dinamalar telegram
Advertisement

எம்.பி., க்கள் மீது வழக்குகள்: முதலிடத்தில் தமிழகம்

Share
புதுடில்லி: லோக்சபா எம்.பி.,க்கள் தொடர்பான அனைத்து விஷயங்களையும் கண்காணித்து வருபவர் சபாநாயகர் ஓம் பிர்லா.எந்த ஒரு எம்.பி., மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டாலோ அல்லது கைது செய்யப்பட்டாலோ உடனடியாக சபாநாயகருக்கு தெரிவித்தாக வேண்டும்.சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி உடனடியாக எம்.பி., கைது தொடர்பாக சபாநாயகருக்கு தகவல் அனுப்ப வேண்டும்.ஒவ்வொரு மாதமும் இந்த பட்டியல் அனுப்பி வைக்கப்படும். இந்த மாத பட்டியலில் முதலிடம் வகிப்பது தமிழகம் தான். தமிழகத்தைச் சேர்ந்த ஒன்பது எம்.பி.,க்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, ஓம் பிர்லாவிற்கு அனுப்பப்பட்டுள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடலுார், திருநெல்வேலி தி.மு.க., - எம்.பி.,க்கள் மீதான வழக்குகள் ஓம் பிர்லாவிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர, அமலாக்கத் துறையில் தமிழக எம்.பி.,க்கள் சிலர் சிக்கியுள்ள தகவலும் சபாநாயகருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (20)

  • BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்

    தமிழக எம்.பி.காலில் அதிகம் கேஸ் உள்ளவன் அந்த முதுகு எலும்பு இல்லாத தி.ஆர். பாலு கனிமொழி ராசா திருமா போன்றவர்கள் பெயர் தான் அதிக வழக்குகளில் மாட்டி உள்ளனராம்.

  • DVRR - Kolkata,இந்தியா

    ஊழல் இல்லாமல் நானில்லை எனக்கொரு ஊழல் இருக்கின்றது என்றும் அது என்னை தாங்குகின்றது தினம் தினம் ஊழல்?? எதிலும் எப்படியும் ஊழல்??? பேச்சிலும் ஊழல் செயலிலும் ஊழல். மிகச்சரியான உதாரணம் இதோ "இந்து சமய அறநிலையத்துறை மூலம் ரூ.1,789 கோடி கோவில் நிலங்கள் மீட்பு: அமைச்சர் சேகர்பாபு" இவர்கள் இப்படி பேசாவிட்டால் அதுவும் பத்திரிகையில் வராவிட்டால் அவர்கள் வீட்டில் அன்று ஐயோ ஐயோ ஐயோ இப்படி போயி பண்ணிட்டாரே என்று ஒரே ஓலமாக இருக்கும்

  • Saai Sundharamurthy A.V.K -

    தமிழகத்தின் மானமே போய் விட்டது. இதை விட வேறு என்ன அசிங்கம் திமுகவிற்கு இருக்க போகிறது.

  • Samathuvan - chennai,இந்தியா

    எந்த அரசியல்வாதி மேல கேஸுகள் இல்லை. பிரதம, உள்துறை மந்திரி மேலயும் தான் கேசு இருக்கு. இதுக்கு என்ன இப்ப.

    • DVRR - Kolkata,இந்தியா

      அந்த கேஸ் எதுக்கு???பாரத அன்னை சோனியாவின் கைங்கரியம்???

  • vpurushothaman - Singapore,சிங்கப்பூர்

    தியாகச் செம்மல்கள் தமிழகத்தில் அதிகமாயிட்டாங்க

Advertisement