dinamalar telegram
Advertisement

வேறுபாடு பார்க்காமல் கோவிட் தடுப்பூசி; பெரும் சாதனைக்கு ஒற்றுமையே சான்று ! பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை

Share
புதுடில்லி: கடைக்கோடி மக்களுக்கும் கோவிட் தடுப்பூசி போய்ச்சரே வேண்டும் எனவும், தடுப்பூசி போடுவதில் வித்தியாசம் பார்க்கப்படவில்லை , வி.ஐ.பி., கலாசாரம் தவிர்க்கப்பட்டது. தவறான விமர்சனங்கள் தகர்த்தெறிந்து , அறிவியல் ரீதியில் தடுப்பூசி பணியை சிறப்பாக செய்து முடித்துள்ளோம் என பிரதமர் நாட்டு மக்களுக்கு இன்று ஆற்றிய உரையின் போது குறிப்பிட்டார்.

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி இயக்கத்தில் 100 கோடிக்கும் மேற்பட்ட, 'டோஸ்' வழங்கி, நம் நாடு புதிய சாதனையை நேற்று படைத்தது. உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளும், உலக நாடுகளும் பாராட்டு தெரிவித்தன.

இந்நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று ( அக்.,22) ஆற்றிய உரையில் அவர் கூறியதாவது:
கோவிட் தடுப்பூசியில் மைல்கல்லை கடந்த நேற்று, நமக்கு வரலாற்று சிறப்பு மிக்க நாளாகும். 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா சாதனை படைத்தது. இதன் பின்னால், 130 கோடி மக்களின் சக்தி இருக்கிறது. இந்தியா ஒரு சக்திமிக்க நாடு என்பதை மீண்டும் நிரூபணமாக்கியது. இதற்காக நாட்டு மக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இந்த வெற்றியானது நமது அனைவரது வெற்றியாகும். இந்த சாதனை, தடுப்பூசி தொடர்பான ஒவ்வொரு கேள்விக்கும் பதில் அளித்து கொண்டுள்ளது. புதிய இந்தியாவின் ஆன்மாவிற்கு சான்றாக இது அமைந்துள்ளது.


100 கோடி தடுப்பூசி என்பது வெறும் எண்ணிக்கை மட்டும் அல்ல. அது நாட்டின் வரலாற்றின் புதிய அத்தியாயத்தின் துவக்கம் ஆகும். எந்த கடின இலக்கையும் வெற்றிகரமாக இந்தியா நிறைவேற்றும் என்பதற்கு சான்றாகும். தனது இலக்கை அடைய தேசம் கடுமையாக உழைத்துள்ளது என்பதை காட்டுகிறது.

கோவிட், இந்தியாவிற்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது. கோவிட் பெருந்தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக சிலரிடம் சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், அவர்களுக்கு எல்லாம் இன்று நாம் பதில் அளித்திருக்கிறோம். நம் மீதான விமர்சனங்கள் தவறு என நிரூபித்துள்ளோம். நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் தடுப்பூசி திட்டம் சென்றடைந்துள்ளது. இதில் எந்தவித பாகுபாடும் காட்டப்படவில்லை. தடுப்பூசி திட்டத்தில் விஐபி கலாசாரம் பின்பற்றப்படவில்லை.ஏழை பணக்காரர்என எந்த பாகுபாடும் இன்றி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாடு ஒற்றுமையாக இருந்ததால், இந்த திட்டம் வெற்றி பெற்றது.
இந்தியா ஒரு மருந்து உற்பத்தி மையம் என்பதை உலகம் அங்கீகரித்துள்ளது. தொற்று நோய்க்கு எதிரான போரில் நாட்டின் ஒவ்வொருவரும் பங்கேற்றுள்ளனர். கோவிட்டிற்கு எதிரான போரில் நாட்டின் ஒற்றுமையை உலகிற்கு உணர்த்தி உள்ளோம்.அனைத்து விமர்சனங்களுக்கும் 100 கோடி தடுப்பூசி சாதனை பதிலளித்துள்ளது.

நமது தடுப்பூசி திட்டம் அறிவியல் சார்ந்து இருந்தது. ஒரு காலத்தில் தடுப்பூசிக்காக நாம் வெளிநாடுகளை எதிர்பார்த்து கொண்டிருந்தோம்.100 கோடி தடுப்பூசி சாதனையை எட்ட தொழில்நுட்பம் உதவியாக இருந்தது. அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதற்கு அரசு உறுதிபூண்டது. தற்போது இந்தியாவின் சாதனையை உலகம் கவனித்து கொண்டுள்ளது. குறைந்த கால கட்டத்தில் 100 கோடி தடுப்பூசி என்ற சாதனையை எட்டியுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் நேரடி ஒளிபரப்புபிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை, தினமலர் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (76)

 • Arulmurugan -

  100 kodi peril ethanai real fact about basic nature of people in degarpha gmail.country is common or not

 • அத்வைத் ராமன் - கலைஞர் கருணாநிதி நகர் ,இந்தியா

  மகிழ்ச்சியான செய்தி என்பதில் ஐயமில்லை.ஆனால், தடுப்பூசி அளிப்பது மாநிலங்களின் பொறுப்பு தான் எனக் கூறியதும், அரசுக்கு ஒரு விலை, மருத்துவ நிலையங்களுக்கு ஒரு விலை என நிர்ணயித்ததும், உச்ச நீதி மன்றத்திடம் குட்டு வாங்கி விட்டு அவசரம் அவசரமாக புதிய கொள்கையை அறிவித்ததும் நினைவிற்கு வருகிறதேநிலைமையின் கடுமையை உணர்ந்து முதலிலேயே செயல்பட்டிருந்தால் மனதார பாராட்டியிருக்கலாம்

 • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

  இதற்கு ஒரு மூன்று லட்சம் பேர் சாக வேண்டி இருந்தது, உச்ச நீதிமன்றம் தலையில் கொட்ட வேண்டி இருந்தது, மாநில அரசுகள் கெஞ்ச வேண்டி இருந்தது, கடைசில் பேரம் பேசி குறைந்த விலைக்கு மத்திய அரசிடமிருந்து வாங்க வேண்டி இருந்தது. கடைசியில் இவர்கள் அதை எங்கள் சாதனை என்று சொல்வதை கேட்க வேண்டி இருக்கிறது. வெட்க கேடு.

 • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

  நம்நாட்டிற்கே தேவை இருக்கும் போது தடுப்பூசிகளை கோடிக்கணக்கில் வெளிநாட்டிற்கு அனுப்பி பெருமையாக ஐ நா வில் பேசிய பெரும் தவறை செயல் இருந்திருந்தால் இந்த இலக்கை இன்னும் ஆறு மாதங்களுக்கு முன்பே செய்திருக்கலாம் , இது மக்களின் கூட்டு முயற்சி மோடி பெருமை கொள்ள ஏதும் பங்கு இல்லை

 • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

  கைத்தட்டி ஒளியேற்றியதால் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அல்லல் வராமல் இருந்து, துர் மரணம் அடையாமல் இருந்திருந்தால், லட்சக்கணக்கான மக்கள் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியாகாமல் இருந்திருந்தால் அதனை கைதட்டி ஒளியேற்றியதன் நல்ல விளைவு என்று கூறலாம். கிட்டத்தட்ட வலுக்கட்டாயமாக எல்லோரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்ற நெருக்கடியை தந்து 100 கோடியை எட்டியதை கைதட்டி ஒளியேற்றியதின் பலன் என்று பெருமை பேசுவது வேதனையான செயல்பாடு.

Advertisement