கோவை;நமது ஏ.டி.எம்., கார்டு நம்மிடம் இருக்க, நம் கணக்கில் இருந்து பணம் திருடப்படும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்துள்ளதாக, சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கின்றனர்.நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பல்வேறு நுாதன முறைகளில், வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடி வருகின்றனர்.
இரு தினங்களுக்கு முன் கணபதியை சேர்ந்த விதவை ஒருவர், வீட்டு வாடகை பணம் எடுக்க ஏ.டி.எம்., சென்றார். ரூ.20 ஆயிரம் வைத்திருந்த அவரது கணக்கில், வெறும் ரூ.17 தான் இருந்துள்ளது.இது போல், தங்களது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டது கூட தெரியாமல், பல மாதங்கள் கழித்து பணம் எடுக்க செல்லும் போது, கணக்கில் ஏதுமில்லாததை அறிந்து அதிர்ச்சியடைகின்றனர். குறிப்பாக, முதியவர்களின் ஓய்வூதிய பணத்தையும், படிப்பறிவு இல்லாத நபர்களையும் குறி வைத்து பணம் திருடப்படுகிறது. இதற்கு, ஏ.டி.எம்.,களில் தெரியாத நபர்களிடம், எண்ணை கூறுவதே காரணம்.
மாநகர சைபர் க்ரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா கூறியதாவது:தேசிய குற்றப்பதிவேடு அமைப்பின் தகவல்படி தமிழகத்தில், 55 சதவீதம் சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளன. கோவையிலும் கடந்த சில நாட்களாக, வங்கி கணக்கில் இருந்து பணம் திருடுவது அதிகரித்துள்ளது.அதனால், வங்கி கணக்கு விபரங்களை, அவ்வப்போது சரிபார்த்துக் கொள்ள வேண்டும். ஏதாவது ஒரு வழியில், தங்கள் வங்கி கணக்கு விபரங்களை வெளியிடுவதால், இது போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.
முதியோரின் ஓய்வூதிய பணத்தை குறிவைத்து, திருடும் சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன. நம் ஏ.டி.எம்.,கார்டுகள் நம்மிடம் பத்திரமாக இருக்க, பணம் திருடப்படுகிறது. முன் எப்போதாவது, உதவி கோரி யாரிடமாவது ஏ.டி.எம்., எண்ணை பகிர்ந்திருப்பர்.இதனால், முதியோர் உள்ள வீடுகளில் இருக்கும் இளைஞர்கள், கவனமாக இருக்க வேண்டும். ஏ.டி.எம்., குறியீட்டு எண்ணை அவ்வப்போது மாற்ற வேண்டும். ரகசிய குறியீட்டு எண்ணை, கார்டின் பின்புறம் எழுதுவதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!