dinamalar telegram
Advertisement

பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்த திட்டம்; ஜம்மு காஷ்மீரில் அதிரடி சோதனை

Share
புதுடில்லி-லஷ்கர் - இ -தொய்பா, ஜெய்ஷ் - இ - முகமது மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்புகள் மற்றும் அதன் துணை அமைப்புகள், ஜம்மு - காஷ்மீர் மற்றும் நாட்டின் பல முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.இதையடுத்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் ஜம்மு - காஷ்மீரின் பல இடங்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ஜம்மு - காஷ்மீரில் சமீபத்தில் பொதுமக்கள்பலர், பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். இதனால் பொதுமக்களிடையே பீதி நிலவி வருகிறது. இதையடுத்து, பயங்கரவாதிகளை தேடும் வேட்டையில் பாதுகாப்பு படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.இது குறித்து, ஜம்மு - காஷ்மீர் ஐ.ஜி., விஜய குமார் கூறுகையில், ''கடந்த இரண்டு வாரங்களில் 15 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். தேசிய புலனாய்வு அதிகாரிகள் அக்., 13ல் நடத்திய சோதனையில், ஸ்ரீநகரில் ஐந்து பயங்கரவாதிகள் பிடிபட்டுள்ளனர்,'' என்றார். இதற்கிடையே, ஜம்மு - காஷ்மீர் முழுதும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (4)

 • பேசும் தமிழன் -

  நாட்டுக்கு எதிராக பேசுபவர்கள். செயல்படுபவர்கள்... இந்த நாட்டுக்கு பாரம்... அவர்கள் இருப்பதும் இல்லாமல் இருப்பதும் ஒன்றே.... அவர்கள் மீது மென்மையான அணுகுமுறை பார்க்காமல் சுட்டு தள்ள வேண்டும்

 • தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா

  இஸ்ரேல் சிகிச்சைதான் மூர்க்கர்களுக்கு சரிவரும். இஸ்ரேலின் ஒரு ராணுவ வீரரை கொன்றால் பதிலுக்கு எதிரிகள் 10 பேரையாவது துவம்சம் செய்யும் இஸ்ரேல். அதுபோல காஸ்மீரிலும் தொடர்ந்து நடந்தால்தான் பக்கிகள் வாலை சுருட்டி பின்னாடி ஓடுவானுங்க.

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  இஸ்ரேலிடமிருந்து பெறப்பட்ட ட்ரோன்களால் முழுதும் கண்காணிக்கப்பட்டு கொண்டிருக்கிறது காஸ்மீரம். இருபக்கத்திலிருக்கும் காசுமீரும் முழுதும் அங்குலம் அங்குலமாக கண்காணிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. ஏதேனும் அசம்பாவிதங்களை செய்தால் அவர்கள் நிர்மூலம் செய்யப்படுவார்கள். அச்சமில்லாமல் இயங்கும் அரசு இன்றைய அரசு. ஊழலுக்கு முக்கியத்துவம் கொடுத்தது அரசுகள் மாறிப்போய் தேசத்தின் மாட்சிமைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால் காஸ்மீரம் அமைதிமார்க்கத்தின் பெயரின் பிடியிலிருந்து நல்வழி மார்க்கத்தில் இணையும் என்பதில் சந்தேகமில்லை.

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  லூசுங்க இப்போதிருக்கும் அரசு பற்றியும் காஸ்மீரத்தை பற்றிய அவர்களின் எண்ணத்தை பற்றியும் அறியாமல் விட்டில் பூச்சிகளை போல மடிய இருக்கிறார்கள். பாகிஸ்தான் சீனாவின் பிராக்சி ராணுவம் போல தீவிரவாதம் செய்து கொத்து கொத்தட்டை அழிந்து விடப்போகிறார்கள் அவர்கள். நல்ல பாடம் தக்க பாடம் உடனடியாக புகட்டப்படும் அவர்களுக்கு. ஐம்பத்தாறு இன்ச் என்று கிண்டலித்தார்கள், இப்போது பல ஆயிரம் இருக்கும் என்று நடுங்குகிறார்கள். மோடியை டார்கெட் செய்து கிண்டலடித்தார்கள். இப்போது சட்டங்கள் சரியாக்கப்பட்டு நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படுவதால் தேசத்தின் தலைவனை குறை சொல்வது குற்றம் என்று அறிந்து அஞ்சி ஒதுங்கி இருப்பது தெரிகிறது. எதோ ஒருசிலர் இந்து பெயர்கலில் மறைந்து கொண்டு ஈனஸ்வரத்தில் கருத்துக்களை வெளியிடுவார்கள். வாட்ஸாப்ப் அமைதியாகி விட்டது. எதிர்மறை கருத்துக்களை பரப்புவது இல்லை. சிலரின் ஐ டி விங் அமைதிகாக்கும் நேரம் என்று நீண்ட ஓய்வில் இருக்கிறது. இஸ்ரேலிடமிருந்து தருவிக்கப்பட்ட ட்ரோன்கள் முழுதும் காஸ்மீரத்தை அங்குலம் அங்குலமாக அலசி வைத்திருக்கிறது. தொடர் கண்காணிப்பில் இருக்கிறது. காஸ்மீர் என்றால் அங்குள்ள முசாபராபாத் கில்கிஸ்ட் பகுதிகள் முழுதும் கூட இஸ்ரேலிய ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்பட்டுவிட்டது. இப்போதெல்லாம் நேரடி மோதல் துப்பாக்கிக்கு எதிர் துப்பாக்கி என்று எதிர் தாக்குதல் இல்லை. கூட்டமாக கட்டிடத்தில் ஒழிந்து கொன்றிருக்கிறானா அந்த தீவிரவாதி மதவாதி, கட்டிடத்தை ஏவுகணை வைத்து கூட்ட்டமாக காலி செய்துவிடுகிறது நமது ராணுவம் இப்போது. உத்திரவுகள் வரவேண்டும் என்று காத்திருக்காதீர்கள். உங்களின் சேவை மகத்துவம் புனிதமானது. தீர்மானித்து எது சரியோ அதை செய்யுங்கள் என்று ராணுவம் ராணுவமாகவே செயல்பட அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ராணுவம் கொன்றால் அது வதம்தான். காஸ்மீர் மத்திய அரசின் நேரடி ஆளுகையில் இருக்கிறது. அடுத்த ஆண்டு சுதந்திர தினத்திற்கு கன்னியாகுமரியிலிருந்து மாணவிகளை சுற்றுலாவிற்கு காஸ்மீரத்திற்கு நமது சுற்றுலாத்துறை இலவசமாக அழைத்து செல்வதை கண்டுகளிப்போம்.

Advertisement