dinamalar telegram
Advertisement

இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்: காமுக முதியவருக்கு சாகும் வரை சிறை

Share

இந்திய நிகழ்வுகள்3 போலீசார் கைது

சிம்தேகா: ஜார்க்கண்டின் சிம்தேகா மாவட்டம் பன்ஜோர் பகுதியில் போலீசார் சமீபத்தில் வாகன சோதனை நடத்தினர். இதில் காரில் கடத்தி செல்லப்பட்ட 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 38 கிலோ வெள்ளி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றை கணக்கில் காட்டாமல் மறைத்ததாக உதவி எஸ்.ஐ., உட்பட மூன்று போலீசார் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது துறை ரீதியான விசாரணையும் துவங்கி உள்ளது.

ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி

போபால்: மத்திய பிரதேசத்தின் பிந்த் மாவட்டம் அமர்சிங்புரா கிராமத்தில் உயர் அழுத்த மின் கம்பி அறுந்து தொங்கியது. அப்போது அந்த வழியாக மாட்டு வண்டியில் சென்றவர்கள் மீது மின் கம்பி உரசியது. இதில் மின்சாரம் தாக்கி ஷ்யாம் சிங், 40, அவரது மனைவி சிரையா, 38, மகள் அன்கிதா, 12, ஆகியோர் பலியாயினர். காயமடைந்த இருவர் சிகிச்சை பெறுகின்றனர்.

கிரிக்கெட்: மாணவர்கள் மோதல்

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் சங்ரூரில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்கள் தங்கள் அறைகளில் உள்ள 'டிவி'யில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டியை பார்த்தனர். இந்தியா தோல்வி அடைந்த பின் காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்களுக்கும், உ.பி., மற்றும் பீஹார் மாணவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தவறாக தரையிறங்கிய விமானம்

புதுடில்லி: ஆந்திராவின் ஐதராபாதில் இருந்து கர்நாடகாவின் பெல்காம் நகருக்கு நேற்று முன்தினம் ஸ்பைஸ் ஜெட் விமானம் புறப்பட்டது. பெல்காம் விமான நிலையத்தில், தரையிறங்க வேண்டிய முனைக்கு மாறாக ஓடுதளத்தின் எதிர்முனையில் அந்த விமானம் இறங்கியது. இதையடுத்து அந்த விமானத்தின் விமானிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


ஆம்புலன்ஸில் தேக்கு கடத்தல்

அலிராஜ்பூர்-மத்திய பிரதேசத்தில் ஆம்புலன்சில் தேக்கு மரம் கடத்திய டிரைவர் மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டனர்.மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி அமைந்து உள்ளது.

இங்கு அலிராஜ்பூர் மாவட்டம் கத்திவாடா பகுதியில் ஆம்புலன்சில் தேக்கு மரம் கடத்திய பணியாளர்கள் இருவர் கைதாகி உள்ளனர்.இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:அலிராஜ்பூர் மாவட்டத்தில் கத்திவாடா அருகே உள்ள பாவ்ரா கிராமத்தின் வழியாக சமீபத்தில், '108' ஆம்புலன்சில் தேக்கு மரம் கடத்துவதாக பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.நாங்கள் செல்வதற்கு முன் அவர்கள் ஆம்புலன்சை தடுத்து நிறுத்தினர்.

ஆனால் அதன் டிரைவர், உதவியாளர் ஆகியோர் அவர்களிடம் இருந்து தப்பினர்.ஆம்புலன்சில் இருந்த 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தேக்கு மர கட்டைகளை கைப்பற்றியதுடன், தலைமறைவான டிரைவர் மற்றும் உதவியாளரை கைது செய்தோம்.ஒரு போலீஸ்காரரின் வீட்டிற்கு தேக்கு மரத்தை கொண்டு சென்றதாக அவர்கள் கூறினர். அது குறித்த விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழக நிகழ்வுகள்பெண் ஊழியருடன் தனிமை: அரசு டாக்டருக்கு காப்பு

துாத்துக்குடி--அரசு மருத்துவமனையில், பெண் ஊழியருடன் தனிமையில் இருந்த அரசு டாக்டர் கைது செய்யப்பட்டார்.

துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக இருப்பவர் குருசாமி, 51. இவர், அங்கு ஸ்ரீமுத்தையா கிளினிக் நடத்தி வருகிறார்.அரசு மருத்துவமனையில் பணியில் இருக்கும் போது, தற்காலிக பணியாளரான இளம்பெண்ணிடம் தினமும் தனிமையில் இருந்துள்ளார். இதை, மற்றொரு தற்காலிக ஊழியர் நீலவேணி பார்த்து விட்டார். இதனால், டாக்டர், பெண்ணுடன் தனிமையில் இருக்கும்போது, அங்கு யாரும் வராமல் பார்த்துக் கொள்ள நீலவேணியை வாசலில் நிற்க செய்து, மன உளைச்சல் ஏற்படுத்தியதோடு, அவதுாறாக திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அவரது அலைபேசியையும் பறித்துக் கொண்டார். டாக்டர், பெண்ணுடன் தனிமையில் இருக்கும் 'வீடியோ' வெளியாகியது.நேற்று நீலவேணி புகாரில், கோவில்பட்டி மேற்கு போலீசார், டாக்டர் குருசாமியை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

காமுக முதியவருக்கு சாகும் வரை சிறை

மதுரை-மதுரை, ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்தவர் பஷீர் அகமதுகான், 64; திருமணமானவர். இவர், ஒரு வீட்டில் தனியாக இருந்த 11 வயது சிறுமிக்கு ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்து, பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்.

பஷீர் அகமதுகான் மீது மதுரை டவுன் மகளிர் போலீசார் 'போக்சோ' பிரிவில் வழக்குப் பதிந்தனர். அவருக்கு சாகும் வரை சிறை தண்டனை மற்றும் 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும், சிறுமிக்கு தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், மதுரை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராதிகா உத்தரவிட்டார்.தந்தைக்கு சிறைமயிலாடுதுறை மாவட்டம், ஆக்கூரைச் சேர்ந்தவர், 40 வயது, கார் டிரைவர். இவர் 2020 மார்ச் 5ம் தேதி வீட்டில் இருந்த 14 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்தார்.


மின்வேலி அமைத்த விவசாயிக்கு 6 ஆண்டுகள் சிறை

புதுக்கோட்டை,-வயலில் எலி தொல்லைக்காக மின்வேலி அமைத்ததில், மின்சாரம் தாக்கி ஒருவர் இறந்தார். மின்வேலி அமைத்த விவசாயிக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே ராசியமங்கலத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி, 80; விவசாயி. இவரது வயலில் எலி தொல்லை அதிகமாக இருந்தது. இதனால், மின் வேலி அமைத்துள்ளார்.சாந்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகேசன், 36, என்பவர் 2017 டிச., 16ல் அவ்வழியாக சென்ற போது மின் வேலியை மிதித்து மின்சாரம் தாக்கி இறந்தார். ரங்கசாமி, முருகேசனின் உடலை பக்கத்தில் உள்ள தரிசு நிலத்தில் போட்டு தலைமறைவானார்.

ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து ரங்கசாமியை கைது செய்தனர். இந்த வழக்கு, புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி குருமூர்த்தி நேற்று தீர்ப்பளித்தார். இதில், ரங்கசாமிக்கு நான்கு ஆண்டுகள் சிறை, உடலை மறைத்ததற்கு, இரண்டு ஆண்டுகள் சிறை என ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.

இந்த வழக்கு நாகை 'போக்சோ' சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி தமிழரசி விசாரித்தார். கார் டிரைவருக்கு சாகும் வரை சிறை, 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 9 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார்.

பழநியில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி என ஏமாற்றியவர் கைது

பழநி-- -பழநி கோயில் தங்கும் விடுதியில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி எனக்கூறி அறை கேட்ட குமார் 47, என்பவரை போலீசார் கைது செய்தனர்.நேற்று பூங்கா ரோட்டில் உள்ள தண்டபாணி நிலையம் விடுதிக்கு, தமிழ்நாடு அரசு என பொறித்த, 'சைரன்' விளக்கு பொருத்திய வாகனத்தில் ஐந்து பேர் வந்து இறங்கினார்.

அதில் ஒருவர் தன்னை ஐ.ஏ.எஸ்., அதிகாரி எனக்கூறி விடுதியில் இலவசமாக அறை ஒதுக்கும்படி கூறியுள்ளார். 'வருவாய் அதிகாரிகளின் முறைப்படியான பரிந்துரை தேவை' என ஊழியர்கள் தெரிவித்தனர். அதற்கு அந்த நபர் முரண்பாடாக பதிலளித்துள்ளார்.ஊழியர்கள் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணையில், அவர் மயிலாடுதுறை மாவட்டம் செம்மனார் கோயிலைச் சேர்ந்த குமார் 47, எனத் தெரிந்தது. பள்ளிப் படிப்பைக் கூட முடிக்காத நிலையில், மதுரை, திருச்செந்துார் உட்பட பல இடங்களில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி எனக்கூறி கோயில்களில் சலுகைகளை அனுபவித்துள்ளார்.

அவருடன் வந்தவர்கள் ஒர்க் ஷாப்களில் பழகியவர்கள். இவர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி என்று நம்பி வந்தவர்கள் எனத் தெரிந்தது. போலீசார், போலி அதிகாரி குமாரை கைது செய்தனர். கார், போலி அடையாள அட்டையை பறிமுதல் செய்தனர். உடன் வந்தவர்களை எச்சரித்து அனுப்பினர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement