dinamalar telegram
Advertisement

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 2 பேர் கைது

Share
ஊட்டி: நீலகிரி மாவட்டம் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இன்று இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோத்தகிரி கோடநாடு எஸ்டேட்டில், 2017 ஏப்., 24ல், கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்தன. எஸ்டேட் காவலாளி ஓம்பகதுார் கொலை செய்யப்பட்டார்.

இதன் தொடர்ச்சியாக ஜெயலலிதா முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் பலியானார். கனகராஜ் மரணம் தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் இன்று (அக்.25) கனகராஜ் உறவினர் தனபால் 44, மற்றும் ரமேஷ் ,34ஆகிய இருவரை நீலகிரி மாவட்ட போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கூடலூர் சிறையில் அடைத்தனர்..
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (7)

  • Surendran - singapore,சிங்கப்பூர்

    ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டு இருந்தவர் மிகுந்த சிரமப்பட்டு சேர்த்த பல லட்சம் கோடி சொத்துக்களில் இதுவும் ஒன்று. அப்பாவிகளிடம் அடித்து பிடுங்கிய அதே வழியில் அடித்து,கொலை செய்து பிடுங்கிக்கொண்டு போய்விட்டான் ஒரு மிகப்பெரும் கொள்ளையன்.

  • Surendran - singapore,சிங்கப்பூர்

    எல்லாவற்றையும் ஏவியவன் இன்னும் வெளியில் இருக்கிறானே.

  • Surendran - singapore,சிங்கப்பூர்

    இதையெல்லாம் நடத்தியவனும், பல ஆயிரம் கோடி பணத்தையும், பலம் ஆயிரம் கோடி சொத்துக்களின் பத்திரங்களையும் கொண்டுபோய் தனது பினாமிகள் பெயரில் பெயர் மாற்றம் செய்து பதிவு செய்துகொண்ட பெரும் திருடன்,கொலைகாரனை இதுவரை ஏன் பிடிக்கவில்லை? இன்னும் ஆதாரங்கள் தேவைப்படுகிறதோ. அவன் கூட்டம் மொத்தமும் உள்ளே தள்ளப்படவேண்டும். ஒரு பயல் வெளியில் வரவிடக்கூடாது. தமிழகத்தை மொத்தமாக சூறையாடிய மிகப்பெரும் கொலை,கொள்ளைக்கும்பல்.

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    ஆமா, ஜெயலலிதாவின் மர்ம மரணம் பற்றிய விசாரணை?

  • Ramesh Sargam - Bangalore,இந்தியா

    சட்டம் தன் கடமையை செய்யும். எப்பொழுது? கொலை, கொள்ளையில் ஈடுபட்டவராகள் 'சிவலோகபிராப்தி' அடைந்தபிறகு. அந்த அளவுக்கு நிதானம் நமது நாட்டின் நீதித்துறை.

Advertisement