dinamalar telegram
Advertisement

பின்னலாடை தொழிலாளர்களுக்கு போனஸ்! இன்று முதல் பட்டுவாடா துவக்கம்

Share
Tamil News
திருப்பூர்:திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், இன்று முதல் தொழிலாளர்களுக்கு போனஸ் பட்டுவாடாவை துவக்குகின்றன.திருப்பூரில், உள்நாட்டு, ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனங்கள்; நிட்டிங், டையிங், ரைசிங், பிரின்டிங், எம்ப்ராய்டரி, எலாஸ்டிக், காஜா பட்டன், செக்கிங், அயர்னிங் என பல்வேறு வகை நிறுவனங்கள் உள்ளன.இந்நிறுவனங்களில், தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் வெளிமாநில தொழிலாளர் எட்டு லட்சம் பேர் பணிபுரிகின்றனர்.
இந்த தொழிலாளர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், தீபாவளியையொட்டி போனஸ் வழங்கப்படுகிறது. வரும் நவ., 4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.பனியன் தொழிலாளர்களுக்கு, வாரம்தோறும் சனிக்கிழமை சம்பளம் வழங்கப்படுகிறது. தீபாவளிக்கு இன்னும் பத்து நாட்களே உள்ளநிலையில், பின்னலாடை நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கு, வாரச்சம்பளத்துடன் சேர்த்து இன்று முதல் போனஸ் பட்டுவாடாவை துவக்குகின்றன.
பெரும்பாலான நிறுவனங்கள், தொழிலாளர் வங்கி கணக்கில் போனஸ் தொகையை சேர்க்கின்றன; குறு, சிறு நிறுவனங்கள், பழைய வழக்கப்படி, தொழிலாளர் கைகளில் நேரடியாக போனஸ் தொகையை வழங்குகின்றன.பின்னலாடை துறையினர் கூறியதாவது:திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளருக்கு, நாளை(இன்று) முதல், தீபாவளி போனஸ் பட்டுவாடா துவங்குகிறது. வரும் 30ம் தேதியுடன், போனஸ் பட்டுவாடா நிறைவடையும். ஒவ்வொரு நிறுவனமும், தங்கள் நிதி நிலைக்கு ஏற்ப, சிறப்பான விகிதத்தில், போனஸ் பட்டுவாடா செய்யும்.கொரோனாவுக்குப்பின், தற்போது, வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து பின்னலாடை தயாரிப்புக்கு அதிகளவு ஆர்டர்கள் திருப்பூர் நிறுவனங்களுக்கு கிடைத்துள்ளது.
குறித்த காலத்துக்குள் ஆடைகளை அனுப்புவதற்காக உற்பத்தி பணிகள் வேகமாக நடந்துவருகிறது. வரும் நவ., 2 முதல் தொழிலாளருக்கு பண்டிகை விடுமுறை அளிக்கப்பட உள்ளது.கொரோனா ஊரடங்கு காலத்தில் சொந்த ஊர் சென்ற பனியன் தொழிலாளர்கள், தற்போதுதான் திருப்பூர் திரும்பியுள்ளனர். அதனால், இந்தாண்டு தீபாவளிக்கு, மிக குறைந்த தொழிலாளரே சொந்த ஊர் செல்ல வாய்ப்பு உள்ளது.எனவே, பண்டிகை முடிந்து ஒரு வாரத்துக்குள், ஆடை தயாரிப்பு பணிகள் மீண்டும் வேகம்பெற்றுவிடும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
ஊரடங்கு காலத்தில் சொந்த ஊர் சென்ற பனியன் தொழிலாளர்கள், தற்போதுதான் திருப்பூர் திரும்பியுள்ளனர். அதனால், இந்தாண்டு தீபாவளிக்கு, மிக குறைந்த தொழிலாளரே சொந்த ஊர் செல்ல வாய்ப்பு உள்ளது. எனவே, பண்டிகை முடிந்து ஒரு வாரத்துக்குள், ஆடை தயாரிப்பு பணிகள் மீண்டும் வேகம்பெற்றுவிடும்
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement