dinamalar telegram
Advertisement

தமிழகத்தை விட மற்ற மாநிலங்களில் கட்டுமான பொருட்கள் விலை குறைவு: பழனிசாமி

Share
சென்னை:தமிழகத்தை விட மற்ற மாநிலங்களில் கட்டுமான பொருட்கள் விலை குறைவு என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (அக்.,23ம் தேதி) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தி.மு.க. தேர்தல் வாக்குறுதி எண்: 468ல் முக்கியமான கட்டுமானப் பொருட்களான சிமென்ட், கம்பி, செங்கல், மணல், மரம் போன்ற பொருட்களை அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் கொண்டு வந்து பொதுமக்களுக்கு நியாயமான விலையில் கிடைத்திடச் செய்வோம் என்று கூறியுள்ளனர்.
அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் கட்டுமானப் பொருட்கள் விலை கட்டுக்குள் இருந்தது. தி.மு.க., ஆட்சி பொறுப்பெற்ற பின் ஜூன் 2021 முதல் கட்டுமானப் பொருட்கள் விலை எந்தளவு உயர்ந்து கட்டுமானத்தொழிலே பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை சட்டசபையில் கவர்னர் உரையின் போதே குறிப்பிட்டேன்.

தற்போது சிமென்ட் ஒரு மூட்டை 370ல் இருந்து 470 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல், ஒரு யூனிட் எம்.சாண்ட் 3,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாகவும், ஒரு யூனிட் ஜல்லி 2,000 ரூபாயிலிருந்து 3,800 ரூபாயாகவும், ஒரு டன் கம்பி 48,000 ரூபாயிலிருந்து 78,000 ரூபாயாகவும், ஒரு லோடு செங்கல் 18,000 ரூபாயிலிருந்து 29,000 ரூபாயாகவும், ஒரு லோடு கிராவல் மண் 600 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாகவும், மரங்கள் உச்சபட்சமாக விலை உயர்ந்துள்ளது.

ஒரு சதுர அடி வீடு கட்டுவதற்கு தனியார் பொறியாளர்கள் 2,200 ரூபாயிலிருந்து 3,100 ரூபாயாக அதிகரித்துள்ளது. மற்ற கட்டுமானப் பொருட்களின் விலைகளும் தமிழகத்தை விட மற்ற மாநிலங்களில் 30 சதவீதம் வரை குறைவாகவே உள்ளன.

மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் அதிகளவில் சிசென்ட் உற்பத்தியாகிறது. ஆனால், இங்கு தான் அதிக விலைக்கு சிமென்ட் விற்கப்படுகிறது. ஏழை, எளிய, நடுத்தர மக்களின் சொந்த வீடு கனவு கானல் நீராக போனது.

கட்டுமான தொழிலில் ஈடுபடும் கொத்தனார், சித்தாள்கள், தச்சு வேலை செய்பவர்கள், வியாபாரிகள் என இத்தொழிலை நம்பியுள்ளவர்கள் கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

தேர்தல் சமயத்தில் தி.மு.க.,அளித்த வாக்குறுதிகளின்படி, சிமென்ட், கம்பி, செங்கல், மணல் மற்றும் மரம் போன்ற முக்கியமான கட்டுமானப் பொருட்களை அத்தியாவசியப் பட்டியலில் இணைத்து பொதுமக்களுக்கு நியாயமான விலையில் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்,
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (11)

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  ஆட்சிப்பீடத்தில் அமரும் முன்னரே வேகமாக கமிஷனுக்கு ஏற்பாடு செய்து விட்டபின் என்னதான் சொன்னாலும் நடவடிக்கை இருக்காது.

 • பச்சையப்பன் கோபால் புரம். -

  அட !! எங்கு விலை குறைவோ! அங்கேயே வீட்டை கட்டிக் கொள்ள வேண்டடயதுதானே!!! இல்லாவிட்டால் அங்கே கட்டி லாரியில் ஏற்றி இங்கு கொண்டு வந்து வைத்து விட வேண்டியதுதானே!!

 • RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ

  தலைப்பில் குறிப்பிட்டபடி இல்லாமல் செய்தியில் அதற்கு மாறாக உள்ளது

 • Narayanan - chennai,இந்தியா

  After getting power, need more money to loot , they had called the industrialist and asked money. In turn they ask this government to allow to increase the prices. That was permitted . Now the same way the provision shop owners also told to increase the prices and give more and more donation to DMK. For that convenient only Vikaramaraja's son being inducted into the MLA . Now he is collecting and donates lot of money to DMK . We are as public only suffer because of price increases.

 • ஆரூர் ரங் -

  சிமெண்ட் கொள்ளைக் கூட்டமே திமுகவின் அடிமைகள்தான். அவர்களின் தலைவன் குடும்ப டிவி சானல் துவக்க. 60 கோடி கொடுத்து உதவியவர்.😝 நன்றிக்கடனா சிமெண்ட் விலையை ஏற்ற ஊக்கப்படுத்தி இருப்பர் திராவிஷ அரசியலில் இதெல்லாம் ஜகஜம்

Advertisement