dinamalar telegram
Advertisement

கோர்பிவாக்ஸ் தடுப்பூசி அடுத்த மாதம் அறிமுகம்?

Share
ஐதராபாத்-நவ., இறுதியில் 'பயோலாஜிக்கல் இ' நிறுவனத்தின் 'கோர்பிவாக்ஸ்' கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.தெலுங்கானா மாநிலம் ஐதராபாதைச் சேர்ந்த பயோலாஜிக்கல் இ நிறுவனம் 'கோர்பிவாக்ஸ்' என்ற கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது.

இது குறித்து இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மஹிமா தத்லா கூறியதாவது:கோர்பிவாக்ஸ் தடுப்பூசியின் மூன்றாவது கட்ட பரிசோதனை நடந்து வருகிறது. இப்பணிகள் முடிவடைந்து மத்திய அரசின் உரிமம் கிடைத்த பின், நவ., இறுதியில் தடுப்பூசி விநியோகம் துவங்கும் என, எதிர்பார்க்கிறோம்.தற்போது தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசி மருந்து ஆய்விற்காக ஹிமாச்சல பிரதேசம், கசாலியில் உள்ள மத்திய மருந்துகள் ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுஉள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement