dinamalar telegram
Advertisement

மலையேற்ற வீரர்கள் 8 பேர் உட்பட 11 பேர் உடல்கள் மீட்பு

Share
உத்தரகாசி:உத்தரகண்டின் உத்தரகாசியில் உள்ள ஹர்சில்லில் இருந்து ஹிமாச்சல பிரதேசத்தின் சிட்குல் வரை மலை ஏற்றம் செய்வதற்காக, எட்டு பேர் அடங்கிய மலை ஏற்ற வீரர்கள், மூன்று சமையல்காரர்களுடன் சமீபத்தில் புறப்பட்டனர்.
இவர்கள் 11 பேரும் கடந்த 18-ம் தேதி திடீரென காணாமல் போயினர். அவர்களை தேடும் பணியில் மாநில பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர்.


விமானம் வாயிலாக தேடுதல் வேட்டை நடந்தது. அப்போது 4,500 அடி உயரத்தில் இருவர் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. மற்றவர்களை தேடும் பணியின் போது மேலும் சில உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து மலையேற்ற வீர்ர்கள் 8 பேரும் , உடன் சென்ற மூவர் என 11 பேரும் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. 11 பேர் உடல்களும் மீட்கப்பட்டன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Venkatakrishnan - Mumbai,இந்தியா

    காணததைக் கண்டவர்கள் போல் அபாயத்தையும் மீறி மலையேற்றம் செய்யும் இந்திய இளைஞர்கள் தங்கள் நாட்டில் இதெற்கெல்லாம் தொழில்நுட்ப வசதியும், பாதுகாப்பு கட்டமைப்பும் இல்லை என்பதைப் எப்போதுதான் புரிந்து கொள்வார்களோ...?

Advertisement