dinamalar telegram
Advertisement

அப்பல்லோ மருத்துவமனையில் சிறார்களுக்கு இலவச தடுப்பூசி

Share
சென்னை-''மத்திய அரசு அனுமதி அளித்த பின், இணை நோய்களுடன் உள்ள சிறார்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும்,'' என, அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.இது குறித்து, அப்பல்லோ மருத்துவமனைகள் குழும தலைவர் பிரதாப் சி ரெட்டி கூறியதாவது:நாடு முழுதும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. மற்றொரு பக்கத்தில், சிறார்களிடையே கொரோனா பரவி வருகிறது. பெரும்பாலான சிறார்களுக்கு, அது பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஆனால், இணை நோய் உள்ள சிறார்களுக்கு, கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

அதை கருதி, ரத்த நோய்கள், நரம்பு, இதய பாதிப்பு, புற்றுநோய், சிறுநீரகம், கல்லீரல் பாதிப்பு போன்ற நோய்களுக்கு உள்ளான சிறார்களுக்கு, மத்திய அரசு அனுமதி அளித்த பின், இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்க, அப்பல்லோ மருத்துவமனைகள் திட்டமிட்டுள்ளன.சிறார்களுக்கு தடுப்பூசி வழங்க ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில், அவர்களுக்கு, 'கோவாக்சின், ஜைகோவ் - டி' போன்ற தடுப்பூசிகளை பயன்படுத்த அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகை தடுப்பூசிகள், அப்பல்லோவில் தேவையான அளவில் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement