dinamalar telegram
Advertisement

மேட் இன் இந்தியா பொருட்களை வாங்கும் நடைமுறை வேண்டும்: மோடி

Share
புதுடில்லி: ‛மேட் இன் இந்தியா' திட்டத்தின்கீழ் எளிய மனிதர்களின் தயாரிப்புகளை வாங்குவதிலும் ஆர்வத்தை வளர்த்துள்ளதாகவும், இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை இந்திய மக்கள் வாங்க வேண்டும் என்ற நடைமுறையை கொண்டுவர வேண்டும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று (அக்.,22) ஆற்றிய உரையின் போது பேசியதாவது: 100 கோடி தடுப்பூசி சாதனையை பேசும் இந்த தருணத்தில் பொருளாதார வளர்ச்சி பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளை சேர்ந்த வல்லுநர்களும் இந்திய பொருளாதாரத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்தனர். உள்நாடு மற்றும் வெளிநாட்டில் உள்ள நிபுணர்கள், இந்திய பொருளாதாரம் குறித்து நேர்மறையான கருத்துகளை தெரிவிக்கின்றனர். இன்று, இந்தியாவிற்கு சாதனை படைக்கும் அளவுக்கு முதலீடு வருவதுடன், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பும் அதிகரித்துள்ளது.

முந்தைய காலங்களில் நமது நாட்டில் வெறும் கோஷம் மட்டுமே போடப்பட்டன. ஆனால், தற்போது அனைவரும் ‛மேட் இன் இந்தியா' குறித்து பேசுகிறோம். ‛மேட் இன் இந்தியா' திட்டத்தின்கீழ் எளிய மனிதர்களின் தயாரிப்புகளை வாங்குவதிலும் ஆர்வத்தை வளர்த்துள்ளோம். இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை இந்திய மக்கள் வாங்க வேண்டும் என்ற நடைமுறையை கொண்டுவர வேண்டும்.

100 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டதால் மக்கள் மனதில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. கொரோனா தாக்கத்தால் துவண்டு விடாமல் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தினோம். கொரோனா எனும் பெரும் துயரத்தை சந்தித்த நாம் எந்த துயரையும் சந்திக்கும் வலிமை பெற்றுள்ளோம்.

விவசாயம், சுற்றுலா, தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தினோம். விவசாயிகளிடம் நேரடியாக விளைபொருள் பெறப்படுகிறது. வருங்காலங்களில் மிகவும் கவனமுடன் பண்டிகைகளை கொண்டாட வேண்டும். வீட்டில் இருந்து வெளியேறும்போது காலணி அணிவதுபோல், முகக்கவசம் அணிவதையும் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

முதல் டோஸ் தடுப்பூசி போடாதவர்களுக்கு, முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். தடுப்பூசி போட்டு கொண்டவர்கள், மற்றவர்களை ஊக்குவிக்க வேண்டும். கோவிட்டை தடுப்பு நடவடிக்கைகளில், நமது முதல்கட்டமாக, அதில் மக்களை பங்கேற்க வைத்தோம். விளக்கு ஏற்றியும், கருவிகளை இசைத்தும் மக்கள் பங்கேற்றனர். இவை கோவிட்டை ஒழித்துவிடுமா என சிலர் கேள்வி எழுப்பினர். அந்த முயற்சிகள் எல்லாம் மருத்துவத்துறைக்கு உற்சாகத்தை அளித்தது. இவ்வாறு அவர் பேசினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (24)

 • Vena Suna - Coimbatore,இந்தியா

  முக்கியமாக இத்தாலிய பொருட்கள் எரிக்க பட வேண்டும் அவரின் மன ஓட்டம்

 • Venkatakrishnan - Mumbai,இந்தியா

  புத்தி சொல்றாராமா... உமது சங்கிக் கூட்டம் வேண்டும் என்றால் இதை நம்பும், அறிவுள்ளோர் அல்ல... உமது மாண்ட் பிளாங்க் பேணா என்ன குஜரத்திலா செய்தார்கள்...? அல்லது உமது ஆடையும் கண் கண்ணாடியும் உள்நாட்டில் செய்தார்களா...? சும்மா வடை சுட்டுகிட்டு...

 • Venkatakrishnan - Mumbai,இந்தியா

  அதுக்கு மொதல்ல பொருளாதாரம் சீரடைய வேண்டும்... உமது கூட்டத்தின் கோமாளிக் கொள்கைகளால் நாட்டைவிட்டு லட்சக்கணக்கில் பொறியாளர்களும், தொழில் அதிபர்களும், அறிவியல் நிபுணர்களும் வெளிநாடுகளுக்கு புலம் பெயருகிறார்கள்... இந்த லட்சணத்தில் எப்படி தரமான பொருட்கள் குறைந்த விலையில் உள்நாட்டில் உற்பத்தி செய்ய முடியும்...? சும்மா வடை சுட்டுகிட்டு....

 • அப்புசாமி -

  நம் நாட்டு தயாரிப்புகளை நாம வாங்கணுமாம். அயல்நாடுகளுக்கு ஏற்றுமதியும் பண்ணனுமாம். உலகநாடுகள் வாயில் விரலை வெச்சுக்கிட்டு நம்ம கிட்டே வாங்குமாம்.

 • K.n. Dhasarathan - chennai,இந்தியா

  அப்புறம் ஏன் பிரான்ஸிடம் விமானம் வாங்கினீர்கள்? நம் நாட்டிலே ஏன் தயார் பண்ணவில்லை? முடியாது என்று ஹச்.எ.ல் நிறுவனம் சொன்னதா ? அல்லது உங்கள் உபதேசம் ஊருக்கு மட்டும் தானா ?.

Advertisement