dinamalar telegram
Advertisement

ஜெ., முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் மரணம் வழக்கு: நண்பரிடம் விசாரணை

Share
ஆத்தூர் : ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் மரணம் தொடர்பாக, ஆத்தூரில் வசிக்கும் அவரது நண்பரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கொலை கொள்ளை சம்பவம் நடந்தது. அதன் தொடர்ச்சியாக ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கார் மோதி உயிரிழந்தார். இதுதொடர்பாக ஆத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் விசாரணை நடைபெற்று முடிந்தது. கனகராஜ் உயிரிழந்த சம்பவம் சாலை விபத்து என்று கூறப்பட்ட நிலையில் கனகராஜ் அண்ணன் தனபால் அதை மறுத்தார். கனகராஜின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும் தனபால் கூறியிருந்தார்.

இந்நிலையில் கோடநாடு எஸ்டேட் கொலை கொள்ளை சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை சூடு பிடித்துள்ள நிலையில், கனகராஜ் மரணம் தொடர்பாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் நீதிமன்ற அனுமதி பெற்று மீண்டும் விசாரணையை நேற்று தொடங்கினார். இது தொடர்பாக ஆத்தூர் டிஎஸ்பி ராமச்சந்திரன் மற்றும் போலீசார் விசாரணை செய்து வந்தனர் .

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க தனிப்படை போலீசார் வந்தனர். பின்னர் இவர்கள் ஆத்தூர் அருகே உள்ள வடக்கு காடு சக்தி நகர் பகுதியில் வசிக்கும் கனகராஜின் நண்பர் ரமேஷ் வீட்டிற்கு இன்று காலை பத்துக்கும் மேற்பட்ட போலீசார் வந்தனர் . பின்னர் சுரேஷின் இல்லத்திற்குள் தனிப்படை போலீசார் சென்று விசாரணை செய்தனர். இதனால் ஆத்தூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (4)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    அடுத்த 'கன்னித்தீவு' ரெடி

  • சீனி - Bangalore,இந்தியா

    50வருட அதிமுக கட்சியை, சின்னம்மாவை வைத்து சின்னாபின்னமாக்குவது தான் கட்டுமர கட்சியின் திட்டம். முதல் 100நாளில் தேர்தலை செலவை எடுத்தாச்சு, எதிர்கட்சிகளை இல்லாமல் ஆக்குவது தான் தற்போதைய ஆட்சியின் அடுத்த நூறு நாள் திட்டம்.

  • sundarsvpr - chennai,இந்தியா

    ஆண்டவனைத்தான் ஆதியும் அந்தமும் இல்லாதவன் என்று கூறுவர். இது பொய்த்து விடும் தற்போது நடத்தும் விசாரணைகளால். வேண்டாதவைக்கு எல்லாம் கருது கணிப்பு செய்யப்படுகிறது. இதற்கு நடத்தினால் விசாரணை அர்த்தமற்றது என்று கணிப்பு இருக்கும்.

  • amuthan - kanyakumari,இந்தியா

    அந்த இரண்டு இட்லி மற்றும் ஒரு இட்லி பற்றி விசாரித்தால் நல்லது

Advertisement