dinamalar telegram
Advertisement

நடிகர் விவேக் இறப்புக்கு தடுப்பூசி காரணம் அல்ல; மத்திய நோய் தடுப்பு பிரிவு

Share
சென்னை : 'நடிகர் விவேக், கொரோனா தடுப்பூசியால் உயிரிழக்கவில்லை. உயர் ரத்த அழுத்தம் காரணமாக, மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்' என, மத்திய நோய் தடுப்பு பிரிவு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்தும்நோக்கத்தில், நடிகர் விவேக், ஏப்., 15ம் தேதி, சென்னை ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தி கொண்டார். அப்போது, 'அச்சப்படாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்' எனவும் வேண்டுகோள் விடுத்தார். விவேக் தடுப்பூசி செலுத்திக் கொண்ட அடுத்த நாள், திடீர் மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்தார்.

இதற்கிடையே, விழுப்புரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர், நடிகர் விவேக் தடுப்பூசி செலுத்திக் கொண்டதன் காரணமாக தான் உயிரிழந்ததாக, டில்லியில் உள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பான வழக்கில், ஆணையத்தில், மத்திய சுகாதாரத் துறையின் நோய் தடுப்பு மற்றும் தடுப்பூசி ஆய்வு குழு வல்லுனர்களின் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதில், நடிகர் விவேக், உயர் ரத்த அழுத்தம் காரணமாக, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் வாயிலாக, விவேக் மரணத்திற்கு தடுப்பூசி தான் காரணம் என்ற புகாருக்கு, மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (27)

 • M Selvaraaj Prabu - Gaborone,போஸ்ட்வானா

  //ஏப்., 15ம் தேதி// நடந்த விசயத்தித்திற்கு ஆறு மாதம் கழித்து பதில் சொல்லி இருக்கிறார்கள்.

  • Visu Iyer - chennai,இந்தியா

   ஜெயலலிதா இறந்ததாக சொல்லி எத்தனை வருஷமாச்சு.. இதுவரை மத்திய உள்துறை அமைச்சகம் ஏதாவது வாய் திறந்து இருக்கிறதா...? ஆக இதில் இருந்து தெரிவது என்ன என்றால்.........................................?

 • Rama - London,யுனைடெட் கிங்டம்

  சர்வதேச விஞாணிகளால் ஒப்புகொள்ளபட்ட தடுப்பூசியை சிலர் பொய்யாலும் புரளியாலும் முட்டாள்தனத்தாலும் தவறாய் பேசுகிறார்கள். அவர்கள் அப்படியே இருக்கட்டும். டார்வின் தியரிப்படி முட்டாள்கள் தானாகவே அழிந்துபோவார்கள் ( இம்முறை கொரோனா மூலமாக)

  • Visu Iyer - chennai,இந்தியா

   அன்றைய சித்தர்களை விட இன்றைய விஞ்ஞாணிகள் சிறந்தவர்கள் என்று சொல்றீங்களா? சரி.. அப்படின்னா இந்த விஞ்ஞானிகள் என்று நீங்கள் சொல்லும் அவர்கள் இன்னும் சாகாம இருக்க எதுவும் கண்டு பிடிக்கவில்லை...? யோசித்து பாருங்கள்.. ஒருவரே ஒரு பிரதமர் பதவியில் அல்லது முதல்வர் பதவியில் தொடர்ந்து இருக்க அரசியல் விஞ்ஞானம் கண்டு பிடித்து வைத்து இருக்கலாம்.. ஆனால் மனித உயிர் வேறு மாதிரி.. புரிந்தவர்கள் புத்திசாலிகள்..

 • Vena Suna - Coimbatore,இந்தியா

  அலர்ஜி என்பது எல்லா தடுப்பூசிகளும் ஏற்படும்,. அந்த தடுப்பூசி போட்ட உடனே விவேக்கிற்கு ரத்த அழுத்தம் ஏறி இருக்கக்கூடும்,. அதனால் நமக்கு என்ன நடந்தது என்று தெரியாது .ஆயினும் விவேக் ஏற்கனவே உயர் ரத்த அழுத்தம் மற்றும் சில நோய்களுக்கு மருந்துகள் சாப்பிட்டு வந்தார் என்றும் ஆனால் அதனை முறையாக சாப்பிடாமல் நிறுத்திவிட்டார் என்றும் ஒரு செய்தியை கேட்டுள்ளேன் பலர் அவர் போட்ட கோவாக்ஸின் தடுப்பூசியை போட்டு யாருக்கும் எந்த பக்கவிளைவும் ஏற்படவில்லை என்பதும் கவனிக்க வேண்டியது. நானும் அந்த கோவாக்ஸின் தான் போட்டு உள்ளேன் . பக்கவிளைவு எதுவும் தரவில்லை .

  • Visu Iyer - chennai,இந்தியா

   கோரனாவால் இறந்தவர்கள் எத்தனை பேர் அவர்களின் கிட்னியை கண்களை இறந்த பிறகு தானமாக எடுத்து கொடுத்து இருந்தால் ஐந்து கோடி ரூபாய்க்கு விலை போகும் கிட்னியை எத்தனை கிட்னி நோயாளிகள் பெற்று இன்று நலம் பெறுவார்கள்.. இது தான் மருத்துவ விஞ்ஞானம் ... புத்திசாலிகள் புரிந்து கொள்வார்கள்..

 • R S BALA - CHENNAI,இந்தியா

  PLEASE DON'T REPEAT THE SAME COMMENT.😞

 • ஆரூர் ரங் -

  தடுப்பூசி பற்றி புரளி பொய் செய்தி பரப்புவது தண்டனைக்குரிய குற்றம். 😡 தி.மு.க அரசு உள்நோக்கதுடன் நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. இதுவு‌ம் சட்டப்படி குற்றமே

Advertisement