்து இருக்கலாம் .

  • DHASARATHAN - queenstown,சிங்கப்பூர்

    ரஜினிக்கு தமிழ் சரளமாக எழுத வராது என பொங்குவோர்.. சுட்லீக்கு தமிழே ஒழுங்காக பேசவராது என்பதற்காக பொங்கி வழிவார்களா?

Advertisement