புதுடில்லி: தமிழக எம்.பி.,க்களில் சுறுசுறுப்பாக இருப்பவர், மதுரையைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் எம்.பி., வெங்கடேசன். சக உறுப்பினர்கள் அவரை புகழ்ந்து தள்ளுகின்றனர்.
தமிழகம் தொடர்பான பிரச்னைகளை பார்லிமென்டில் அதிகம் கிளப்புவது இவர் தான். இத்துடன் நிற்காமல், தமிழக பிரச்னைகள் எதுவாக இருந்தாலும், சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சருக்கு உடனே கடிதம் எழுதி விடுகிறார்.
சமீபத்தில் செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குருக்கு, ஒரு கடிதம் எழுதினார் வெங்க டேசன். அதில், பிரசார் பாரதி தனியார் வசம் போகிறது என குற்றம் சாட்டியிருந்தார். இந்த கடிதம் கிடைத்த உடனேயே, பிரசார் பாரதியின் தலைமை அதிகாரி வாயிலாக ஒரு மறுப்பு அறிக்கை வெளியிடச் செய்தார் அமைச்சர் அனுராக்.


வெத்து வேட்டு.. நாந்தான் இருக்கேன்ல என்று ஒரு காமெடியில் வருமே அப்படி ஒரு பீஸ் இது..