dinamalar telegram
Advertisement

குறைகேட்பு முகாமில் குவிந்த மக்கள் மனுக்கள்! கலெக்டர் சார்... நீங்க மனசு வச்சா, எல்லாம் சரியாகும்!

Share
Tamil News
திருப்பூர்:திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் குவிந்தன. தரமற்ற சாலைகள், உத்தரவை மதிக்காத அதிகாரிகள், இறந்தவர் உடலை தோளில் சுமந்து சென்ற அவலம் என பல்வேறு குறைபாடுகளுக்கு தீர்வு காணுமாறு, மனுக்களில் கூறப்பட்டிருந்தன.
தொழிலாளர் தவிப்புவிசைத்தறி தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.,) அளித்த மனு;விசைத்தறி தொழிலாளர் வேலை நேரம் 14 மணி நேரமாகவும், தொழிலாளர் இயக்கும் விசைத்தறி எண்ணிக்கை 16 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு ஏழரை ஆண்டு ஆகியும், விசைத்தறி தொழிலாளருக்கு கூலி உயர்வு வழங்கப்படவில்லை.
கொரோனா காலத்திலும், எவ்வித நிவாரணமும் கிடைக்கவில்லை. ஜவுளி உற்பத்தியாளர் மற்றும் விசைத்தறி உரிமையாளர்களை அழைத்து பேசி, கூலி உயர்வு பெற்றுத்தரவேண்டும்.சாலையில் 'குளம்'சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு அளித்த மனு:பல்லடம் ஒன்றியம், வடுகபாளையம் புதுார் ஊராட்சி, முதல் வார்டு, சின்ன வடுகபாளையத்தில், அங்கன்வாடியுடன் கூடிய, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளி பகுதியில், கான்கிரீட் ரோடு, பழுதடைந்துள்ளது.
மழை காலங்களில், குளம் போல தண்ணீர் தேங்குகிறது. அங்கன்வாடி குழந்தைகள், அடிக்கடி தவறி விழுகின்றனர். ரோட்டை உடனடியாக சரி செய்யவேண்டும்.இடம் ஆக்கிரமிப்புபெருந்தொழுவு பகுதி மக்கள் அளித்த மனு:பெருந்தொழுவு பகுதியை சேர்ந்தவர்களுக்கு வடக்கு அவிநாசி பாளையத்தில், இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால், இடம் எங்கு உள்ளது என தெரிவிக்கவில்லை.
அப்பகுதியை சேர்ந்த சிலர், எங்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடத்தை ஆக்கிரமித்துள்ளனர். இலவச வீட்டுமனை பட்டா இடத்தை அளவீடு செய்து, எங்களுக்கு வழங்க வேண்டும்.'காற்றில்' பறந்த உத்தரவுநல்லுார் நுகர்வோர் நல மன்ற தலைவர் சண்முகசுந்தரம் அளித்த மனு:மூன்று மாதத்துக்கு ஒருமுறை நுகர்வோர் குழு கூட்டம் நடத்த வேண்டும் என்கிற அரசு உத்தரவு, சில அரசு அலுவலகங்கள் கடைபிடிக்கப்படுவதில்லை. அனைத்து அரசு அதிகாரிகளும், மூன்று மாதத்துக்கு ஒருமுறை நடத்தும் நுகர்வோர் குழு கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்.
அங்கீகாரம் இன்றி பள்ளிகள்அகில பாரத அன்னையர் முன்னேற்ற கழக தலைவர் தன்ராஜ் அளித்த மனு:திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில், போதிய பாதுகாப்பு, வகுப்பறை இல்லாமலும், அங்கீகாரம் பெறாத நர்சரி, பிரைமரி பள்ளிகள் அதிகளவில் இயங்குகின்றன. 50 பேர்கூட படிக்க வசதியில்லாத பள்ளிகளில், 300க்கும் மேற்பட்டோரை சேர்த்து கொள்கின்றனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, பெற்றோர் மத்தியில், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பயிர்கள் சேதம்மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச்சங்கம் அளித்த மனு:கன மழையால், மங்கலம் ரோடு, ஆண்டிபாளையம் குளம் அருகே எல் அண்ட் டி டேங்க், பாதாள சாக்கடை சுத்திகரிப்பு மையம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. மோட்டார் தண்ணீரில் மூழ்கியுள்ளதால், குடிநீர் வினியோகம் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. குளத்திலிருந்து உபரிநீர் வெளியேறும் வாய்க்கால் பராமரிக்கப்படாமல் உள்ளது.
அருகிலுள்ள விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து, விவசாய பயிர்கள் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவேண்டும்.தரமற்ற சாலைநாம் தமிழர் கட்சி அளித்த மனு:'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், திருப்பூரில், ெஷரீப்காலனி உட்பட பல்வேறு பகுதிகளில் போடப்பட்டுள்ள சிமென்ட் ரோடுகள், ஓரிரு மாதங்களிலேயே சேதமடைந்துள்ளன. தார் சாலை போடப்பட்ட சில மாதங்களிலேயே, அவற்றை அகற்றிவிட்டு, சிமென்ட் ரோடு போடுகின்றனர்.
தரமற்ற வகையில் ரோடு போடுவோரின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.மீட்க வேண்டும்வேலம்பாளையம், ஜவஹர் நகரை சேர்ந்த காமினி என்பவர், சிட் பண்ட் பணம் 15 லட்சம் ரூபாய், 45 சவரன் நகை மற்றும் வீட்டை, தனது மகளிடமிருந்து மீட்டுத்தருமாறு மனு அளித்துள்ளார்.மனசு வையுங்க...''கலெக்டர் சார், மனசு வைத்தால், குறைகள் அனைத்தும் சரியாகும் என்ற நம்பிக்கையுடன் மனுக்களை அளித்துள்ளோம்'' என்று, மனு அளித்த மக்கள் கூறினர்.
இறந்தவர் உடலை தோளில் சுமந்த அவலம்
திருப்பூர் அறிவொளி நகர் பகுதி மக்கள் அளித்த மனு:திருப்பூர் மாநகராட்சி, 21வது வார்டு, அறிவொளி நகர், ஜி.எம்., நகர் பகுதி சாலைகள் சேதமடைந்துள்ளன. ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியவில்லை. சமீபத்தில், இறந்தவர் உடலை, பொதுமக்கள் 500 மீட்டர் துாரத்துக்கு தோளில் சுமந்து சென்று, ஆம்புலன்ஸில் ஏற்றினர். இப்பகுதியில் சாக்கடை, தெருவிளக்கு வசதிகள் இல்லை; அடிக்கடி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்படுகிறது. குப்பை கழிவுகள் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது. அதிகாரிகள் ஆய்வு நடத்தி, அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement