Load Image
dinamalar telegram
Advertisement

பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டியதையும் மோடி கொண்டாடவேண்டும்: ப.சிதம்பரம் டுவிட்

Tamil News
ADVERTISEMENT
புதுடில்லி: ‛‛இந்தியாவில் 100 கோடி கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டதை சாதனையாகக் கொண்டாடிய பிரதமர் மோடி பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.100 ஐ தாண்டியதையும் கொண்டாட வேண்டும்,'' என்று காங்கிரஸ் எம்.பி., ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.


இந்தியாவில் 100 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு சுகாதாரத்துறை சாதனை புரிந்ததை பிரதமர் மோடி உள்ளிட்ட அமைச்சர்கள் வெகுவாக பாராட்டினர். இந்தியா மட்டுமல்லாது உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட உலக நாடுகளும் பாராட்டின. அதேநேரத்தில், நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.100ஐ தாண்டியதை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Latest Tamil News
இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் வெளியிட்ட டுவிட்டர் பதிவு: பிரதமர் மோடி அவரது அமைச்சர்களைக் கொண்டு 100 கோடி தடுப்பூசி இலக்கை எட்டியதைக் கொண்டாடினார். அதேபோல், நாட்டில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.100 ஐ தாண்டியதையும், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரு.1,000ஐ தாண்டியதும் இன்னொரு நல்ல வாய்ப்பாக நினைத்து அதையும் கொண்டாட வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.



வாசகர் கருத்து (132)

  • binakam - chennai,இந்தியா

    இந்தியாவிலே இருக்கும் முஸ்லிம்களை தங்கள் சகோதர நாடுகளுக்கு கோரிக்கை அனுப்பி கச்சா விலையை குறைக்க சொல்லுங்க? அடக்க விலை கொடுப்பது தவிர வேறு வழியில்லை. கூப்பாடு போடுவதை விட்டு சிக்கனமா செலவு செய்ய கற்றுகொள்ளுவோம். தஞ்சாவூரில் ஹைட்ரொ கார்பன் எடுக்க விடலை விலை உயர்வை அனுபவிங்க? <<<<<<<<<சக்ராயுதம்>>>>>>

  • krishnamurthy - chennai,இந்தியா

    இவனும் இவன் குடும்பமும் வாயிதஆ விழா கொண்டாடலாம்

  • Ramesh -

    today petrol 105/lit . Continuous rise d very bad name for central govt. Think all BJP supporters here are very rich - will manage petrol 105/t and gas 915/cylinder.

  • Mahalakshmi - Sivakasi,இந்தியா

    2022ஜூன் வரைதான் பெட்ரோல் டீசல் ஜிஎஸ்டிக்குள் வராமல் இருக்கும். அதன்பின் தன்னாலே ஜிஎஸ்டிக்குள் வந்திடுமாம்.

  • Siva Kumar - chennai,இந்தியா

    பசிக்கு வயசாயிடுச்சு. சுயபுத்தியோட பேசமுடியலே. ஞாபக மறதி ரொம்ப ஜாஸ்தி. பெட்ரோல் டீசல் விலையை அந்தந்த ஆயில் கம்பனிகளே நிர்ணயிக்கலாம் என்று சட்டம் கொண்டு வந்ததே உளுத்துப்போன காங்கிரஸ் கட்டுமரம் கூட்டணி ஆட்சியில்தான்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement