dinamalar telegram
Advertisement

மாஜி அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கில் 341 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்

Share
சென்னை-நடிகையுடன் குடும்பம் நடத்தி, அவரை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்ய வைத்ததுடன், அந்தரங்க படத்தை இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டிய வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது, 341 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன், 43. இவர், அ.தி.மு.க., ஆட்சியில், 2017ல் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்தார். இவர் மீது நடிகை சாந்தினி, 36 என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.அதில், 'சென்னை பெசன்ட் நகரில், வாடகை வீட்டில் என்னுடன் அமைச்சர் மணிகண்டன் சட்ட விரோதமாக குடும்பம் நடத்தினார். மூன்று முறை கர்ப்பமாக்கி, கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்தார்.'அடித்து துன்புறுத்தினார்; பண மோசடி செய்தார். திருமணம் செய்ய மறுத்ததுடன், அந்தரங்க படங்களை இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டினார்' எனக் கூறியிருந்தார்.அடையாறு மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து, பெங்களூரு பண்ணை வீட்டில் பதுங்கி இருந்த மணிகண்டனை ஜூன் மாதம் கைது செய்து, சைதாப்பேட்டை சிறையில் அடைத்தனர். அங்கு சொகுசு வாழ்க்கை நடத்தியதால், மணிகண்டன் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

தற்போது, நிபந்தனை ஜாமினில் வெளியே உள்ளார்.இவர் மீதான வழக்கு, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. மணிகண்டனுக்கு எதிராக, சாந்தினி உட்பட ஐந்து பேர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளனர். அத்துடன், மணிகண்டன் மீது, போலீசார், 341 பக்கங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (8)

  • Surendran - singapore,சிங்கப்பூர்

    கொடநாட்டு கும்பலின் கைக்கூலி ஒரு பயல் இங்கே வரமாட்டான். அவனுங்க அடிப்படை தகுதியே அதுதான். பொள்ளாச்சியில் சாகசம் செய்தவன் கும்பலில் ராயபுரத்தான் முக்கியமானவன். கொடநாட்டு பங்களாவை ஆட்டய போட்டவன் தேர்ந்தெடுத்த கொள்ளைக்காரன்.

  • duruvasar - indraprastham,இந்தியா

    எவ்வளவு தமிழ் நெஞ்சங்கள் கண்ணதாசனின் வனவாசம் புத்தகத்தை படித்திருக்கிறார்கள் என தெரியவில்லை.

  • Karthik - Chennai,இந்தியா

    PAD

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    வாவ். காவல்த்துறை வேலை செய்கிறது போலவே... அப்படியே அந்த ஆமைக்கறி சைமனையும் உள்ளே தூக்கி வைக்கலாமே...

  • ஆரூர் ரங் -

    கருணாநிதி கூட இதெல்லாம் செய்தார்.😉😉 ஆனால் அவரை எதிர்த்து புகார் கொடுக்க யாருக்கும் துணிவில்லை . எதிர்த்தாலும் வனவாசம் போக வேண்டியதுதான்

Advertisement