dinamalar telegram
Advertisement

மெக்சிகோவில் பலியான இந்திய பெண் யார்?

Share
Tamil News
லாஸ் ஏஞ்சலஸ்:வட அமெரிக்க நாடான மெக்சிகோவின், துலும் நகரில் நேற்று முன்தினம் இரவு, இரண்டு போதை பொருள் கடத்தல் கும்பல்கள் இடையே மோதல் ஏற்பட்டது.


இரு தரப்பினரும் துப்பாக்கியால் சுட்டனர். அப்போது சாலையோர உணவகத்தில் அமர்ந்திருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணியர் மீது, குண்டுகள் பாய்ந்தன. இந்த சம்பவத்தில் இந்தியா மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் இறந்தனர்.

பலியான இந்திய பெண் குறித்து போலீசார் கூறியதாவது: இந்தியாவின் ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த அஞ்சலி ரையாட், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், சான் ஜோசில் 'லிங்டுஇன்' நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். சுற்றுலா பயண அனுபவங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வந்த இவர், அண்டை நாடான மெக்சிகோவின் துலும் நகர் சென்றுள்ளார்.


மறுநாள் தன் பிறந்த நாளை கொண்டாடவிருந்த அஞ்சலி ரையாட், நண்பர்களுடன் சாலையோர உணவகத்தில் அமர்ந்திருந்தபோது, போதை பொருள் கடத்தல் கும்பலின் துப்பாக்கி சண்டையில், குண்டு பாய்ந்து பலியானார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (5)

  • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

    அதீத சுதந்திரம் வேண்டுமென்று அமெரிக்கா செல்கிறார்கள். பாதுகாப்பு பெண்களுக்கு அதுவும் தனியாக இருக்கும் பெண்ணுக்கு எங்குள்ளது என்று சிந்தித்தறிந்து அங்கு செல்லவேண்டும். பொருளீட்ட எட்டு திக்கும் செல்ல வேண்டுமா? சரியான திக்கை நோக்கி செல்லவேண்டும். பொருளீட்டல் என்பது தொடர்ந்து வாழ் நாள் முழுதும் என்று அதன் பின் செல்லாமல் ஓரளவிற்கு வசதிகளை பெருக்கிக்கொண்டு தாய் நாட்டில் சேவை செய்ய அங்கேயே ஈட்டிய பொருளை கொண்டு வந்து அதை பெருக்கி அமைதியான நல்வாழ்வு வாழ கற்று கொள்ளவேண்டும். சவூதி அரேபியாவின் ஏதாவது ஒரு சிறிய நகருக்கு சென்று அங்கு அரசு வேலை அல்லது மிக பெரிய தனியார் நிறுவனங்களில் வேலைக்கு சென்று பொருளீட்டலாம். சேமிப்புக்கள் பெருகும். செலவுகள் குறைவு. பாதுகாப்பான தேசம். பெண்கள் மீதான கூடுதல் கட்டுப்பாடுகள் என்பது பாதுகாப்பு விஷயத்திற்காக கொணரப்பட்டது. இப்போது நிறைய நீக்கி இருக்கிறார்கள். இரண்டு மூன்று வருடங்கள் வேலை செய்து பொருளீட்டி தாயகம் திரும்பி வாழலாம். போதுமென்ற நிறைவான வாழ்க்கை அமைதிக்கும் அன்பிற்கும் உத்திரவாதம் நல்கும்.

Advertisement