dinamalar telegram
Advertisement

தாதா சாகேப் பால்கே விருது: ரஜினி மகிழ்ச்சி

Share
சென்னை: தமிழ்த்திரை உலகில் இருவர் மட்டுமே தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ளனர், அடுத்ததாக ரஜினிகாந்துக்கு நாளை (அக்.,25) வழங்கப்பட உள்ளது. தனது குருநாதர் கே.பாலச்சந்தர் இல்லையே என்ற நெகிழ்ச்சியுடன் இன்று அவர் டில்லி செல்வதாக தெரிவித்துள்ளார்.

இந்திய திரையுலகினருக்கு மத்திய அரசினால் வழங்கப்படும் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது. லதா மங்கேஷ்கர், சத்யஜித் ரே, ஷியான் பெனகல், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலருக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகிலிருந்து சிவாஜி, கே.பாலசந்தர் ஆகிய இருவர் இந்த விருதினைப் பெற்றுள்ளார்கள்.
கடந்த 2019-ம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது ரஜினிகாந்த்துக்கு அறிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு திரையுலகினரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த விழா இதுவரை நடத்தப்படாமல் இருந்தது. தற்போது டில்லியில் நாளை (அக்டோபர் 25) நடைபெறும் விழாவில் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு டில்லிக்கு இன்று ரஜினிகாந்த் செல்கிறார்.

இதுகுறித்து அவரது இல்லத்தில் பத்திரிகையாளர்கள் மத்தியில் ரஜினிகாந்த் பேசியதாவது: தாதா சாகேப் பால்கே விருது எனக்குக் கிடைத்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. இந்த நேரத்தில் எனது குரு கே.பாலசந்தர் இல்லையே என்று வருத்தமாக உள்ளது. இந்த விருது கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. அதை நான் எதிர்பார்க்கவே இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


இதன் பின்னர் அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு
எனக்கு இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடைபெற உள்ளது. மக்களின் அன்பிலாலும், ஆதரவினாலும், திரையுலகில் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருதினை மத்திய அரசு வழங்க உள்ளது.இரண்டாவது என்னுடைய மகள் சவுந்தர்யா விசாகன் அவருடைய சொந்த முயற்சியில் மக்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய ‛ஹூட்' செயலியை உருவாக்கி அதை அறிமுகப்படுத்த உள்ளார். அதில் மக்கள் தாங்கள் மற்றுவர்களுக்கு எழுத்து மூலம் தெரிவிக்க விரும்பும் கருத்துக்கள், விஷயங்களை இனி அவர்களது குரலிலேயே எந்த மொழியிலும் ‛ஹூட்' செயலி மூலம் பதிவிடலாம். இந்த வரவேற்கத்தக்க புதிய முயற்சியான ‛ஹூட்' செயலியில் என் குரலில் பதிவிட்டு துவங்க உள்ளேன். இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்தார்.

தேசிய விருதுநாளை நடைபெறும் விழாவில் 2019ம் ஆண்டிற்கான தேசிய விருதுகளும் வழங்கப்படவுள்ளன. இதில் 'அசுரன்' படத்துக்காக சிறந்த நடிகராக தனுஷ், 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் திருநங்கையாக நடித்த விஜய் சேதுபதி சிறந்த உறுதுணை நடிகர், பார்த்திபன் இயக்கத்தில் உருவான 'ஒத்த செருப்பு சைஸ் 7' திரைப்படத்துக்கு சிறப்பு நடுவர் தேர்வு விருது, 'கேடி (எ) கருப்புதுரை' படத்தில் நடித்த நாக விஷாலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திர விருது, இசையமைப்பாளர் இமானுக்கு, 'விஸ்வாசம்' படத்துக்காக, சிறந்த இசையமைப்பாளர் (பாடல்கள்) விருது ஆகியவையும் வழங்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (41)

 • rajan -

  ஆமாம் சரியாகச் சொன்னார்.

 • BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்

  எதற்கு இந்த விருது இவனுக்கு புகை பிடிப்பது எப்படி என்று மக்களுக்கு சொல்லி கொடுத்ததற்கா இல்லை தமிழகத்திற்கு ஏதாவது நல்லது செய்தானா. இந்த விருதை வாங்கும் அளவுக்கு இவர் சரியில்லாதவர். எல்லாமே தேர்தல் அரசியல். இதனால் இந்த விருதுக்கு தான் அவமானம்.

 • ravi chandran -

  டுபாக்கூர் சுயநலம் பேராசை பிடித்த இந்த ஆளுக்கு ஏன் இந்த விருது. நடிப்பிற்காக கொடுக்க வேண்டும் என்ன விருது கொடுத்தாலும் பிஜேபி க்கு ஆதரவு நகி

 • Nagarajan D - Coimbatore,இந்தியா

  ரஜினிகாந்த்தெல்லாம் நடிகன் என்றால் என்ன சொல்வது... இவனுக்கு தாதா சாஹிப் விருதுக்கு பதில் தாத்தா பேத்திகளுடன் ஆடும் கிழவன் விருது கொடுக்கலாம்...

 • RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்

  சிறந்த நடிகன் இவன் , நிஜ வாழவில் , அப்படி நல்லவன் மாதிரியே நடிப்பான் மா இவன் , எப்படியா பட்டவனும் ஏமாந்து விடுவான் இவன் நிஜ வாழ்வில் நடிக்கும் நடிப்பிற்கு , அவ்வளவு பெரிய தொவ்வ்லத்து

Advertisement