dinamalar telegram
Advertisement

இது உங்கள் இடம்: முதல்வரின் முயற்சிக்கு பாராட்டுகள்

Share

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:கு.அருண், கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

ஆட்சியாளர்களும், அரசு அதிகாரிகளும் நேர்மையற்றோராக இருப்பதால், ஊழல் இல்லாத சமுதாயம் என்பது கனவாகவே உள்ளது.காவல் துறையில் உட்புகுந்துள்ள ஊழலால், குற்றங்களின் எண்ணிக்கை உயர்கிறது என்பதே கசப்பான உண்மை. குற்றவாளிகளுக்கு, போலீசார் மீது அறவே பயம் இல்லாமல் போய்விட்டது.'லஞ்சம் வாங்கினேன் கைது செய்தனர்; லஞ்சம் கொடுத்தேன் விடுவித்தனர்' என்ற நிலை தான், தற்போது உள்ளது.

தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும், தலைமைச் செயலராக இறையன்பு, டி.ஜி.பி., ஆக சைலேந்திரபாபுவை நியமித்தது. இது, அரசு நிர்வாகத்தை திறம்பட, நேர்மையுடன் செயலாற்றச் செய்யும் என்ற நம்பிக்கையை, மக்களிடம் விதைத்தது.அரசு அலுவலகங்களில் லஞ்சம் குறையவில்லை. லஞ்ச ஒழிப்பு போலீசார் அவ்வப்போது, 'ரெய்டு' நடத்தினாலும், லஞ்சம் வாங்குவோர் திருந்தியதாக தெரியவில்லை.சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில், தமிழக காவல் துறையில் நிலவும் லஞ்சம் குறித்து தெரிய வந்துள்ளது. எந்தெந்த விவகாரத்திற்கு எவ்வளவு லஞ்சம் வாங்குகின்றனர் என்ற பட்டியல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து, டி.ஜி.பி., தரப்பிலிருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.போலீஸ் ஸ்டேஷனில் உள்ள எழுத்தர் முதல் இன்ஸ்பெக்டர் வரை வாங்கும் லஞ்சம் குறித்த பட்டியல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.அடிதடி, லாட்டரி விற்பனை, கட்டப்பஞ்சாயத்து என சமூக குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக, போலீசார் 1,000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெறுகின்றனர்.

சினிமாவில் மட்டும் தான், 'தங்கப்பதக்கம் சிவாஜிகணேசனை' நாம் பார்க்க முடிகிறது.தமிழகத்தில் ஆட்சியாளர்களுடன், அரசு அதிகாரிகள், 'சிண்டிகேட்' அமைத்து ஊழல் செய்கின்றனர்.முந்தைய தி.மு.க., ஆட்சிகள் போன்று இல்லாமல், நேர்மையாக ஆட்சி செய்ய, முதல்வர் ஸ்டாலின் முயற்சி செய்கிறார். அவரின் முயற்சி வெற்றி பெறட்டும்!
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (71)

 • theruvasagan -

  லஞ்சத்தொகை விலை நிர்ணய பட்டியல் அனுப்பியாச்சா. அப்ப சரி. ரேட் கார்டு பிராகரம் யாராருக்கு எவ்வளவு வெட்டனும்னு தெரிஞ்சுக்கலாம். யாராவது அதிகமா கேட்டா புகார் கொடுக்கலாம். அவங்களும் யாரும் மீட்டருக்கு மேல வாங்ககூடாது. அப்படி வாங்கினா சட்டவிரோதம்னு அறிவிப்பாங்க. நாமும் குடுக்க வேண்டியத குடுத்து காரியத்த முடிச்சுக்கலாம். அவ்வளவுதான் நடக்கும். மற்றபடி லஞ்சம் தானாக ஒழியும் என்றோ இல்லாட்டி ஆட்சியாளர்களால் ஒழிக்கப்படும் என்றோ நாம் நம்பினால் அது நியாமான ஆசை கிடையாது. பேராசை.

 • rajan -

  அம்மா உணவக ஊழியர்களின் வயிற்றில் அடிக்கிறார் முதல்வர். இவருடைய சொத்துக்கள் தினமும் கோடிக்கணக்கில் வட்டியுடன்குட்டி போடுகின்றன. ஆனால் அம்மா உணவக ஊழியர்களுக்கு ஒருநாள் விட்டு ஒரு நாள் வேலை என்று அறிவித்துள்ளனர். இதனால் அவர்களுடைய மாதச் சம்பளம் 4500 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இது தர்மமா இதுதான் நேர்மையான ஆட்சியா . 4500 ரூபாய் சம்பளத்தில் அவர்கள் எப்படி வாழ்க்கை நடத்த முடியும். ஈவு இரக்கம் இல்லாத முதல்வர். சுய நல வாதி. கிஷோர் சுவாமி மற்றும் கல்யாணராமன் அவர்களை குண்டர் சட்டத்தில் போடுமளவுக்கு அவர்கள் என்ன தீவிரவாதிகளா. அடக்குமுறை அராஜகம் திமுகவின் அடையாளம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களின் வயிற்றெரிச்சல் சாபம் இவர்களை சும்மா விடாது.

 • Arul Narayanan - Hyderabad,இந்தியா

  அப்பா சிங்கப்பூர் சுரேந்திரா உனக்கு கொடநாடு பற்றி ஒரு மணிநேரம் எழுத மட்டும் தான் காசு கொடுத்தார்களா? கொடைக்கானல் ப்ளசன்ட் டே ஹோட்டல் சசி என்டர்ப்ரைஸஸ் பாடநூல் கழக ஊழல் கடலோரமாக 45 பங்களாக்கள் தர்மபுரி பஸ் எரிப்பு சுடுகாட்டு கொட்டகை ஊழல் இப்படி 26 வழக்குகள் பற்றியும் கோதுமை பேர ஊழல் பூச்சி மருந்து ஊழல் சர்க்காரியா கமிஷன் 2ஜி ஏஎன்எக்ஸ் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் மோசடி இதெல்லாம் தெரியாத சின்னப் பையன் போலும். நீ வேண்டுமானால் எவனுக்காவது அடிமையாகவோ கைக்கூலியாகவோ இருந்து கொள். கமன்ட் போடுபவர்களே எல்லாம் அப்படி நினைக்காதே.

 • Arul Narayanan - Hyderabad,இந்தியா

  அப்பா சிங்கப்பூர் சுரேந்திரா உனக்கு கொடநாடு பற்றி ஒரு மணிநேரம் எழுத மட்டும் தான் காசு கொடுத்தார்களா? கொடைக்கானல் ப்ளசன்ட் டே ஹோட்டல் சசி என்டர்ப்ரைஸஸ் பாடநூல் கழக ஊழல் கடலோரமாக 45 பங்களாக்கள் தர்மபுரி பஸ் எரிப்பு சுடுகாட்டு கொட்டகை ஊழல் இப்படி 26 வழக்குகள் பற்றியும் கோதுமை பேர ஊழல் பூச்சி மருந்து ஊழல் சர்க்காரியா கமிஷன் 2ஜி ஏஎன்எக்ஸ் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் மோசடி இதெல்லாம் தெரியாத சின்னப் பையன் போலும். நீ வேண்டுமானால் எவனுக்காவது அடிமையாகவோ கைக்கூலியாகவோ இருந்து கொள். கமென்ட் போடுபவர்களை எல்லாம் அப்படி நினைக்காதே.

 • ஆரூர் ரங் -

  பிஹாரி ஐயருக்கு 380 கோடி தட்சிணை கொடுத்து ஆட்சியைப் பிடித்தது திருந்தி ஆளவா😛 ? நம்ப ஆள் இருக்கா,?

Advertisement