dinamalar telegram
Advertisement

குளிர்கால கூட்டத்தொடரும் போச்சா?

Share
புதுடில்லி: அடுத்த மாதம் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் துவங்க உள்ளது. அடுத்தாண்டு துவக்கத்தில் பஞ்சாப் உட்பட ஐந்து மாநில சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.எனவே, பிரதமர் மோடியை எதிர்க்கும் உண்மையான எதிர்க்கட்சி தாங்கள் தான் என்பதைக் காட்ட, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி முடிவு செய்துஉள்ளார்.இதனால், குளிர்கால கூட்டத்தொடரின் போது சபையின் மையப் பகுதியில் நின்று கூச்சல் போடுவது, மேஜை மீது ஏறி நடனம் ஆடுவது என பல திட்டங்களை அவரது கட்சியினர் தயாராக வைத்துள்ளனர். பார்லி.,யை முடக்க ஆம் ஆத்மி கட்சியும் மம்தாவோடு கைகோர்த்துவிட்டது. ஆனால், மம்தாவோடு சேர காங்கிரஸ் தயங்குகிறது. எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக மம்தா தன்னை நினைப்பது தான் இதற்கு காரணம்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (10)

 • Krishnan - Coimbatore ,இந்தியா

  இவர்கள் எல்லாம் மத்தியமைசர்களா இல்லை கூத்தாடிக்கலான்னு தெரியல.... நடத்துங்க.... மக்கள் வரியா எடுத்து ஆட்டம் போடுங்க.....

 • M Ramachandran - Chennai,இந்தியா

  சபாஷ் சரியான போட்டி (பாட்டி) .இவர்களுக்குள் போட்டி பொச்செரிப்பு எல்லாம் சேர்ந்து ஒன்றும் செய்யமுடியாத நிலை. காங்கிரசை இப்போர் எந்தக்கட்சியும் மதிப்பதில்லை. அது மாநில கட்சி அளவுக்கு கூட மிளிர முடிய வில்லையை. கட்சி காங்கிரசை இந்த கூட்டம் தலைமையில் இந்த அயல் நாட்டு கும்பல் குழிதோண்டி புதைத்து விட்டு தான் வெளியேறும்.பறி தாபா மான விஷயம். ஒரு நல்ல கட்சியாக இருந்து பெரும் தலைவர்களய் சுயநலத்திற்காக வெரட்டி விட்டு கடைசியில் கட்சி கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனா கதையாய் போய் விட்ட பரிதாபம்.

 • ராஜா -

  நாடாளுமன்றத்தில் பொருக்கித்தனம் செய்பவர்களை முட்டியை உடைத்து குண்டுக்கட்டாக தூக்கி வெளியில் போடவும்.

 • அப்புசாமி -

  என்னத்துக்கு கூட்டம் கூட்டிக்கிட்டு? கூட்டத்திலேயும் பிதமரின் புகழ்பாடும் பஜனை கோஷ்டிகள்தான் சவுண்டு குடுக்கும். இப்பத்தான் வொர்க் ஃப்ரம் ஹோம் நு எல்லோரும் வூட்டிலே இருக்காங்களே... அதே மாதிரி செயல் படுங்க. மோடி பஜனையை வீடியோ கான்ஃபரன்சில் நடத்துங்க. எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை வீட்டு மேஜையில் ஏறி நடனமாடிக் காட்டுங்கள். பேப்பரை கிழித்து வீட்டில் போட்டு கூச்சலிடுங்க. பணம், நேரம், கேண்டீன் செலவு எல்லாம் மிச்சம். ஜெய் ஹிந்த்.

  • Saai Sundharamurthy A.V.K -

   பஞ்சாப் காங்கிரஸ் கிழிந்து போய் விட்டதாம். அதனால் காங்கிரஸ்காரர்கள் இந்த கூட்ட தொடரே வேண்டாம் என்று பஜனை செய்கிறார்களாம்.

 • VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா

  Tmc திமுகவிடம் பயிற்சி எடுக்கலாம்

Advertisement